மாமவ ஸததம் ரகு4 நாத2
அனுபல்லவி
ஸ்ரீமதி3னான்வய ஸாக3ர சந்த்3ர
ஸ்1ரித ஜன ஸு1ப4 ப2லத3 ஸுகு3ண ஸாந்த்3ர (மா)
சரணம்
ப4க்தி ரஹித ஸா1ஸ்த்ர-வித3தி தூ3ர
பங்கஜ த3ள நயன ந்ரு2ப குமார
1ஸ1க்தி தனய ஹ்ரு2தா3லய ரகு4 வீர
ஸா1ந்த நிர்விகார
யுக்த வசன கனகாசல தீ4ர
உரக3 ஸ1யன முனி ஜன பரிவார
த்யக்த காம மோஹ மத3 க3ம்பீ4ர
த்யாக3ராஜ ரிபு ஜலத3 ஸமீர (மா)
பொருள் - சுருக்கம்
- ஓ இரகு நாதா!
- புனித சூரிய குலக் கடலின் மதியே! சார்ந்தோருக்கு நற்பயனளிப்போனே! பண்புக் குவியலே!
- பக்தியற்ற சாத்திர வல்லுனருக்கு வெகு தூரமானவனே! தாமரையிதழ்க் கண்ணா! மன்னன் மகனே! சக்தி மைந்தன் இதயத்திலுறைவோனே! இரகு வீரா! அமைதியானவனே! என்றும் மாறா பரம்பொருளே! உகந்த சொல்லுரைப்போனே! பொன்மலை நிகர் தீரனே! அரவணையோனே! முனிவர்கள் சுற்றத்தோனே! காமம், மோகம், செருக்கினைத் துறந்தோனே! மாட்சிமை மிக்கோனே! தியாகராசனின் பகைவரெனும் முகிற்கூட்டத்தைக் கலைக்கும் புயலே!
- என்னையெப்போதும் காப்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாம்/-அவ/ ஸததம்/ ரகு4 நாத2/
என்னை/ காப்பாய்/ எப்போதும்/ ஓ இரகு நாதா/
அனுபல்லவி
ஸ்ரீமத்3/-இன/-அன்வய/ ஸாக3ர/ சந்த்3ர/
புனித/ சூரிய/ குல/ கடலின்/ மதியே/
ஸ்1ரித ஜன/ ஸு1ப4/ ப2லத3/ ஸுகு3ண/ ஸாந்த்3ர/ (மா)
சார்ந்தோருக்கு/ நற்/ பயன் அளிப்போனே/ பண்பு/ குவியலே/
சரணம்
ப4க்தி/ ரஹித/ ஸா1ஸ்த்ர/-வித்3/-அதி/ தூ3ர/
பக்தி/ யற்ற/ சாத்திர/ வல்லுனருக்கு/ வெகு/ தூரமானவனே/
பங்கஜ/ த3ள/ நயன/ ந்ரு2ப/ குமார/
தாமரை/ யிதழ்/ கண்ணா/ மன்னன்/ மகனே/
ஸ1க்தி/ தனய/ ஹ்ரு2த்3/-ஆலய/ ரகு4 வீர/
சக்தி/ மைந்தன்/ இதயத்தில்/ உறைவோனே/ இரகு வீரா/
ஸா1ந்த/ நிர்விகார/
அமைதியானவனே/ என்றும் மாறா பரம்பொருளே/
யுக்த/ வசன/ கனக/-அசல/ தீ4ர/
உகந்த/ சொல்லுரைப்போனே/ பொன்/ மலை/ (நிகர்) தீரனே/
உரக3/ ஸ1யன/ முனி ஜன/ பரிவார/
அரவு/ அணையோனே/ முனிவர்கள்/ சுற்றத்தோனே/
த்யக்த/ காம/ மோஹ/ மத3/ க3ம்பீ4ர/
துறந்தோனே/ காமம்/ மோகம்/ செருக்கினை/ மாட்சிமை மிக்கோனே/
த்யாக3ராஜ/ ரிபு/ ஜலத3/ ஸமீர/ (மா)
தியாகராசனின்/ பகைவரெனும்/ முகிற்கூட்டத்தைக் கலைக்கும்/ புயலே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ஸ1க்தி தனய - சக்தி மைந்தன் - பொதுவாக, 'சக்தி', பார்வதியைக் குறிக்கும். எனவே 'சக்தி மைந்தன்', 'முருகன்' அல்லது 'கணபதியை'க் குறிக்கவேண்டும். ஆனால், புத்தகங்களில், இதற்கு 'வசிஷ்டர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
வசிஷ்டரின் 100 மைந்தர்களில், 'சக்தி' என்பவர் மூத்தவராகும். சக்தியின் புதல்வர் 'பராசரர்'. எனவே, 'சக்தி தனய' என்பது பராசரரைக் குறிக்கலாம் - வசிஷ்டரையல்ல. சக்தி.
பராசரரின் மகன் 'வியாச ரிஷி'யாகும். பராசரர்.
எனவே, 'சக்தி தனய' என்பதற்கு 'பராசரர்' என்று மாற்றுப் பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.
Top
விளக்கம்
பொன்மலை - மேரு
Top
Updated on 11 Dec 2010
No comments:
Post a Comment