Monday, January 26, 2009

தியாகராஜ கிருதி - கன்ன தண்ட்3ரி - ராகம் தே3வ மனோஹரி - Kanna Tandri - Raga Deva Manohari

பல்லவி
கன்ன தண்ட்3ரி நாபை
கருண மானகே கா3ஸி தாளனே

அனுபல்லவி
1நின்ன ஸேயு பனுலு நேடு3 கா3
வேரென்ன லேத3னுசு வேமாருலகு (க)

சரணம்
2எது3ரு தானனே இங்கி3தம்பெ3ரிகி3
செத3ரனீக பஞ்சேந்த்3ரியமணசி
நின்னு
வத3ல லேனி 3தை4ர்ய-ஸா1லி காத3னி
மத3ன கோடி ரூப த்யாக3ராஜ நுத (க)


பொருள் - சுருக்கம்
ஈன்ற தந்தையே! மதனர் கோடி உருவத்தோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
    என்மீது கருணை தொடர்ந்து மறுக்காதே; துயரம் தாளேனே
  • நேற்று செய்த பணிகளே இன்றும்; இஃதன்றி (நான்) வேறெண்ணவில்லையென்றோ,

  • எதிரில் தானேயென்ற குறிப்பறிந்து, சிதற விடாது, ஐம்புலன்களை யடக்கி, உன்னை அகலாத துணிவுடையவன் அல்லவென்றோ,

என்மீது கருணை மறுக்காதே.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கன்ன/ தண்ட்3ரி/ நாபை/
ஈன்ற/ தந்தையே/ என்மீது/

கருண/ மானகே/ கா3ஸி/ தாளனே/
கருணை/ மறுக்காதே/ துயரம்/ தாளேனே/


அனுபல்லவி
நின்ன/ ஸேயு/ பனுலு/ நேடு3/ கா3க/
நேற்று/ செய்த/ பணிகளே/ இன்றும்/ இஃதன்றி/

வேரு/-என்ன லேது3-அனுசு/ வேமாருலகு/ (க)
வேறு/ எண்ணவில்லையென/ தொடர்ந்து/ ஈன்ற...


சரணம்
எது3ரு/ தானு/-அனே/ இங்கி3தம்பு3/-எரிகி3/
எதிரில்/ தானே/ என்ற/ குறிப்பு/ அறிந்து/

செத3ர/-ஈக/ பஞ்ச/-இந்த்3ரியமு/-அணசி/ நின்னு/
சிதற/ விடாது/ ஐந்து/ புலன்களை/ அடக்கி/ உன்னை/

வத3ல லேனி/ தை4ர்ய-ஸா1லி/ காது3-அனி/
அகலாத/ துணிவுடையவன்/ அல்லவென/

மத3ன/ கோடி/ ரூப/ த்யாக3ராஜ/ நுத/ (க)
மதனர்/ கோடி/ உருவத்தோனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ ஈன்ற...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நின்ன - நின்னு : 'நின்ன' பொருந்தும்.

மேற்கோள்கள்
3 - தை4ர்ய-ஸா1லி - ஐம்புலன்களுக்கு எவ்வமயமும் வெளி நோக்கே - இது குறித்து விளக்கம் கடோபநிடதம் - 'பராஞ்சி கா2னி' என்ற செய்யுளில் (II.i.1) நோக்கவும்.

Top

விளக்கம்
1 - நின்ன ஸேயு பனுலு நேடு3 கா3 - தினப்படி நாம் இயற்றும் பணிகள் யாவுமே, நாம் ஓரடி கூடி இறைவனை நோக்கி எடுத்துவைப்பதெற்கென்றில்லாது, திரும்பத்திரும்ப செக்கு மாடு போன்று உழல்வதாகவே அமைந்துள்ளன.

2 - எது3ரு தானு - எதிரில் தானே - தன்னுள்ளுறை இறைவன் அனைத்துயிர்களிலும் உள்ளான் என - இங்கு, 'தான்' என்பது 'வாசுதேவன்' எனப்படும் உள்ளுறை இறைவனைக் குறிக்கும். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 'வாசுதேவ' என்ற போற்றிக்கான பொருள் நோக்கவும்.

பகவத்கீதை, 7-வது அத்தியாயம், 19-வது செய்யுளில் கண்ணன் பகர்வது -

"பல பிறவிகளுக்குப் பின்னர், மெய்யறிவுடைத்தவன், யாவுமே உள்ளியங்கும் பரம்பொருளாகிய 'வாசுதேவன்' என உணர்ந்து, என்னிடம் புகலடைகின்றான். மிக்கு அரிதாவான் அத்தகைய பெருந்தகை." (ஸ்வாமி ஸ்வரூபாநந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

Top

2 - எது3ரு தானனே இங்கி3தம்பெ3ரிகி3 செத3ரனீக பஞ்சேந்த்3ரியமணசி - கண்ணிற்கும் மற்ற புலன்களுக்கும் புலப்படும் நுகர்ச்சிப் பொருள்கள் யாவுமே உள்ளியங்கும் 'வாசுதேவ' மயமே என திடமாகத் தோன்றினால், அப்பொருள்களினால் புலன்கள் பாதிக்கப்படமாட்டா.

3 - தை4ர்ய-ஸா1லி காத3னி - இதற்கு 'துணியுடைவன் அல்ல என ஒருவேளை நீ நினைப்பதனாலோ' (உண்மையில் நான் துணிவுடையவன்) அல்லது 'துணிவுடையவன் அல்லவென்றோ' என இருபொருள் கொள்ளலாம். ஆனால் இறைவன் உள்ளியக்கமாக இருப்பதனால், அவனுக்கு தொண்டனின் பக்குவம், ஐயத்திற்கு இடமின்றி, நன்கு தெரியும். எனவே பிற்சொன்ன பொருள் கொள்ளப்பட்டது.

Top


Updated on 26 Jan 2009

No comments: