ஜய மங்க3ளம் நித்ய ஸு1ப4 மங்க3ளம்
சரணம்
சரணம் 1
மங்க3ளம் அவனி ஸுதா நாது2னிகி
மங்க3ளம் அரவிந்தா3க்ஷுனிகி
மங்க3ளம் அத்3பு4த சாரித்ருனிகி
மங்க3ளம் ஆதி3 தே3வுனிகி (ஜய)
சரணம் 2
ஸுந்த3ர வத3னுனிகி ஸு-தே3ஹுனிகி
ப்3ரு2ந்தா3ரக க3ண வந்த்3யுனிகி
மந்த3ர த4ருனிகி மன
மாத4வுனிகி ஸு1ப4 ப2லது3னிகி (ஜய)
சரணம் 3
இன குலமுன வெலஸின ராமுனிகி
ஜனக வசன பரிபாலுனிகி
மனஸிஜ கோடி லாவண்யுனிகி
கனக ஸிம்ஹாஸன நிலயுனிகி (ஜய)
சரணம் 4
மந்தா3னில போ4ஜ ஸ1யனுனிகி
1மந்தா3கினீ வர ஜனகுனிகி
மந்த3 ஜனக ஸ1த ஸங்காஸு1னிகி
2மந்தா3ர ரூபுனிகி ஹரிகி (ஜய)
சரணம் 5
இந்த்3ராத்3யஷ்ட தி3கீ3ஸ1 நுதுனிகி
சந்த்3ராதி3த்ய ஸு-நயனுனிகி
க3ஜேந்த்3ருனி ஸம்ரக்ஷிஞ்சின ராம
சந்த்3ருனிகி ஜக3த்3ரூபுனிகி (ஜய)
சரணம் 6
ராஜ ஸே1க2ர ப்ரியுனிகி 3மௌனி
ராஜ ராஜ பூஜிதுனிகி த்யாக3-
ராஜ வினுதுனிகி வர 4க3ஜ
ராஜாதி3 ப4க்த வரது3னிகி (ஜய)
பொருள் - சுருக்கம்
- ஜய மங்களம்.
- என்றும் சுப மங்களம்.
- மங்களம், புவியின் மகள் மணாளனுக்கு!
- மங்களம், கமலக் கண்ணனுக்கு!
- மங்களம், வியத்தகு நடத்தை யுடையோனுக்கு!
- மங்களம், முதற்கடவுளுக்கு!
- எழில் முகத்தோனுக்கு,
- நல்லுடலோனுக்கு,
- வானோர்கள் வணங்குவோனுக்கு,
- மந்தர மலை சுமந்தோனுக்கு,
- எமது மாதவனுக்கு,
- நற்பயன் அருள்வோனுக்கு,
- பரிதி குலத்தில் தோன்றிய இராமனுக்கு,
- தந்தை சொல் காத்தவனுக்கு,
- மதனர் கோடி நிகர் எழிலுடையோனுக்கு,
- தங்க சிங்காதனத்தில் அமர்வோனுக்கு,
- மென் காற்றுண்போன் அணையோனுக்கு,
- மந்தாகினியை ஈன்ற புனிதனுக்கு,
- சனியை யீன்றோன் (பரிதி) நூறு உதித்தாற்போன்றோனுக்கு,
- மந்தார (தரு) உருவினனுக்கு,
- அரிக்கு,
- இந்திரன் முதலாக எண்-திசைமன்னர் போற்றுவோனுக்கு,
- மதி, பரிதிக் கண்களோனுக்கு,
- கரியரசனைக் காத்த இராம சந்திரனுக்கு,
- பல்லுலக உருவத்தோனுக்கு,
- பிறைசூடிக்கு இனியோனுக்கு,
- முனிவரிற் சிறந்தோர் மற்றும் அரசர்கள் தொழுவோனுக்கு,
- தியாகராசன் போற்றுவோனுக்கு,
- உயர் கரி யரசன் முதலான தொண்டருக்கருள்வோனுக்கு,
- எழில் முகத்தோனுக்கு,
- ஜய மங்களம்.
- என்றும் சுப மங்களம்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ மங்க3ளம்/ நித்ய/ ஸு1ப4/ மங்க3ளம்/
ஜய/ மங்களம்/ என்றும்/ சுப/ மங்களம்/
சரணம்
சரணம் 1
மங்க3ளம்/ அவனி/ ஸுதா/ நாது2னிகி/
மங்களம்/ புவியின்/ மகள்/ மணாளனுக்கு/
மங்க3ளம்/ அரவிந்த3/-அக்ஷுனிகி/
மங்களம்/ கமல/ கண்ணனுக்கு/
மங்க3ளம்/ அத்3பு4த/ சாரித்ருனிகி/
மங்களம்/ வியத்தகு/ நடத்தை யுடையோனுக்கு/
மங்க3ளம்/ ஆதி3/ தே3வுனிகி/ (ஜய)
மங்களம்/ முதற்/ கடவுளுக்கு/
சரணம் 2
ஸுந்த3ர/ வத3னுனிகி/ ஸு-தே3ஹுனிகி/
எழில்/ முகத்தோனுக்கு/ நல்லுடலோனுக்கு/
ப்3ரு2ந்தா3ரக க3ண/ வந்த்3யுனிகி/
வானோர்கள்/ வணங்குவோனுக்கு/
மந்த3ர/ த4ருனிகி/ மன/
மந்தர மலை/ சுமந்தோனுக்கு/ எமது/
மாத4வுனிகி/ ஸு1ப4/ ப2லது3னிகி/ (ஜய)
மாதவனுக்கு/ நற்/ பயன் அருள்வோனுக்கு/ ஜய மங்களம்...
சரணம் 3
இன/ குலமுன/ வெலஸின/ ராமுனிகி/
பரிதி/ குலத்தில்/ தோன்றிய/ இராமனுக்கு/
ஜனக/ வசன/ பரிபாலுனிகி/
தந்தை/ சொல்/ காத்தவனுக்கு/
மனஸிஜ/ கோடி/ லாவண்யுனிகி/
மதனர்/ கோடி (நிகர்)/ எழிலுடையோனுக்கு/
கனக/ ஸிம்ஹாஸன/ நிலயுனிகி/ (ஜய)
தங்க/ சிங்காதனத்தில்/ அமர்வோனுக்கு/ ஜய மங்களம்...
சரணம் 4
மந்த3/-அனில/ போ4ஜ/ ஸ1யனுனிகி/
மென்/ காற்று/ உண்போன்/ அணையோனுக்கு/
மந்தா3கினீ/ வர/ ஜனகுனிகி/
மந்தாகினி/ புனித/ ஈன்றோனுக்கு/
மந்த3/ ஜனக/ ஸ1த/ ஸங்காஸு1னிகி/
சனியை/ யீன்றோன் (பரிதி)/ நூறு/ உதித்தாற்போன்றோனுக்கு/
மந்தா3ர/ ரூபுனிகி/ ஹரிகி/ (ஜய)
மந்தார (தரு)/ உருவினனுக்கு/ அரிக்கு/ ஜய மங்களம்...
சரணம் 5
இந்த்3ர/-ஆதி3/-அஷ்ட/ தி3க்/-ஈஸ1/ நுதுனிகி/
இந்திரன்/ முதலாக/ எண்/-திசை/ மன்னர்/ போற்றுவோனுக்கு/
சந்த்3ர/-ஆதி3த்ய/ ஸு-நயனுனிகி/
மதி/ பரிதி/ கண்களோனுக்கு/
க3ஜ/-இந்த்3ருனி/ ஸம்ரக்ஷிஞ்சின/ ராம/
கரி/ யரசனை/ காத்த/ இராம/
சந்த்3ருனிகி/ ஜக3த்/-ரூபுனிகி/ (ஜய)
சந்திரனுக்கு/ பல்லுலக/ உருவத்தோனுக்கு/ ஜய மங்களம்...
சரணம் 6
ராஜ/ ஸே1க2ர/ ப்ரியுனிகி/ மௌனி/
பிறை/ சூடிக்கு/ இனியோனுக்கு/ முனிவரிற்/
ராஜ/ ராஜ/ பூஜிதுனிகி/
சிறந்தோர்/ (மற்றும்) அரசர்கள்/ தொழுவோனுக்கு/
த்யாக3ராஜ/ வினுதுனிகி/ வர/ க3ஜ/
தியாகராசன்/ போற்றுவோனுக்கு/ உயர்/ கரி/
ராஜ/-ஆதி3/ ப4க்த/ வரது3னிகி/ (ஜய)
யரசன்/ முதலான/ தொண்டருக்கு/ அருள்வோனுக்கு/ ஜய மங்களம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - மந்தா3கினீ - மந்தாகினி - கங்கையின் மற்றொரு பெயர்
2 - மந்தா3ர - மந்தார தரு - பாற்கடல் கடைந்த போது தோன்றிய ஐந்து மரங்களில் ஒன்றாகிய, விரும்பியதருளும் வானோர் தரு.
Top
விளக்கம்
3 - மௌனி ராஜ ராஜ - இதனை, 'மௌனி ராஜ' மற்றும் 'ராஜ' என்றோ, 'மௌனி' மற்றும் 'ராஜ ராஜ' என்றோ பொருள் கொள்ளலாம். முதலிற் கூறிய முறையில் இங்கு பொருள் கொள்ளப்பட்டது. 'மௌனி ராஜ' என்பதற்கு 'வால்மீகி' என்றும் பொருள் கொள்ளலாம்.
4 - க3ஜ ராஜ - கரியரசன் - ஐந்தாவது சரணத்திலும், இதே சொல் வருகின்றது. ஆனால், இதற்கு வேறு ஏதும் பொருள் கொள்வதற்கு இடமில்லை.
புவியின் மகள் - சீதை
மென் காற்றுண்போன் - பாம்பு - சேடனைக் குறிக்கும்
பிறைசூடி - சிவன்
கரியரசன் - கஜேந்திரன்
Top
Updated on 18 Dec 2010
1 comment:
Excellent.🙏🙏🙏🙏🙏
Post a Comment