Monday, December 20, 2010

தியாகராஜ கிருதி - கருணா ஜலதே4 - ராகம் நாத நாமக்ரிய - Karunaa Jaladhe - Raga Nada Namakriya

பல்லவி
கருணா ஜலதே4 தா31ரதே2
கமனீயானன ஸுகு3ண நிதே4

சரணம்
சரணம் 1
நீ மயமேகா31னிலனு-
நேமனி நே தூ3ருது3னு
(க)


சரணம் 2
நிஜ தா3ஸுல அனுப4வமொகடி
நினு தெலியனி ஜன மதமொகடி (க)


சரணம் 3
வலசுசு நாமமு ஸேயுது3ரே 2நினு
தலசுசு
ப்ரொத்3து3 போகொ3ட்டுது3ரே (க)


சரணம் 4
ஸு-க்ரு2தமுலொப்பகி3ந்துரே நீ
ப்ரக்ரு2தினி தெலிஸியேகி3ந்துரே (க)


சரணம் 5
மனஸாரக3 பூஜிந்துரே 3நினு
மாடி மாடிகி
யோஜிந்துரே (க)


சரணம் 6
நினு 4கனுலகு கன கோருது3ரே 5நவ
நிது4
ப்3பி3ன ஸுக2முனு கோரரே (க)


சரணம் 7
நீவன்னிடயனி பல்குது3ரே
6நீவே தானனி குலுகுது3ரே (க)


சரணம் 8
தமலோ 7மெலகு3சுனுந்து3ரே
தாரக ரூபுனி கந்து3ரே (க)


சரணம் 9
பா43வத ப்ரஹ்லாத3 ஹித ராம
பா4வுக 8த்யாக3ராஜ நுத (க)


பொருள் - சுருக்கம்
 • கருணைக்கடலே, தசரதன் மைந்தா! விரும்பத்தகு வதனமுடை நற்பண்புச் செல்வமே!
 • பெருந் தொண்டன் பிரகலாதனுக்கினிய இராமா! பேறுடைத் தியாகராசன் போற்றுவோனே!

 • உனது இயல்பேயன்றோ (யாவும்) புவியினில்! (இதில்) என்னவென்று நான் குறை கூறுவேன்?

 • உண்மையான தொண்டர்களின் அனுபவமொன்று; உன்னையறியா மக்களின் கருத்து வேறொன்று;

 • (உண்மையான தொண்டர்கள்) -
  • காதலுடன் (உனது) திருநாமம் உரைப்பரே! உன்னை நினைந்துப் பொழுதைக் கழிப்பரே!
  • உனது நற்செயல்களை ஒப்புவிப்பரே! உனது இயற்கையை யறிந்து, அவ்வழி நடப்பரே!
  • உன்னை மனதார வழிபடுவரே! உன்னை திரும்பத் திரும்ப மனதில் யோசிப்பரே!
  • உன்னைக் கண்களால் காண விழைவரே! நவ நிதிகள் பெற்ற சுகத்தினையும் வேண்டரே!
  • நீயே யாவற்றிலும் (உள்ளாய்) என்பரே! நீயே தானெனப் பெருமிதமுறுவரே!
  • தம்மிலேயே திளைத்திருப்பரே! தாரக உருவத்தோனைக் காண்பரே!பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருணா/ ஜலதே4/ தா31ரதே2/
கருணை/ கடலே/ தசரதன்/ மைந்தா/

கமனீய/-ஆனன/ ஸுகு3ண/ நிதே4/
விரும்பத்தகு/ வதனமுடை/ நற்பண்பு/ செல்வமே/


சரணம்
சரணம் 1
நீ/ மயமேகா3/-இலனு/-
உனது/ இயல்பேயன்றோ/ (யாவும்) புவியினில்/

ஏமனி/ நே/ தூ3ருது3னு/ (க
(இதில்) என்னவென்று/ நான்/ குறை கூறுவேன்/


சரணம் 2
நிஜ/ தா3ஸுல/ அனுப4வமு/-ஒகடி/
உண்மையான/ தொண்டர்களின்/ அனுபவம்/ ஒன்று/

நினு/ தெலியனி/ ஜன/ மதமு/-ஒகடி/ (க)
உன்னை/ யறியா/ மக்களின்/ கருத்து/ வேறொன்று/


சரணம் 3
வலசுசு/ நாமமு/ ஸேயுது3ரே/ நினு/
காதலுடன்/ (உனது) திருநாமம்/ உரைப்பரே/ உன்னை/

தலசுசு/ ப்ரொத்3து3/ போகொ3ட்டுது3ரே/ (க)
நினைந்து/ பொழுதை/ கழிப்பரே/


சரணம் 4
ஸு-க்ரு2தமுலு/-ஒப்பகி3ந்துரே/ நீ/
(உனது) நற்செயல்களை/ ஒப்புவிப்பரே/ உனது/

ப்ரக்ரு2தினி/ தெலிஸி/-ஏகி3ந்துரே/ (க)
இயற்கையை/ யறிந்து/, (அவ்)வழி நடப்பரே/


சரணம் 5
மனஸாரக3/ பூஜிந்துரே/ நினு/
(உன்னை) மனதார/ வழிபடுவரே/ உன்னை/

மாடி/ மாடிகி/ யோஜிந்துரே/ (க)
திரும்ப/ திரும்ப/ (மனதில்) யோசிப்பரே/


சரணம் 6
நினு/ கனுலகு/ கன/ கோருது3ரே/ நவ/
உன்னை/ கண்களால்/ காண/ விழைவரே/ நவ/

நிது4லு/-அப்3பி3ன/ ஸுக2முனு/ கோரரே/ (க)
நிதிகள்/ பெற்ற/ சுகத்தினையும்/ வேண்டரே/


சரணம் 7
நீவு/-அன்னிட/-அனி பல்குது3ரே/
நீயே/ யாவற்றிலும் (உள்ளாய்)/ என்பரே/

நீவே/ தானு/-அனி/ குலுகுது3ரே/ (க)
நீயே/ தான்/ என/ பெருமிதமுறுவரே/


சரணம் 8
தமலோ/ மெலகு3சுனு/-உந்து3ரே/
தம்மிலேயே/ திளைத்து/ இருப்பரே/

தாரக/ ரூபுனி/ கந்து3ரே/ (க)
தாரக/ உருவத்தோனை/ காண்பரே/


சரணம் 9
பா43வத/ ப்ரஹ்லாத3/ ஹித/ ராம/
பெருந் தொண்டன்/ பிரகலாதனுக்கு/ இனிய/ இராமா/

பா4வுக/ த்யாக3ராஜ/ நுத/ (க)
பேறுடை/ தியாகராசன்/ போற்றுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - இலனுநேமனி நே தூ3ருது3னு - இலனு ஏமனி நே தூ3ருது3னு.

2 - நினு தலசுசு - தலசுசு.

3 - நினு மாடி மாடிகி - மாடி மாடிகி.

4 - கனுலகு கன - கனுலனு கன.

8 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ நுத ராம.

Top

மேற்கோள்கள்
5 - நவ நிது4லு - நவ நிதி - கச்சப, கற்ப, சங்க, நந்த, நீல, பதும, மகா, மகாபதும, முகுந்த நிதிகள் - குபேரனின் நவநிதிகள்

6 - நீவே தானனி - நீயே தானென - சாரூப்பியம் எனப்படும் இறைவனுடன் உருவ ஒற்றுமை - இது குறித்து, ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி' (செய்யுள் 28) நோக்கவும் -

"உனது வழிபாட்டினால், 'சாரூப்பியம்' (உன்னுருவும் பெறல்);
'சிவ', 'மகாதேவ' என்று உனது திருநாமங்கள் உரைப்பதனால், 'சாமீப்பியம்' (உனதண்மை);
சிவ பக்தியில் ஈடுபட்ட மக்களின் இணக்கத்தினால், உரையாடலினால், 'சாலோக்கியம்' (உனதுலகம் உறைதல்);
பவானியின் மணாளா! அசைவன மற்றும் அசையாதனவாகிய உனது வடிவத்தின் தியானத்தினால், 'சாயுச்சியம்' (உன்னோடொன்றுதல்);
இங்ஙனம், இறைவா! இந்த உடலிலேயே பிறவியின் பயன் அடைவேன்.
(ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
7 - மெலகு3சு - இச்சொல்லுக்கு, சமஸ்கிருத 'ஸஞ்சார' (உடனுறைதல்) என்ற பொருளாகும். இச்சொல்லினை (ஸஞ்சார) தியாகராஜரின் 'மானஸ ஸஞ்சரரே ராமே', 'எந்த3ரோ மஹானுபா3வுலு' (2-வது ஸ்வர சாகித்தியம்) மற்றும் 'ஸுந்த3ர தர தே3ஹம்' (3-வது சரணம்) என்ற கீர்த்தனைகளில் நோக்கவும்.

தாரக உருவத்தோன் - ராமன் - 'ராம' எனும் நாமம் பிறவிக் கடலினைக் கடத்துவிப்பது.

Top


Updated on 21 Dec 2010

No comments: