ராமம் ப4ஜேஹம் ஸதா3
அனுபல்லவி
ஸ்1யாமம் ஸகல ஸுஜன ஹ்ரு2த3ய ஜலதி4
ஸோமம் ஜனக ஸுதாபி4(ராமம்)
சரணம்
சரணம் 1
ஸுந்த3ர முக2ம் அரவிந்த3 நயனம் அக4
ப்3ரு2ந்த3 2பர்வத புரந்த3ரம் 3அனக4ம்
ஸனந்த3ன நுதம் ஆனந்த3 ஜலதி4ம் அஹி
ப்3ரு2ந்த3 ஸுபூ4ஷண வந்தி3த சரிதம் (ராமம்)
சரணம் 2
தீ4ரம் 4ஸுர பரிவாரம் பு4வ-
நாதா4ரம் ஸுகு3ணாகாரம்
ஸமலங்காரம் து3ர்ஜன தூ3ரம் ஸ்ரீ ரகு4-
வீரம் மே ஹ்ரு2தி3 வாரம் வாரம் (ராமம்)
சரணம் 3
ராஜம் நத ஸுர ராஜம் ஸ்துத க3ஜ
ராஜம் ஸ்1ருதி வினுதாஜம் ஸுத ரதி
ராஜம் துரக3 விராஜம் ஸுஜன
ஸமாஜம் த்யாக3ராஜ ராஜம் (ராமம்)
பொருள் - சுருக்கம்
- இராமனை எவ்வமயமும் வழிபடுவேனே.
- நீல வண்ணனை,
- அனைத்து நல்லோரிதயக் கடலின் மதியினை,
- சனகன் மகளை மகிழ்விப்போனை,
- அழகிய வதனனை,
- கமலக்கண்ணனை,
- பாவங்களைக் களைவதில் மலைகளுக்கு இந்திரனை,
- பாவமற்றோனை,
- சனந்தனர் போற்றுவோனை,
- ஆனந்தக் கடலினை,
- அரவுகளையணிவோன் வணங்கும் நல்லொழுக்கத்தோனை,
- தீரனை,
- வானோர் பரிவாரத்தோனை,
- புவனத்திற்கு ஆதாரத்தினை,
- நற்குணங்கள் வடிவினனை,
- சிறந்த அலங்காரத்தோனை,
- தீயோருக்கு தூரமானவனை,
- இரகு வீரனை,
- கொற்றவனை,
- தேவர் தலைவன் தொழுவோனை,
- கரியரசன் துதிப்போனை,
- மறைகள் போற்றும், பிறவாதவனை,
- இரதி மணாளன் தந்தையை,
- கருட வாகனனை,
- நன்மக்கள் சமூகத்துறைவோனை,
- தியாகராசன் தலைவனை,
- நீல வண்ணனை,
- எனது இதயத்தினில், எந்நாளும், இராமனை வழிபடுவேனே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமம்/ ப4ஜே/-அஹம்/ ஸதா3/
இராமனை/ வழிபடுவேன்/ நான்/ எவ்வமயமும்/
அனுபல்லவி
ஸ்1யாமம்/ ஸகல/ ஸுஜன/ ஹ்ரு2த3ய/ ஜலதி4/
நீல வண்ணனை/ அனைத்து/ நல்லோர்/ இதய/ கடலின்/
ஸோமம்/ ஜனக/ ஸுதா/-அபி4ராமம்/
மதியினை/ சனகன்/ மகளை/ மகிழ்விப்போனை/
சரணம்
சரணம் 1
ஸுந்த3ர/ முக2ம்/ அரவிந்த3/ நயனம்/ அக4 ப்3ரு2ந்த3/
அழகிய/ வதனனை/ கமல/ கண்ணனை/ பாவங்களை/
பர்வத/ புரந்த3ரம்/ அனக4ம்/
(களைவதில்) மலைகளுக்கு/ இந்திரனை/ பாவமற்றோனை/
ஸனந்த3ன/ நுதம்/ ஆனந்த3/ ஜலதி4ம்/
சனந்தனர்/ போற்றுவோனை/ ஆனந்த/ கடலினை/
அஹி ப்3ரு2ந்த3/ ஸுபூ4ஷண/ வந்தி3த/ சரிதம்/ (ராமம்)
அரவுகளை/ யணிவோன்/ வணங்கும்/ நல்லொழுக்கத்தோனை/ இராமனை...
சரணம் 2
தீ4ரம்/ ஸுர/ பரிவாரம்/ பு4வன/-
தீரனை/ வானோர்/ பரிவாரத்தோனை/ புவனத்திற்கு/
ஆதா4ரம்/ ஸுகு3ண/-ஆகாரம்/
ஆதாரத்தினை/ நற்குணங்கள்/ வடிவினனை/
ஸமலங்காரம்/ து3ர்ஜன/ தூ3ரம்/ ஸ்ரீ ரகு4-/
சிறந்த அலங்காரத்தோனை/ தீயோருக்கு/ தூரமானவனை/ ஸ்ரீ ரகு/
வீரம்/ மே/ ஹ்ரு2தி3/ வாரம் வாரம்/ (ராமம்)
வீரனை/ எனது/ இதயத்தினில்/ எந்நாளும்/ இராமனை...
சரணம் 3
ராஜம்/ நத/ ஸுர/ ராஜம்/ ஸ்துத/ க3ஜ/
கொற்றவனை/ தொழுவோனை/ தேவர்/ தலைவன்/ துதிப்போனை/ கரி/
ராஜம்/ ஸ்1ருதி/ வினுத/-அஜம்/ ஸுத/ ரதி/
அரசன்/ மறைகள்/ போற்றும்/ பிறவாதவனை/ தந்தையை/ இரதி/
ராஜம்/ துரக3/ விராஜம்/ ஸுஜன/
மணாளன்/ வாகனனை/ கருட/ நன்மக்கள்/
ஸமாஜம்/ த்யாக3ராஜ/ ராஜம்/ (ராமம்)
சமூகத்துறைவோனை/ தியாகராசன்/ தலைவனை/ இராமனை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பல்லவி - சில புத்தகங்களில், 'ராக்ஷஸ குல பீ4மம் ப4ஜேஹம் ஸதா3' என்பதும் பல்லவியின் பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
3 - அனக4ம் ஸனந்த3ன - அனக4 ஸனந்த3ன.
Top
மேற்கோள்கள்
2 - பர்வத புரந்த3ரம் - மலைகளுக்கு இந்திரன் - இந்திரன் மலைகளின் செருக்கினையடக்கியதாக. வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டத்தினில் (முதல் அத்தியாயம், செய்யுட்கள் 122-125), மைனாக மலை, சீதையைத் தேடிச் செல்லும் அனுமனுக்கு, தனது கதையினை விவரிப்பதனை நோக்கவும்.
Top
விளக்கம்
4 - ஸுர பரிவாரம் - தேவர் பரிவாரத்தோன். இராமனுடைய அவதாரிய காரியத்தில் உதவி புரிவதற்காக, தேவர்களே குரங்குகளாகவும் மற்ற பிராணிகளாகவும் பிறந்தனர்.
சனகன் மகள் - சீதை
அரவுகளையணிவோன் - சிவன்
இரதி மணாளன் - காமன்
Top
Updated on 14 Jan 2011
3 comments:
திரு கோவிந்தன் அவர்களே
பொருள் சுருக்கம் மற்றும் பதவுரையில் மலைகளுக்கு இந்திரனை என்பதற்குப் பதிலாக இந்திரன் போன்றோனை என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
ஆங்கிலத்தில் who is like indra to mountains என்பது சரியாக உள்ளது.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
நீங்கள் கூறியதற்கு விளக்கம், மேற்கோள்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
வணக்கம்,
கோவிந்தன்.
Dear Sir, I have learnt the following way thevpallavi:
rAmam bhajEham sadA rakSasa kula bhImam
Could you please validate this.
Post a Comment