Thursday, December 16, 2010

தியாகராஜ கிருதி - மேலுகோவய்யா - ராகம் பௌ4ளி - Melukovayya - Raga Bhauli

பல்லவி
மேலுகோவய்ய மம்மேலுகோ ராம
மேலைன ஸீதா ஸமேத நா பா4க்3யமா

சரணம்
சரணம் 1
நாரதா3து3லு நின்னு கோரி நீ மஹிம-
லவ்வாரிகா3 பாடு3சுன்னாரிபுடு3 தெல்ல-
வாரகா3 வச்சினதி3 ஸ்ரீ ராம நவனீத
க்ஷீரமுலு 1பா3கு3கா3னாரகி3ம்பனு வேக3 (மே)<


சரணம் 2
2ணி ஸ1யன அனிமிஷ ரமணுலூடி33மு ஸேய
அணுகுவக3 நிண்டா3ரு ப்ரணுதி ஜேஸெத3ரு
2மணி-மயாப4ரணுலை 3அணிமாது3லிடு3 தீ3ப-
மணுலு தெலுபாயெனு தரணி வம்ஸ1 வர திலக (மே)


சரணம் 3
ராஜ ராஜேஸ்1வர ப4-ராஜ முக2 ஸாகேத
ராஜ ஸத்3-கு3ண த்யாக3ராஜ நுத சரண
ராஜன்ய 4விபு343ண ராஜாது3லெல்ல நினு
பூஜிம்ப காசினாரீ ஜக3மு பாலிம்ப (மே)


பொருள் - சுருக்கம்
  • இராமா! மேதகு சீதையுடனுறையே! எனது பேறே!
  • அரவணையோனே! பகலவன் குல வரத்திலகமே!
  • பேரரசர்க்கு ஈசனே! தாரையரசன் முகத்தோனே! சாகேத மன்னா! நற்பண்பினனே! தியாகராசன் போற்றும் திருவடியோனே! அரசே!

  • துயிலெழுவாயய்யா.
  • எம்மையாள்வாய்.

    • நாரதர் ஆகியோர் உன்னை வேண்டி, உனது மகிமைகளை விரிவாகப் பாடுகின்றனர், இப்போழ்து;
    • பொழுது புலரப் போகின்றது;

  • வெண்ணெய், பால் ஆகியவற்றை நன்கு, ஏற்றருள விரைவாகத் துயிலெழுவாயய்யா.

    • வான் மடந்தையர், ஊழியம் செய்ய, பணிவுடன், நிரம்பத் துதி செய்கின்றனர்;
    • மணிமயமான நகையணிந்தவராகி, அணிமாதிகள் இடும் தீப மணிகள் வெளிறலாயின;

  • துயிலெழுவாயய்யா.

    • வானோர் தலைவன், மற்றோர் யாவரும் உன்னை வழிபடக் காத்துள்ளனர்;

  • இவ்வுலகத்தைப் பேணத் துயிலெழுவாயய்யா.

  • எம்மையாள்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மேலுகோ/-அய்ய/ மம்மு/-ஏலுகோ/ ராம/
துயிலெழுவாய்/ அய்யா/ எம்மை/ யாள்வாய்/ இராமா/

மேலைன/ ஸீதா/ ஸமேத/ நா/ பா4க்3யமா/
மேதகு/ சீதை/ உடனுறையே/ எனது/ பேறே/


சரணம்
சரணம் 1
நாரத3/-ஆது3லு/ நின்னு/ கோரி/ நீ/ மஹிமலு/
நாரதர்/ ஆகியோர்/ உன்னை/ வேண்டி/ உனது/ மகிமைகளை/

அவ்வாரிகா3/ பாடு3சு-உன்னாரு/-இபுடு3/
விரிவாக/ பாடுகின்றனர்/ இப்போழ்து/

தெல்லவாரகா3/ வச்சினதி3/ ஸ்ரீ ராம/ நவனீத/
பொழுது புலர/ போகின்றது/ ஸ்ரீ ராமா/ வெண்ணெய்/

க்ஷீரமுலு/ பா3கு3கா3னு/-ஆரகி3ம்பனு/ வேக3/ (மே)
பால் ஆகியவற்றை/ நன்கு/ ஏற்றருள/ விரைவாக/ துயிலெழுவாயய்யா...


சரணம் 2
2ணி/ ஸ1யன/ அனிமிஷ/ ரமணுலு/-ஊடி33மு/ ஸேய/
அரவு/ அணையோனே/ வான்/ மடந்தையர்/ ஊழியம்/ செய்ய/

அணுகுவக3/ நிண்டா3ரு/ ப்ரணுதி/ ஜேஸெத3ரு/
பணிவுடன்/ நிரம்ப/ துதி/ செய்கின்றனர்/

மணி/-மய/-ஆப4ரணுலை/ அணிமா-ஆது3லு/-இடு3/ தீ3ப/-
மணி/ மயமான/ நகையணிந்தவராகி/ அணிமாதிகள்/ இடும்/ தீப/

மணுலு/ தெலுபு-ஆயெனு/ தரணி/ வம்ஸ1/ வர/ திலக/ (மே)
மணிகள்/ வெளிறலாயின/ பகலவன்/ குல/ வர/ திலகமே/ துயிலெழுவாயய்யா...


சரணம் 3
ராஜ ராஜ/-ஈஸ்1வர/ ப4/-ராஜ/ முக2/ ஸாகேத/
பேரரசர்க்கு/ ஈசனே/ தாரை/ யரசன்/ முகத்தோனே/ சாகேத/

ராஜ/ ஸத்3-கு3ண/ த்யாக3ராஜ/ நுத/ சரண/
மன்னா/ நற்-பண்பினனே/ தியாகராசன்/ போற்றும்/ திருவடியோனே/

ராஜன்ய/ விபு343ண/ ராஜ/-ஆது3லு/-எல்ல/ நினு/
அரசே/ வானோர்/ தலைவன்/ மற்றோர்/ யாவரும்/ உன்னை/

பூஜிம்ப/ காசினாரு/-ஈ/ ஜக3மு/ பாலிம்ப/ (மே)
வழிபட/ காத்துள்ளனர்/ இந்த/ உலகத்தை/ பேண/ துயிலெழுவாயய்யா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பா3கு3கா3னாரகி3ம்பனு - பா3கு33னாரகி3ம்பனு.

2 - மணி-மயாப4ரணுலை - மணி-மயாப4ரணுலௌ.

Top

மேற்கோள்கள்
3 - அணிமாது3லு - அணிமா சித்திகள் - அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.

அணிமா சித்திகளைப் பற்றி விவரங்களறிய ஸ்வாமி சிவானந்தரின் 'குண்டலினி யோகம்' (Kundalini Yoga) நோக்கவும்.

Top

விளக்கம்
4 - விபு34 - இச்சொல்லுக்கு 'சிறந்த அறிஞர்' என்றும் பொருளாகும்.

தாரையரசன் - மதி

Top


Updated on 16 Dec 2010

No comments: