Saturday, January 15, 2011

தியாகராஜ கிருதி - ராமாபி4ராம ரகு4ராம - ராகம் ஸாவேரி - Ramaabhirama Raghurama - Raga Saveri - Prahlada Bhakti Vijayam

பல்லவி
ராமாபி4ராம ரகு4ராம ஓ ராம

அனுபல்லவி
1தாமஸமுலேல ஸீதா மனோ-ரமண (ரா)

சரணம்
சரணம் 1
2பக3 ஸேயுடேல நா பால நீது3
வக3லேல விட3 ஜாலவு க3ஜேந்த்3ர பால (ரா)


சரணம் 2
நீ ஸொம்மு நேனடு33 லேது3 நிண்டு3
மோஸமௌ ப்ரபஞ்சமந்தா3ஸ லேது3 (ரா)


சரணம் 3
ஆஸ நீயெட3 தனகு போது3 நிஜ
தா3ஸ ரக்ஷக நினு வினா க3தியு லேது3 (ரா)


சரணம் 4
நீ ஸரி ஸமானமெவரிலலோ ராம
நீரஜ த3ளாக்ஷ சிக்கிதிரா நீ வலலோ (ரா)


3சரணம் 5
4கல்லலாட3னி தெலிய லேரா நீ-
வல்ல நேரமு கானி நே நீகு வேரா (ரா)


சரணம் 6
ஸ்ரீ பதி நனு மரவ தகு3னா இதி3
பாபமே கானி எட3பா35மனஸகு3னா (ரா)


சரணம் 7
ஆ-ஜானு பா3ஹு கரமீரா 6ஸ்ரீ த்யாக3-
ராஜுனி
4வாப்3தி4 7தா3டிஞ்சி பரமீரா (ரா)


பொருள் - சுருக்கம்
 • இராமா! களிப்பூட்டுவோனே! இரகுராமா! ஓ இராமா!
 • சீதையின் மனம் மகிழ்விப்போனே!
 • கரியரசனைக் காத்தோனே!
 • உண்மைத் தொண்டரைக் காப்போனே!
 • தாமரையிதழ்க் கண்ணா!
 • இலக்குமி மணாளா!

  • தாமதமேன்?

  • பகைமை காட்டுவதேன் என்னிடம்?
  • உனது சூழ்ச்சிகளையேன் விடமாட்டயோ?

  • உனது சொத்தை நான் கேட்கவில்லை.
  • மிக்கு மோசமான இவ்வுலகத்தினில் (எனக்கு) ஆசையில்லை.

  • ஆசை உன்னிடம் தனக்குப் போகாது.
  • உன்னை யன்றி கதியுமில்லை.

  • உனக்கு ஈடிணை யார் இப்புவியில்?
  • சிக்கினேனய்யா உனது வலையில்.

  • (நீ) பொய்யன் என அறியேனய்யா.
  • உன்னால் தவறேயன்றி, நானுனக்கு வேறா?

  • என்னை மறக்கத்தகுமா?
  • இஃது பாவமே யன்றி, இடை பிரிய மனம் ஒவ்வுமா?


 • முழந்தாள் நீள (உனது) கைகொடுமய்யா.
 • இத்தியாகராசனை பிறவிக்கடலைத் தாண்டுவித்து பரமருளுமைய்யா.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/-அபி4ராம/ ரகு4ராம/ ஓ ராம/
இராமா/ களிப்பூட்டுவோனே/ இரகுராமா/ ஓ இராமா/


அனுபல்லவி
தாமஸமுலு/-ஏல/ ஸீதா/ மனோ/-ரமண/ (ரா)
தாமதம்/ ஏன்/ சீதையின்/ மனம்/ மகிழ்விப்போனே/


சரணம்
சரணம் 1
பக3/ ஸேயுட/-ஏல/ நா பால/ நீது3/
பகைமை/ காட்டுவது/ ஏன்/ என்னிடம்/ உனது/

வக3லு/-ஏல/ விட3/ ஜாலவு/ க3ஜ/-இந்த்3ர/ பால/ (ரா)
சூழ்ச்சிகளை/ யேன்/ விட/ மாட்டயோ/ கரி/ யரசனை/ காத்தோனே/


சரணம் 2
நீ/ ஸொம்மு/ நேனு/-அடு33 லேது3/ நிண்டு3/
உனது/ சொத்தை/ நான்/ கேட்கவில்லை/ மிக்கு/

மோஸமௌ/ ப்ரபஞ்சமு-அந்து3/-ஆஸ/ லேது3/ (ரா)
மோசமான/ இவ்வுலகத்தினில்/ (எனக்கு) ஆசை/ யில்லை/


சரணம் 3
ஆஸ/ நீயெட3/ தனகு/ போது3/ நிஜ/
ஆசை/ உன்னிடம்/ தனக்கு/ போகாது/ உண்மை/

தா3ஸ/ ரக்ஷக/ நினு/ வினா/ க3தியு/ லேது3/ (ரா)
தொண்டரை/ காப்போனே/ உன்னை/ யன்றி/ கதியும்/ இல்லை/


சரணம் 4
நீ/ ஸரி/ ஸமானமு/-எவரு/-இலலோ/ ராம/
உனக்கு/ ஈடு/ இணை/ யார்/ இப்புவியில்/ இராமா/

நீரஜ/ த3ள/-அக்ஷ/ சிக்கிதிரா/ நீ/ வலலோ/ (ரா)
தாமரை/ யிதழ்/ கண்ணா/ சிக்கினேனய்யா/ உனது/ வலையில்/


சரணம் 5
கல்லலாடு3/-அனி/ தெலிய லேரா/
(நீ) பொய்யன்/ என/ அறியேனய்யா/

நீ-வல்ல/ நேரமு/ கானி/ நே/ நீகு/ வேரா/ (ரா)
உன்னால்/ தவறே/ யன்றி/ நான்/ உனக்கு/ வேறா/


சரணம் 6
ஸ்ரீ/ பதி/ நனு/ மரவ/ தகு3னா/ இதி3/
இலக்குமி/ மணாளா/ என்னை/ மறக்க/ தகுமா/ இஃது/

பாபமே/ கானி/ எட3/-பா3ய/ மனஸு/-அகு3னா/ (ரா)
பாவமே/ யன்றி/ இடை/ பிரிய/ மனம்/ ஒவ்வுமா/


சரணம் 7
ஆ-ஜானு பா3ஹு/ கரமு/-ஈரா/ ஸ்ரீ/
முழந்தாள் நீள/ (உனது) கை/ கொடுமய்யா/ ஸ்ரீ/

த்யாக3ராஜுனி/ ப4வ/-அப்3தி4/ தா3டிஞ்சி/ பரமு/-ஈரா/ (ரா)
தியாகராசனை/ பிறவி/ கடலை/ தாண்டுவித்து/ பரம்/ அருளுமைய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாமஸமுலேல - தாமஸமுயேல.

2 - பக3 ஸேயுடேல நா பால - பக3 ஸேயுடெல்ல நா பாலா : புத்தகங்களில், இதற்கு, 'பகைமை காட்டுவதேன் என்னிடம்' என்றுதான் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, முன்கூறியபடியே ஏற்கப்பட்டது.

3 - சரணம் 5 - இந்த சரணம் ஒரு புத்தகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.

6 - ஸ்ரீ த்யாக3ராஜுனி - த்யாக3ராஜுனி.

7 - தா3டிஞ்சி - தாடி3ஞ்சி : இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'தாண்டுவித்து' என்று பொருளாகும். எனவே 'தா3டிஞ்சி' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
4 - கல்லலாட3னி - புத்தகத்தில், இதற்கு, 'பொய்யன் என' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லினை, 'கல்லலு+ஆடு3+அனி' என்று தான் பிரிக்க இயலும். ஆனால், 'கல்லலு ஆடு3' என்பதற்கு 'பொய் சொல்வது' என்றுதான் பொருளாகும். 'கல்லரீடு3' என்ற சொல்லுக்கு 'பொய்யன்' என்று பொருளாகும். ஆனால், மற்ற புத்தகங்களில், இந்த சரணம் கொடுக்கப்படாமையால், இது சரியா என ஒப்பிட்டுப் பார்க்க இயலவில்லை.

5 - மனஸகு3னா - 'மனது ஒவ்வுமா?' - இது இறைவனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.

பரம் - வீடு
இப்பாடல் பிரகலாதன் அரியினை விழைந்து பாடுவதாக

Top


Updated on 15 Jan 2011

4 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
இப்பாடல் பிரகலாதன் கடவுளிடம் குறைகளைக் காண்பதாக அமைந்துள்ளது.

சரணம் 3 - கல்லலாட3னி தெலிய லேரா- கல்லலாடு என்று பதம் பிரித்துப் பொருள் கூறியுள்ளீர். முன்பு நான் அனுப்பிய மடலின் நகல் கீழே க்டுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தாங்கள் விடைஉஆளிக்கவில்லை.

“C 7 : kallADa - I have heard the terms kaLLaDu or kallaDu or kallavADu for a liar. ‘kaLLan’ in Tamil is possibly the equivalent.

Is kallalu + Ada +nE teliya a possibility? In an earlier charaNam tyAgarAja says that he does not covet wealth.”

இச்சொல்லினை, 'கல்லலு+ஆடு3+அனி' என்று தான் பிரிக்க இயலும் என்று கூறியுள்ளீர். இவ்வாறு பிரித்தால் பொய் பேசு என்று பொருளாகும். கல்லலு ஆடனி (பொய் பேசாத) என்றும் பிரிக்கலாமே. கல்லடு கல்லவாடு, கள்ளடு, கள்ளாடு எனும் பேச்சு வழக்குகளைப் பொய்யன்/கள்வன் என்னும் பொருளில் நான் கேட்டுள்ளேன். கல்லலாடு என்பது கல்லலு +ஆடு அதாவது பொய் பேசும் எனும் பொருள் தராதா?
கல்லவாடு+ அனி என்பது சரி என்று எடுத்துக்கொள்ளலாமா?

சரணம் 1- பக3 ஸேயுடெல்ல நா பாலா- இதை பக+ ஸேயுட+ எல்ல+ நா+பாலா என்று பிரித்து பகைமை காட்டுவதெல்லாம் என்னிடம் (மட்டும்) தானா என்றும் பொருள் கொள்ளமுடியுமே.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'கல்லலாடனி' (பொய் பேசாத) என்று பொருள் கொண்டால், 'தெலிய லேரு' என்பதுடன் இணைக்க முடியாது. 'பொய் பேசாத என்று தெரியவில்லை' என்பதற்கு அர்த்தமில்லை. இதற்கு 'கல்லலவாடு அனி' என்று நான் பொருள் கொடுத்துள்ளேன்.

'பக3 ஸேயுடெல்ல நா பாலா' என்பதனை பாடாந்தரமாக கொடுத்துள்ளேன். அப்படியும் பொருள் கொள்வது தவறாகாது.

வணக்கம்
கோவிந்தன்

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
கல்லலாடு என்பது வினையெச்சம். இது தெலியலேரா என்பதோடு இணையாது. பதவுரையில்/விளக்கத்தில் நீங்கள் கல்லலவாடு என்று கொடுக்கவில்லையே.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

இந்த சரணம் ஒரு புத்தகத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் ஒப்பிட்டுப் பார்க்க இயலவில்லை என்றும் விளக்கத்தில் கொடுத்துள்ளேன். ஆனால் புத்தகத்தில் கொடுத்துள்ள சொல்லை நான் மாற்றியமைக்க இயலாது.

வணக்கம்,
கோவிந்தன்.