ஸ்ரீ ராம சந்த்3ர ராக4வ ஸகல
லோகாதா4ர த்வமேவ மாமவ
சரணம்
சரணம் 1
கண்டிகெது3ருக3 ராரா ஸ்ரீ ராம
நீவண்டி தை3வமு கானரா (ஸ்ரீ)
சரணம் 2
1விண்டேயெட3கு போது3ரா ஸ்ரீ ராம நா
பேரண்டே நீகெந்த வாது3ரா (ஸ்ரீ)
சரணம் 3
வேஸட தோசதா3யெனா நா மாட
2பரியாசகமுகா3 போயெனா (ஸ்ரீ)
சரணம் 4
3பதி கோபிஞ்சிதே மானவதியைன நிஜ
ஸதி ரீதி நடு3சுகோனா (ஸ்ரீ)
சரணம் 5
தல்லி கொட்டிதே ஸரகு3ன பா3லுடு3 பத3
பல்லவமுல விடு3சுனா (ஸ்ரீ)
சரணம் 6
அகளங்க கு3ண ஸாந்த்3ர நாபை கபட-
மெஞ்சகுமய்ய ராம சந்த்3ர (ஸ்ரீ)
சரணம் 7
பதி நீவு பரம பாவன ஸ்ரீ ராம 4ஸதா3
க3தி நீவு ஸுந்த3ரானன (ஸ்ரீ)
சரணம் 8
சாப த4ர ப்3ரோவ யோசனா நிஜ ப4க்த
பாப திமிர விமோசன (ஸ்ரீ)
சரணம் 9
தா3ஸுடௌ3 த்யாக3ராஜ ரக்ஷக
சித்3விலாஸ ஸாகேத ராஜ (ஸ்ரீ)
பொருள் - சுருக்கம்
- இராம சந்திரா! இராகவா!
- இராமா!
- களங்கமற்றோனே! குணக்குன்றே!
- முற்றிலும் புனித இராமா! எழில் வதனனே!
- வில்லேந்துவோனே! உண்மைத் தொண்டரின் பாவ இருட்டினை விலக்குவோனே!
- தொண்டனாகிய இத்தியாகராசனைக் காப்போனே! சிந்தையில் ஒளிர்வோனே! சாகேத மன்னா!
- அனைத்து உலக ஆதாரம் நீயே.
- காப்பாய் என்னை.
- கண்ணுக்கெதிரில் வாருமய்யா.
- உன்னைப்போன்ற தெய்வத்தைக் காணேனய்யா.
- (பெயரைக்) கேட்டாலே விலகிப்போவரா?
- எனது பெயரென்றால் உனக்கெத்தனை வாதய்யா?
- (எனது) உளைச்சல் தோன்றாததாகியதா?
- எனது சொல் கேலியாகப் போனதா?
- கணவன் கோபித்தால், கற்புடைய, உண்மையான மனைவி போன்று (நான்) நடவேனா?
- தாயடித்தால், உடனே, மகன் (அவளது) கால்களை விடுவானா?
- என்னிடம் சூழ்ச்சி எண்ணாதீருமய்யா.
- (எனது) கணவன் நீ.
- எவ்வமயமும் புகல் நீ.
- காக்க யோசனையா?
- கண்ணுக்கெதிரில் வாருமய்யா.
- காப்பாய் என்னை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ சந்த்3ர/ ராக4வ/ ஸகல/
ஸ்ரீ ராம/ சந்திரா/ இராகவா/ அனைத்து/
லோக/-ஆதா4ர/ த்வம்-ஏவ/ மாம்/-அவ/
உலக/ ஆதாரம்/ நீயே/ என்னை/ காப்பாய்/
சரணம்
சரணம் 1
கண்டிகி/-எது3ருக3/ ராரா/ ஸ்ரீ ராம/
கண்ணுக்கு/ எதிரில்/ வாருமய்யா/ ஸ்ரீ ராமா/
நீவு/-அண்டி/ தை3வமு/ கானரா/ (ஸ்ரீ)
உன்னை/ போன்ற/ தெய்வத்தை/ காணேனய்யா/
சரணம் 2
விண்டே/-எட3கு/ போது3ரா/ ஸ்ரீ ராம/ நா/
(பெயரைக்) கேட்டாலே/ விலகி/ போவரா/ ஸ்ரீ ராமா/ எனது/
பேரு/-அண்டே/ நீகு/-எந்த/ வாது3ரா/ (ஸ்ரீ)
பெயர்/ என்றால்/ உனக்கு/ எத்தனை/ வாதய்யா/
சரணம் 3
வேஸட/ தோசது3/-ஆயெனா/ நா/ மாட/
(எனது) உளைச்சல்/ தோன்றாதது/ ஆகியதா/ எனது/ சொல்/
பரியாசகமுகா3/ போயெனா/ (ஸ்ரீ)
கேலியாக/ போனதா/
சரணம் 4
பதி/ கோபிஞ்சிதே/ மானவதி-ஐன/ நிஜ/
கணவன்/ கோபித்தால்/ கற்புடைய/ உண்மையான/
ஸதி/ ரீதி/ நடு3சுகோனா/ (ஸ்ரீ)
மனைவி/ போன்று/ (நான்) நடவேனா/
சரணம் 5
தல்லி/ கொட்டிதே/ ஸரகு3ன/ பா3லுடு3/
தாய்/ அடித்தால்/ உடனே/ மகன்/ (அவளது)
பத3 பல்லவமுல/ விடு3சுனா/ (ஸ்ரீ)
கால்களை/ விடுவானா/
சரணம் 6
அகளங்க/ கு3ண/ ஸாந்த்3ர/ நாபை/ கபடமு/
களங்கமற்றோனே/ குண/ குன்றே/ என்னிடம்/ சூழ்ச்சி/
எஞ்சகுமு/-அய்ய/ ராம/ சந்த்3ர/ (ஸ்ரீ)
எண்ணாதீரும்/ அய்யா/ இராம/ சந்திரா/
சரணம் 7
பதி/ நீவு/ பரம/ பாவன/ ஸ்ரீ ராம/ ஸதா3/
(எனது) கணவன்/ நீ/ முற்றிலும்/ புனித/ ஸ்ரீ ராமா/ எவ்வமயமும்/
க3தி/ நீவு/ ஸுந்த3ர/-ஆனன/ (ஸ்ரீ)
புகல்/ நீ/ எழில்/ வதனனே/
சரணம் 8
சாப/ த4ர/ ப்3ரோவ/ யோசனா/ நிஜ/ ப4க்த/
வில்/ ஏந்துவோனே/ காக்க/ யோசனையா/ உண்மை/ தொண்டரின்/
பாப/ திமிர/ விமோசன/ (ஸ்ரீ)
பாவ/ இருட்டினை/ விலக்குவோனே/
சரணம் 9
தா3ஸுடௌ3/ த்யாக3ராஜ/ ரக்ஷக/
தொண்டனாகிய/ இத்தியாகராசனை/ காப்போனே/
சித்/-விலாஸ/ ஸாகேத/ ராஜ/ (ஸ்ரீ)
சிந்தையில்/ ஒளிர்வோனே/ சாகேத/ மன்னா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், சரணங்கள் 3 முதல் 8 வரை, வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
2 - பரியாசகமுகா3 - பரிஹாஸகமுக3.
4 - ஸதா3 க3தி - ஸத்3-க3தி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - விண்டேயெட3கு போது3ரா - 'கேட்டால் விலகிப் போவரா?' அடுத்த வரியில், தியாகராஜர் 'எனது பெயரென்றால் எத்தனை வாதய்யா?' என்று கேட்கின்றார். எனவே, 'கேட்டால்' என்பது 'பெயரை'க் குறிக்கும் - 'பெயரைக் கேட்டால்' என.
3 - பதி கோபிஞ்சிதே - கணவன் கோபித்தால் - ஏழாவது சரணத்தில், தியாகராஜர், 'கணவன் நீ' என்று கூறுகின்றார்.
சாகேத - அயோத்தி நகரம்
Top
Updated on 17 Jan 2011
No comments:
Post a Comment