Showing posts with label Deva Manohari Raga. Show all posts
Showing posts with label Deva Manohari Raga. Show all posts

Monday, January 26, 2009

தியாகராஜ கிருதி - குல பி3ருது3னு - ராகம் தே3வ மனோஹரி - Kula Birudunu - Raga Deva Manohari

பல்லவி
குல பி3ருது3னு ப்3ரோசுகொம்மு ரம்மு

அனுபல்லவி
இல கல பூ4-தே31ஸுராது3லகாதா4ருட3கு3 நீ (கு)

சரணம்
நிக3மாக3ம சர நீகு நித்ய மங்க3ளமு கல்கு3
வக3 ஸேயகு 2ராம வந்தி3த த்யாக3ராஜ (கு)


பொருள் - சுருக்கம்
மறைகள், ஆகமங்களின் உள்ளுறையே! இராமா! தியாகராசனால் தொழப்பெற்றோனே!
  • குல விருதினைக் காத்துக்கொள்வாய்; வாராய்.

  • புவியிலுள்ள அந்தணர், வானோர் ஆகியோருக்கு ஆதாரமான உனது குல விருதினைக் காத்துக்கொள்வாய்; வாராய்.

  • உனக்கு என்றும் மங்களமுண்டாகும்; துன்புறுத்தாதே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
குல/ பி3ருது3னு/ ப்3ரோசுகொம்மு/ ரம்மு/
குல/ விருதினை/ காத்துக்கொள்வாய்/ வாராய்/


அனுபல்லவி
இல/ கல/ பூ4-தே3வ/ ஸுர/-ஆது3லகு/-ஆதா4ருட3கு3/ நீ/ (கு)
புவியில்/ உள்ள/ அந்தணர்/ வானோர்/ ஆகியோருக்கு/ ஆதாரமான/ உனது/ குல...


சரணம்
நிக3ம/-ஆக3ம/ சர/ நீகு/ நித்ய/ மங்க3ளமு/ கல்கு3/
மறைகள்/ ஆகமங்களின்/ உள்ளுறையே/ உனக்கு/ என்றும்/ மங்களம்/ உண்டாகும்/

வக3 ஸேயகு/ ராம/ வந்தி3த/ த்யாக3ராஜ/ (கு)
துன்புறுத்தாதே/ இராமா/ தொழப்பெற்றோனே/ தியாகராசனால்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸுராது3லகாதா4ருட3கு3 - ஸுராது3லகாதா4ருட3னு : பிற்குறிப்பட்ட வேறுபாடு சரியென்றால், அனுபல்லவி இவ்விதமாக மொழிபெயர்க்கப்படும் -

"புவியிலுள்ள அந்தணர், வானோர் ஆகியோருக்கு ஆதாரமெனப்படும் உனது குல விருதினைக் காத்துக்கொள்வாய்"

2 - ராம - ஸ்ரீ ராம

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 26 Jan 2009

தியாகராஜ கிருதி - கன்ன தண்ட்3ரி - ராகம் தே3வ மனோஹரி - Kanna Tandri - Raga Deva Manohari

பல்லவி
கன்ன தண்ட்3ரி நாபை
கருண மானகே கா3ஸி தாளனே

அனுபல்லவி
1நின்ன ஸேயு பனுலு நேடு3 கா3
வேரென்ன லேத3னுசு வேமாருலகு (க)

சரணம்
2எது3ரு தானனே இங்கி3தம்பெ3ரிகி3
செத3ரனீக பஞ்சேந்த்3ரியமணசி
நின்னு
வத3ல லேனி 3தை4ர்ய-ஸா1லி காத3னி
மத3ன கோடி ரூப த்யாக3ராஜ நுத (க)


பொருள் - சுருக்கம்
ஈன்ற தந்தையே! மதனர் கோடி உருவத்தோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
    என்மீது கருணை தொடர்ந்து மறுக்காதே; துயரம் தாளேனே
  • நேற்று செய்த பணிகளே இன்றும்; இஃதன்றி (நான்) வேறெண்ணவில்லையென்றோ,

  • எதிரில் தானேயென்ற குறிப்பறிந்து, சிதற விடாது, ஐம்புலன்களை யடக்கி, உன்னை அகலாத துணிவுடையவன் அல்லவென்றோ,

என்மீது கருணை மறுக்காதே.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கன்ன/ தண்ட்3ரி/ நாபை/
ஈன்ற/ தந்தையே/ என்மீது/

கருண/ மானகே/ கா3ஸி/ தாளனே/
கருணை/ மறுக்காதே/ துயரம்/ தாளேனே/


அனுபல்லவி
நின்ன/ ஸேயு/ பனுலு/ நேடு3/ கா3க/
நேற்று/ செய்த/ பணிகளே/ இன்றும்/ இஃதன்றி/

வேரு/-என்ன லேது3-அனுசு/ வேமாருலகு/ (க)
வேறு/ எண்ணவில்லையென/ தொடர்ந்து/ ஈன்ற...


சரணம்
எது3ரு/ தானு/-அனே/ இங்கி3தம்பு3/-எரிகி3/
எதிரில்/ தானே/ என்ற/ குறிப்பு/ அறிந்து/

செத3ர/-ஈக/ பஞ்ச/-இந்த்3ரியமு/-அணசி/ நின்னு/
சிதற/ விடாது/ ஐந்து/ புலன்களை/ அடக்கி/ உன்னை/

வத3ல லேனி/ தை4ர்ய-ஸா1லி/ காது3-அனி/
அகலாத/ துணிவுடையவன்/ அல்லவென/

மத3ன/ கோடி/ ரூப/ த்யாக3ராஜ/ நுத/ (க)
மதனர்/ கோடி/ உருவத்தோனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ ஈன்ற...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நின்ன - நின்னு : 'நின்ன' பொருந்தும்.

மேற்கோள்கள்
3 - தை4ர்ய-ஸா1லி - ஐம்புலன்களுக்கு எவ்வமயமும் வெளி நோக்கே - இது குறித்து விளக்கம் கடோபநிடதம் - 'பராஞ்சி கா2னி' என்ற செய்யுளில் (II.i.1) நோக்கவும்.

Top

விளக்கம்
1 - நின்ன ஸேயு பனுலு நேடு3 கா3 - தினப்படி நாம் இயற்றும் பணிகள் யாவுமே, நாம் ஓரடி கூடி இறைவனை நோக்கி எடுத்துவைப்பதெற்கென்றில்லாது, திரும்பத்திரும்ப செக்கு மாடு போன்று உழல்வதாகவே அமைந்துள்ளன.

2 - எது3ரு தானு - எதிரில் தானே - தன்னுள்ளுறை இறைவன் அனைத்துயிர்களிலும் உள்ளான் என - இங்கு, 'தான்' என்பது 'வாசுதேவன்' எனப்படும் உள்ளுறை இறைவனைக் குறிக்கும். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 'வாசுதேவ' என்ற போற்றிக்கான பொருள் நோக்கவும்.

பகவத்கீதை, 7-வது அத்தியாயம், 19-வது செய்யுளில் கண்ணன் பகர்வது -

"பல பிறவிகளுக்குப் பின்னர், மெய்யறிவுடைத்தவன், யாவுமே உள்ளியங்கும் பரம்பொருளாகிய 'வாசுதேவன்' என உணர்ந்து, என்னிடம் புகலடைகின்றான். மிக்கு அரிதாவான் அத்தகைய பெருந்தகை." (ஸ்வாமி ஸ்வரூபாநந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

Top

2 - எது3ரு தானனே இங்கி3தம்பெ3ரிகி3 செத3ரனீக பஞ்சேந்த்3ரியமணசி - கண்ணிற்கும் மற்ற புலன்களுக்கும் புலப்படும் நுகர்ச்சிப் பொருள்கள் யாவுமே உள்ளியங்கும் 'வாசுதேவ' மயமே என திடமாகத் தோன்றினால், அப்பொருள்களினால் புலன்கள் பாதிக்கப்படமாட்டா.

3 - தை4ர்ய-ஸா1லி காத3னி - இதற்கு 'துணியுடைவன் அல்ல என ஒருவேளை நீ நினைப்பதனாலோ' (உண்மையில் நான் துணிவுடையவன்) அல்லது 'துணிவுடையவன் அல்லவென்றோ' என இருபொருள் கொள்ளலாம். ஆனால் இறைவன் உள்ளியக்கமாக இருப்பதனால், அவனுக்கு தொண்டனின் பக்குவம், ஐயத்திற்கு இடமின்றி, நன்கு தெரியும். எனவே பிற்சொன்ன பொருள் கொள்ளப்பட்டது.

Top


Updated on 26 Jan 2009

Saturday, January 24, 2009

தியாகராஜ கிருதி, எவரிகை - ராகம் தே3வ மனோஹரி - Evarikai - Raga Deva Manohari

பல்லவி
1எவரிகை அவதாரமெத்திதிவோ
இபுடை3ன தெலுபவய்ய 2ராமய்ய (எவரிகை)

அனுபல்லவி
அவனிகி ரம்மனி பிலிசின 3மஹராஜெவடோ3
வானிகி 4ம்ரொக்கெத3 ராம (எவரிகை)

சரணம்
5வேத3 வர்ணனீயமௌ நாமமுதோ
விதி4 ருத்3ருலகு மேல்மியகு3 ரூபமுதோ
மோத3 ஸத3னமகு3 படு சரிதமுதோ
6முனி ராஜ வேஷியௌ 7த்யாக3ராஜ நுத (எவரிகை)


பொருள் - சுருக்கம்
இராமய்யா! முனியரச வேடமணிந்த, தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
  • மறைகளில் வருணிக்கப்பெற்ற பெயருடனும்,

  • விதி, உருத்திரர்களினும் மேன்மையான வடிவத்துடனும்,

  • களிப்பின் உறைவிடமாகும் உயரிய சரிதத்துடனும்,

எவருக்கென அவதாரமெடுத்தாயோ! இப்போழ்தேனும் தெரிவியுமய்யா;

அவனிக்கு வாயென்றழைத்த மகராசன் எவனோ அவனை வணங்குகின்றேன்


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரிகை/ அவதாரமு/-எத்திதிவோ/
எவருக்கென/ அவதாரம்/ எடுத்தாயோ/

இபுடை3ன/ தெலுபு/-அய்ய/ ராமய்ய/
இப்போழ்தேனும்/ தெரிவியும்/ அய்யா/ இராமய்யா/


அனுபல்லவி
அவனிகி/ ரம்மு/-அனி/ பிலிசின/ மஹராஜு/-எவடோ3/
அவனிக்கு/ வா/ என்று/ அழைத்த/ மகராசன்/ எவனோ/

வானிகி/ ம்ரொக்கெத3/ ராம/ (எ)
அவனை/ வணங்குகின்றேன்/ இராமா/


சரணம்
வேத3/ வர்ணனீயமௌ/ நாமமுதோ/
மறைகளில்/ வருணிக்கப்பெற்ற/ பெயருடனும்/

விதி4/ ருத்3ருலகு/ மேல்மியகு3/ ரூபமுதோ/
விதி/ உருத்திரர்களினும்/ மேன்மையான/ வடிவத்துடனும்/

மோத3/ ஸத3னமகு3/ படு/ சரிதமுதோ/
களிப்பின்/ உறைவிடமாகும்/ உயரிய/ சரிதத்துடனும்/

முனி/ ராஜ/ வேஷியௌ/ த்யாக3ராஜ/ நுத/ (எ)
முனி/ அரச/ வேடமணிந்த/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ எவருக்கென...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ராமய்ய (எவரிகை) - ராமய்ய நீ(வெவரிகை)

4 - ம்ரொக்கெத3 - ம்ரொக்கெனு : 'ம்ரொக்கெத3' பொருந்தும்.

7 - த்யாக3ராஜ நுத (எவரிகை) - த்யாக3ராஜ நுத நீ(வெவரிகை)

Top

மேற்கோள்கள்
6 - முனி ராஜ வேஷியௌ - முனியரசன் வேடமணிந்த - முனிவனின் மனப்பாங்குடைய அரசனாக - கைகேயி, ராமனை அடவிக்குச் செல்ல கட்டளையிட்ட போழ்து, தன்னைக் குறித்து, ராமன் அவளிடம் பகர்ந்த சொற்களை (வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 19, செய்யுள் 20) நோக்கவும் -
"தேவி! இவ்வுலகத்தில் நான் பொருளாசைக்கு அடிமையாக வாழ்வதை விரும்பவில்லை; தூய அறநெறி நிற்கும் இருடிகளுக்கு நிகராக என்னைக் கருதுவாயாக."

Top

விளக்கம்
1 - எவரிகை அவதாரமெத்திதிவோ - தலைசிறந்த பாகவத சொற்பொழிவாளர், திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தன்னுடைய 'தியாகராஜ ராமாயணம்' என்னும் ஹரிகதையில், தியாகராஜர், ராவணனை நினைவிற்கொண்டு இப்பாடலைப் பாடியதாகக் கூறுகின்றார். ராவணன் இல்லாமற்போனால் ராமனின் அவதாரம் ஏற்பட்டிருக்காதன்றோ!

Top

3 - மஹராஜெவடோ3 - மகராஜன் எவனோ - தமிழில் 'மகராசன்', 'மகராசி' என்ற சொற்கள் வாழ்த்துக்களாகும்.
ராவணன் தலைசிறந்த சிவ பக்தன். சாமகானம் பாடி, தனது பத்து தலைகளை ஒவ்வொன்றாகக் கொய்து, சிவனிடம் வரம் பெற்றவன். அவனுடைய ஆளுகையில், மறையோதல் சிறந்தமுறையில் நடந்துவந்ததை, அனுமன், தனது இலங்கைப் பயணத்தில் கண்டான்.

சீதையைத் தொட்டு, அபகரித்து, அவளை தனது மடிமீதிருத்தி, ஆகாய மார்க்கத்தில் கொண்டு சென்று, சிறையிட்டு, ஒரு வருடம் அவகாசம் கொடுத்து, அவளை, தனது பட்டராணியாகும்படி வேண்டினான். ஆனால், 'பெண்ணாசை கொண்டவன்' என்ற பெயர் பெற்ற அவன், சீதையை பலாத்காரம் செய்யாததும், தண்டகாரண்யத்தில், ஒற்றர்களை அனுப்பி, ராமனைப் பற்றி உளவு பார்த்த அவன், ராமனும் வானரப் படைகளும் பாலம் கட்டி இலங்கைக்குள் புகும்வரை சும்மாயிருந்ததும், ராவணனுடைய இயற்கையினைக் காட்டுவதாக இல்லை. அவன் சீதையைக் குறித்தும் ராமனைக் குறித்தும் அறிந்தே புரிந்த செயல்களாகத்தான் தோன்றுகின்றன. அதனால் தியாகராஜர் ராவணனை இப்பாடலில் புகழ்வது பொருந்தும்.

Top

5 - வேத3 வர்ணனீயமௌ நாமமுதோ - மறைகளில் வருணிக்கப்பெற்ற பெயருடன் - மறைகள் ராமனைப் புகழ்ந்துள்ளனவாயெனத் தெரியவில்லை. ஆனால் 'ராம' என்ற பெயரின் ஈரெழுத்துக்களும், 'நாராயணாய' என்ற சொல்லின் உயிராகிய 'ரா', மற்றும் 'நமசிவாய' என்ற சொல்லின் உயிராகிய 'ம' என்ற எழுத்தின் சேர்க்கை என்றும், இச்சொல், 'ஓம்' எனும் பிரணவத்திற்கு நிகரான 'தாரகம்' - அதாவது பிறவிக் கடலை கடத்துவிப்பது - என்றும் கருதப்படுகின்றது. இது குறித்து, காஞ்சி மாமுனிவரின் உரையினை நோக்கவும்.

விதி - பிரமன்

உருத்திரர் - சிவன்

சரிதம் - நடத்தை என்றும் கொள்ளலாம்

Top


Updated on 24 Jan 2009