Saturday, February 5, 2011

தியாகராஜ கிருதி - ஒக பாரி ஜூட33 - ராகம் கலாவதி - Oka Paari Judaga - Raga Kalaavati

பல்லவி
ஒக பாரி ஜூட33 ராதா3

அனுபல்லவி
1ஸு1 மானஸார்சித பாத3 ஸதா3
ஸு1த்3தா4ந்தரங்க3 முத3ம்பு3தோ (ஒ)

சரணம்
வருலைன 2தி3கீ3ஸு1லு சந்த்3ர விபா4-
கர மௌனி 3வராது3லு 4ராம நீ
கருணா கடாக்ஷமு சேத
வெலஸிரே கானி த்யாக3ராஜ ஸன்னுத (ஒ)


பொருள் - சுருக்கம்
  • சுகர் மனத்தில் தொழப் பெற்ற திருவடியோனே! எவ்வமயமும் தூயவுள்ளத்தோனே!
  • இராமா! தியாகராசன் சிறக்கப் போற்றுவோனே!

  • (என்னை) ஒருமுறை நோக்கலாகாதா?
  • மகிழ்வுடன் (என்னை) ஒருமுறை நோக்கலாகாதா?
    • சிறப்புடைய திசை மன்னர்கள், சந்திரன், பகலவன், முனிவரிற் சிறந்தோர் ஆகியோர், உனது கருணை நிறை கடைக்கண் பார்வையினால் திகழ்ந்தனரே;

  • ஆயினும், (என்னை) ஒருமுறை நோக்கலாகாதா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஒக/ பாரி/ ஜூட33/ ராதா3/
(என்னை) ஒரு/ முறை/ நோக்கல்/ ஆகாதா/


அனுபல்லவி
ஸு1க/ மானஸ/-அர்சித/ பாத3/ ஸதா3/
சுகர்/ மனத்தில்/ தொழப் பெற்ற/ திருவடியோனே/ எவ்வமயமும்/

ஸு1த்34/-அந்தரங்க3/ முத3ம்பு3தோ/ (ஒ)
தூய/ உள்ளத்தோனே/ மகிழ்வுடன்/ ஒருமுறை...


சரணம்
வருலைன/ தி3க்/-ஈஸு1லு/ சந்த்3ர/ விபா4கர/
சிறப்புடைய/ திசை/ மன்னர்கள்/ சந்திரன்/ பகலவன்/

மௌனி/ வர/-ஆது3லு/ ராம/ நீ/
முனிவரிற்/ சிறந்தோர்/ ஆகியோர்/ இராமா/ உனது/

கருணா/ கடாக்ஷமு சேத/
கருணை நிறை/ கடைக்கண் பார்வையினால்/

வெலஸிரே/ கானி/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஒ)
திகழ்ந்தனரே/ ஆயினும்/ தியாகராசன்/ சிறக்கப் போற்றுவோனே/ ஒருமுறை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸு1 - ஸு-கவி.

3 - வராது3லு - விராது3லு : இவ்விடத்தில் 'விராது3லு' என்பது பொருந்தாது.

4 - ராம - ஸ்ரீ ராம.

Top

மேற்கோள்கள்
2 - தி3கீ3ஸு1லு - திசை மன்னர்கள் - திசை மன்னர்களும், புவியை, அத்திசைகளில் சுமக்கும் யானைகளும் கீழ்க்கண்டவாறு - கிழக்கு - இந்திரன் - ஐராவதம்; தென்-கிழக்கு - அக்னி - புண்டரீக; தெற்கு - எமன் - வாமன; தென்-மேற்கு - நிர்ருதி அல்லது சூரியன் - குமுத; மேற்கு - வருணன் - அஞ்சன; வட-மேற்கு - வாயு அல்லது பாவன - புஷ்பதந்த; வடக்கு - குபேரன் - சார்வபௌம; வட-கிழக்கு - ஈசானன அல்லது சோம அல்லது சந்திரன் - சுப்ரதீப.

Top

விளக்கம்
சுகர் - சுக முனிவர்

Top


Updated on 05 Feb 2011

No comments: