ராமாபி4ராம ரகு4ராம ஓ ராம
அனுபல்லவி
1தாமஸமுலேல ஸீதா மனோ-ரமண (ரா)
சரணம்
சரணம் 1
2பக3 ஸேயுடேல நா பால நீது3
வக3லேல விட3 ஜாலவு க3ஜேந்த்3ர பால (ரா)
சரணம் 2
நீ ஸொம்மு நேனடு3க3 லேது3 நிண்டு3
மோஸமௌ ப்ரபஞ்சமந்தா3ஸ லேது3 (ரா)
சரணம் 3
ஆஸ நீயெட3 தனகு போது3 நிஜ
தா3ஸ ரக்ஷக நினு வினா க3தியு லேது3 (ரா)
சரணம் 4
நீ ஸரி ஸமானமெவரிலலோ ராம
நீரஜ த3ளாக்ஷ சிக்கிதிரா நீ வலலோ (ரா)
3சரணம் 5
4கல்லலாட3னி தெலிய லேரா நீ-
வல்ல நேரமு கானி நே நீகு வேரா (ரா)
சரணம் 6
ஸ்ரீ பதி நனு மரவ தகு3னா இதி3
பாபமே கானி எட3பா3ய 5மனஸகு3னா (ரா)
சரணம் 7
ஆ-ஜானு பா3ஹு கரமீரா 6ஸ்ரீ த்யாக3-
ராஜுனி ப4வாப்3தி4 7தா3டிஞ்சி பரமீரா (ரா)
பொருள் - சுருக்கம்
- இராமா! களிப்பூட்டுவோனே! இரகுராமா! ஓ இராமா!
- சீதையின் மனம் மகிழ்விப்போனே!
- கரியரசனைக் காத்தோனே!
- உண்மைத் தொண்டரைக் காப்போனே!
- தாமரையிதழ்க் கண்ணா!
- இலக்குமி மணாளா!
- தாமதமேன்?
- பகைமை காட்டுவதேன் என்னிடம்?
- உனது சூழ்ச்சிகளையேன் விடமாட்டயோ?
- உனது சொத்தை நான் கேட்கவில்லை.
- மிக்கு மோசமான இவ்வுலகத்தினில் (எனக்கு) ஆசையில்லை.
- ஆசை உன்னிடம் தனக்குப் போகாது.
- உன்னை யன்றி கதியுமில்லை.
- உனக்கு ஈடிணை யார் இப்புவியில்?
- சிக்கினேனய்யா உனது வலையில்.
- (நீ) பொய்யன் என அறியேனய்யா.
- உன்னால் தவறேயன்றி, நானுனக்கு வேறா?
- என்னை மறக்கத்தகுமா?
- இஃது பாவமே யன்றி, இடை பிரிய மனம் ஒவ்வுமா?
- தாமதமேன்?
- முழந்தாள் நீள (உனது) கைகொடுமய்யா.
- இத்தியாகராசனை பிறவிக்கடலைத் தாண்டுவித்து பரமருளுமைய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/-அபி4ராம/ ரகு4ராம/ ஓ ராம/
இராமா/ களிப்பூட்டுவோனே/ இரகுராமா/ ஓ இராமா/
அனுபல்லவி
தாமஸமுலு/-ஏல/ ஸீதா/ மனோ/-ரமண/ (ரா)
தாமதம்/ ஏன்/ சீதையின்/ மனம்/ மகிழ்விப்போனே/
சரணம்
சரணம் 1
பக3/ ஸேயுட/-ஏல/ நா பால/ நீது3/
பகைமை/ காட்டுவது/ ஏன்/ என்னிடம்/ உனது/
வக3லு/-ஏல/ விட3/ ஜாலவு/ க3ஜ/-இந்த்3ர/ பால/ (ரா)
சூழ்ச்சிகளை/ யேன்/ விட/ மாட்டயோ/ கரி/ யரசனை/ காத்தோனே/
சரணம் 2
நீ/ ஸொம்மு/ நேனு/-அடு3க3 லேது3/ நிண்டு3/
உனது/ சொத்தை/ நான்/ கேட்கவில்லை/ மிக்கு/
மோஸமௌ/ ப்ரபஞ்சமு-அந்து3/-ஆஸ/ லேது3/ (ரா)
மோசமான/ இவ்வுலகத்தினில்/ (எனக்கு) ஆசை/ யில்லை/
சரணம் 3
ஆஸ/ நீயெட3/ தனகு/ போது3/ நிஜ/
ஆசை/ உன்னிடம்/ தனக்கு/ போகாது/ உண்மை/
தா3ஸ/ ரக்ஷக/ நினு/ வினா/ க3தியு/ லேது3/ (ரா)
தொண்டரை/ காப்போனே/ உன்னை/ யன்றி/ கதியும்/ இல்லை/
சரணம் 4
நீ/ ஸரி/ ஸமானமு/-எவரு/-இலலோ/ ராம/
உனக்கு/ ஈடு/ இணை/ யார்/ இப்புவியில்/ இராமா/
நீரஜ/ த3ள/-அக்ஷ/ சிக்கிதிரா/ நீ/ வலலோ/ (ரா)
தாமரை/ யிதழ்/ கண்ணா/ சிக்கினேனய்யா/ உனது/ வலையில்/
சரணம் 5
கல்லலாடு3/-அனி/ தெலிய லேரா/
(நீ) பொய்யன்/ என/ அறியேனய்யா/
நீ-வல்ல/ நேரமு/ கானி/ நே/ நீகு/ வேரா/ (ரா)
உன்னால்/ தவறே/ யன்றி/ நான்/ உனக்கு/ வேறா/
சரணம் 6
ஸ்ரீ/ பதி/ நனு/ மரவ/ தகு3னா/ இதி3/
இலக்குமி/ மணாளா/ என்னை/ மறக்க/ தகுமா/ இஃது/
பாபமே/ கானி/ எட3/-பா3ய/ மனஸு/-அகு3னா/ (ரா)
பாவமே/ யன்றி/ இடை/ பிரிய/ மனம்/ ஒவ்வுமா/
சரணம் 7
ஆ-ஜானு பா3ஹு/ கரமு/-ஈரா/ ஸ்ரீ/
முழந்தாள் நீள/ (உனது) கை/ கொடுமய்யா/ ஸ்ரீ/
த்யாக3ராஜுனி/ ப4வ/-அப்3தி4/ தா3டிஞ்சி/ பரமு/-ஈரா/ (ரா)
தியாகராசனை/ பிறவி/ கடலை/ தாண்டுவித்து/ பரம்/ அருளுமைய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாமஸமுலேல - தாமஸமுயேல.
2 - பக3 ஸேயுடேல நா பால - பக3 ஸேயுடெல்ல நா பாலா : புத்தகங்களில், இதற்கு, 'பகைமை காட்டுவதேன் என்னிடம்' என்றுதான் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, முன்கூறியபடியே ஏற்கப்பட்டது.
3 - சரணம் 5 - இந்த சரணம் ஒரு புத்தகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.
6 - ஸ்ரீ த்யாக3ராஜுனி - த்யாக3ராஜுனி.
7 - தா3டிஞ்சி - தாடி3ஞ்சி : இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'தாண்டுவித்து' என்று பொருளாகும். எனவே 'தா3டிஞ்சி' என்பதே பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
4 - கல்லலாட3னி - புத்தகத்தில், இதற்கு, 'பொய்யன் என' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லினை, 'கல்லலு+ஆடு3+அனி' என்று தான் பிரிக்க இயலும். ஆனால், 'கல்லலு ஆடு3' என்பதற்கு 'பொய் சொல்வது' என்றுதான் பொருளாகும். 'கல்லரீடு3' என்ற சொல்லுக்கு 'பொய்யன்' என்று பொருளாகும். ஆனால், மற்ற புத்தகங்களில், இந்த சரணம் கொடுக்கப்படாமையால், இது சரியா என ஒப்பிட்டுப் பார்க்க இயலவில்லை.
5 - மனஸகு3னா - 'மனது ஒவ்வுமா?' - இது இறைவனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.
பரம் - வீடு
இப்பாடல் பிரகலாதன் அரியினை விழைந்து பாடுவதாக
Top
Updated on 15 Jan 2011