Showing posts with label Kalaavati Raga. Show all posts
Showing posts with label Kalaavati Raga. Show all posts

Saturday, February 5, 2011

தியாகராஜ கிருதி - ஒக பாரி ஜூட33 - ராகம் கலாவதி - Oka Paari Judaga - Raga Kalaavati

பல்லவி
ஒக பாரி ஜூட33 ராதா3

அனுபல்லவி
1ஸு1 மானஸார்சித பாத3 ஸதா3
ஸு1த்3தா4ந்தரங்க3 முத3ம்பு3தோ (ஒ)

சரணம்
வருலைன 2தி3கீ3ஸு1லு சந்த்3ர விபா4-
கர மௌனி 3வராது3லு 4ராம நீ
கருணா கடாக்ஷமு சேத
வெலஸிரே கானி த்யாக3ராஜ ஸன்னுத (ஒ)


பொருள் - சுருக்கம்
  • சுகர் மனத்தில் தொழப் பெற்ற திருவடியோனே! எவ்வமயமும் தூயவுள்ளத்தோனே!
  • இராமா! தியாகராசன் சிறக்கப் போற்றுவோனே!

  • (என்னை) ஒருமுறை நோக்கலாகாதா?
  • மகிழ்வுடன் (என்னை) ஒருமுறை நோக்கலாகாதா?
    • சிறப்புடைய திசை மன்னர்கள், சந்திரன், பகலவன், முனிவரிற் சிறந்தோர் ஆகியோர், உனது கருணை நிறை கடைக்கண் பார்வையினால் திகழ்ந்தனரே;

  • ஆயினும், (என்னை) ஒருமுறை நோக்கலாகாதா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஒக/ பாரி/ ஜூட33/ ராதா3/
(என்னை) ஒரு/ முறை/ நோக்கல்/ ஆகாதா/


அனுபல்லவி
ஸு1க/ மானஸ/-அர்சித/ பாத3/ ஸதா3/
சுகர்/ மனத்தில்/ தொழப் பெற்ற/ திருவடியோனே/ எவ்வமயமும்/

ஸு1த்34/-அந்தரங்க3/ முத3ம்பு3தோ/ (ஒ)
தூய/ உள்ளத்தோனே/ மகிழ்வுடன்/ ஒருமுறை...


சரணம்
வருலைன/ தி3க்/-ஈஸு1லு/ சந்த்3ர/ விபா4கர/
சிறப்புடைய/ திசை/ மன்னர்கள்/ சந்திரன்/ பகலவன்/

மௌனி/ வர/-ஆது3லு/ ராம/ நீ/
முனிவரிற்/ சிறந்தோர்/ ஆகியோர்/ இராமா/ உனது/

கருணா/ கடாக்ஷமு சேத/
கருணை நிறை/ கடைக்கண் பார்வையினால்/

வெலஸிரே/ கானி/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஒ)
திகழ்ந்தனரே/ ஆயினும்/ தியாகராசன்/ சிறக்கப் போற்றுவோனே/ ஒருமுறை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸு1 - ஸு-கவி.

3 - வராது3லு - விராது3லு : இவ்விடத்தில் 'விராது3லு' என்பது பொருந்தாது.

4 - ராம - ஸ்ரீ ராம.

Top

மேற்கோள்கள்
2 - தி3கீ3ஸு1லு - திசை மன்னர்கள் - திசை மன்னர்களும், புவியை, அத்திசைகளில் சுமக்கும் யானைகளும் கீழ்க்கண்டவாறு - கிழக்கு - இந்திரன் - ஐராவதம்; தென்-கிழக்கு - அக்னி - புண்டரீக; தெற்கு - எமன் - வாமன; தென்-மேற்கு - நிர்ருதி அல்லது சூரியன் - குமுத; மேற்கு - வருணன் - அஞ்சன; வட-மேற்கு - வாயு அல்லது பாவன - புஷ்பதந்த; வடக்கு - குபேரன் - சார்வபௌம; வட-கிழக்கு - ஈசானன அல்லது சோம அல்லது சந்திரன் - சுப்ரதீப.

Top

விளக்கம்
சுகர் - சுக முனிவர்

Top


Updated on 05 Feb 2011

Sunday, January 30, 2011

தியாகராஜ கிருதி - என்னடு3 ஜூதுனோ - ராகம் கலாவதி - Ennadu Jutuno - Raga Kalaavati

பல்லவி
என்னடு3 ஜூதுனோ இன குல திலக நி(ன்னெ)

அனுபல்லவி
பன்னக31யன ப4க்த ஜனாவன
புன்னம சந்து3ரு போலு முக2முனு (எ)

சரணம்
4ரணிஜா ஸௌமித்ரி ப4ரத ரிபுக்4
வானர யூத2 பதி வருடா3ஞ்ஜனேயுடு3
1கருணனு ஒகரிகொகரு வர்ணிம்ப-
நாத3ரணனு பிலிசே 2நின்னு த்யாக3ராஜார்சித (எ)


பொருள் - சுருக்கம்
  • பரிதி குலத்திலகமே!
  • அரவணையோனே! தொண்டர்களைக் காப்போனே!
  • தியாகராசன் தொழுவோனே!

  • என்று காண்பேனோ, உன்னை?
  • முழுமதி போலுமுனது முகத்தினை என்று காண்பேனோ?

    • புவிமகள், சௌமித்திரி, பரதன், சத்துருக்கினன், வானரர்கள் தலைவன், மேலோன் அனுமன் (ஆகியோர்) கருணையடன், ஒருவருக்கொருவர் (உன்னை) வருணிக்க,

  • ஆதரவுடன் அழைக்கும் உன்னை, என்று காண்பேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
என்னடு3/ ஜூதுனோ/ இன/ குல/ திலக/ நின்னு/ (எ)
என்று/ காண்பேனோ/ பரிதி/ குல/ திலகமே/ உன்னை/


அனுபல்லவி
பன்னக3/ ஸ1யன/ ப4க்த ஜன/-அவன/
அரவு/ அணையோனே/ தொண்டர்களை/ காப்போனே/

புன்னம/ சந்து3ரு/ போலு/ முக2முனு/ (எ)
முழு/ மதி/ போலும்/ (உனது) முகத்தினை/ என்று...


சரணம்
4ரணிஜா/ ஸௌமித்ரி/ ப4ரத/ ரிபுக்4ன/
புவிமகள்/ சௌமித்திரி/ பரதன்/ சத்துருக்கினன்/

வானர யூத2/ பதி/ வருடு3/-ஆஞ்ஜனேயுடு3/
வானரர்கள்/ தலைவன்/ மேலோன்/ அனுமன்/ (ஆகியோர்)

கருணனு/ ஒகரிகி/-ஒகரு/ வர்ணிம்பனு/-
கருணையடன்/ ஒருவருக்கு/ ஒருவர்/ (உன்னை) வருணிக்க/

ஆத3ரணனு/ பிலிசே/ நின்னு/ த்யாக3ராஜ/-அர்சித/ (எ)
ஆதரவுடன்/ அழைக்கும்/ உன்னை/ தியாகராசன்/ தொழுவோனே/ என்று...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நின்னு - நினு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - கருணனு - கருணையுடன். இச்சொல் அமைந்திருக்கும் இடத்தினைக் கருத்தில் கொண்டு, இதனை, 'வருணிக்க' என்பதன் அடைமொழியாக (கருணையுடன் வருணிக்க) என்று பொருள் கொள்ளவேண்டும். ஆனால், 'கருணனு' என்பதற்கு 'கருணையினை' என்றும் பொருள் கொள்ளலாம். எனவே, இது, 'இறைவனுடைய கருணையினை' அவர்கள் வருணிப்பதாகவும் கொள்ளலாம். முற்கூறியபடி, 'கருணையுடன் வருணிக்க' என்பதில் 'கருணை' என்பது 'உருக்கமாக' என்று பொருள்படும்.

புவிமகள் - சீதை
சௌமித்திரி - சுமித்திரை மகன் - இலக்குவன்
வானரர்கள் தலைவன் - சுக்கிரீவன்

Top


Updated on 30 Jan 2011