Tuesday, October 5, 2010

தியாகராஜ கிருதி - சல்லரே ராம - ராகம் ஆஹிரி - Challare Rama - Raga Ahiri - Prahlada Bhakti Vijayam

பல்லவி
சல்லரே 1ராமசந்த்3ருனி பைனி பூல (ச)

சரணம்
சரணம் 1
ஸொம்பைன மனஸுதோனிம்பைன ப3ங்கா3ரு
3ம்பலதோ மஞ்சி சம்பகமுலனு (ச)


சரணம் 2
பாமரமுலு மானி நேமமுதோனு
ரமா மனோ-ஹருனி பைனி தாமர பூல (ச)


சரணம் 3
ஈ ஜக3தினி தே3வ பூஜார்ஹமௌ பூல
2ராஜிலோ மேலைன ஜாஜி ஸுமமுல (ச)


சரணம் 4
அமித பராக்ரம த்3யு-மணி குலார்ணவ
விமல சந்த்3ருனிபை ஹ்ரு2த்-குமுத3 ஸுமமுல (ச)


சரணம் 5
தா4த வினுதுடை3ன ஸீதா பதி பைனி
சேதுலதோ பாரிஜாத ஸுமமுல (ச)


சரணம் 6
என்ன ரானி ஜனன மரணமுலு லேகுண்ட3
மனஸார த்யாக3ராஜ நுதுனி பைனி பூல (ச)


பொருள் - சுருக்கம்
  • தூவுவீர், இராமசந்திரனின் மீது மலர்களை!

    • களித்த மனத்துடன், அழகிய பொற் கூடைகளோடு, சிறந்த செண்பக மலர்களை,
    • தீவினைகளைக் கைவிட்டு, நியமத்துடன், இரமையின் மனம் கவர்ந்தோனின் மீது தாமரை மலர்களை,
    • இப்புவியில், கடவுளர் வழிபாட்டுக்குகந்த மலர்களின் வரிசையில், உயர்ந்த சாதி மல்லிகை மலர்களை,
    • அளவிடற்கரிய வல்லமையுடைய, வான்-மணி குலக்கடலின் களங்கமற்ற மதியின் மீது, இதயக் குமுத மலர்களை,
    • தாதையினால் போற்றப் பெற்ற, சீதாபதியின் மீது, கைகளினால், பாரிசாத மலர்களை,
    • எண்ண இயலாத பிறப்பு இறப்புகள் இல்லாதிருக்க, மனதார, தியாகராசன் போற்றுவோன் மீது மலர்களைத்

  • தூவுவீர், இராமசந்திரனின் மீது!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சல்லரே/ ராமசந்த்3ருனி/ பைனி/ பூல/ (ச)
தூவுவீர்/ இராமசந்திரனின்/ மீது/ மலர்களை/


சரணம்
சரணம் 1
ஸொம்பைன/ மனஸுதோனு/-இம்பைன/ ப3ங்கா3ரு/
களித்த/ மனத்துடன்/ அழகிய/ பொற்/

3ம்பலதோ/ மஞ்சி/ சம்பகமுலனு/ (ச)
கூடைகளோடு/ சிறந்த/ செண்பக மலர்களை/ தூவுவீர்...


சரணம் 2
பாமரமுலு/ மானி/ நேமமுதோனு/
தீவினைகளை (அறியாமையினை)/ கைவிட்டு/ நியமத்துடன்/

ரமா/ மனோ/-ஹருனி/ பைனி/ தாமர/ பூல/ (ச)
இரமையின்/ மனம்/ கவர்ந்தோனின்/ மீது/ தாமரை/ மலர்களை/ தூவுவீர்...


சரணம் 3
ஈ/ ஜக3தினி/ தே3வ/ பூஜ/-அர்ஹமௌ/ பூல/
இந்த/ புவியில்/ கடவுளர்/ வழிபாட்டுக்கு/ உகந்த/ மலர்களின்/

ராஜிலோ/ மேலைன/ ஜாஜி/ ஸுமமுல/ (ச)
வரிசையில்/, உயர்ந்த/ சாதி மல்லிகை/ மலர்களை/ தூவுவீர்...


சரணம் 4
அமித/ பராக்ரம/ த்3யு/-மணி/ குல/-அர்ணவ/
அளவிடற்கரிய/ வல்லமையுடைய/ வான்/-மணி/ குல/ கடலின்/

விமல/ சந்த்3ருனிபை/ ஹ்ரு2த்/-குமுத3/ ஸுமமுல/ (ச)
களங்கமற்ற/ மதியின் மீது/ இதய/ குமுத/ மலர்களை/ தூவுவீர்...


சரணம் 5
தா4த/ வினுதுடை3ன/ ஸீதா/ பதி/ பைனி/
தாதையினால்/ போற்றப் பெற்ற/ சீதா/ பதியின்/ மீது/

சேதுலதோ/ பாரிஜாத/ ஸுமமுல/ (ச)
கைகளினால்/ பாரிசாத/ மலர்களை/ தூவுவீர்...


சரணம் 6
என்ன/ ரானி/ ஜனன/ மரணமுலு/ லேக/-உண்ட3/
எண்ண/ இயலாத/ பிறப்பு/ இறப்புகள்/ இல்லாது/ இருக்க/

மனஸார/ த்யாக3ராஜ/ நுதுனி/ பைனி/ பூல/ (ச)
மனதார/ தியாகராசன்/ போற்றுவோன்/ மீது/ மலர்களை/ தூவுவீர்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமசந்த்3ருனி பைனி - ராமசந்த்3ருனி பை.

2 - ராஜிலோ - ராஜில்லு : 'ராஜிலோ' என்ற சொல்லுக்கு, 'வரிசையில்' என்ற பொருளாகும். இதற்கு அடுத்து வரும், 'மேலைன' (உயர்ந்த) என்ற சொல்லினால், 'ராஜிலோ' என்ற சொல்லே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இறைவன், பிரகலாதனுக்கு அருள் புரிந்தபின்னர், இறைவனை, பிரகலாதன் எங்ஙனம் வழிபட்டான் என்பதனை, தியாகராஜர், இந்தப் பாடலில் சித்தரிக்கின்றார். இப்பாடல், இந்த நாட்டிய நாடகத்தின் கடைசி பகுதியாகும்.

வான்-மணி - பகலவன்
பகலவன் குலக்கடலின் களங்கமற்ற மதி - இராமன்
தாதை - பிரமன்

Top


Updated on 06 Oct 2010

No comments: