Sunday, October 3, 2010

தியாகராஜ கிருதி - எடுல காபாடு3து3வோ - ராகம் ஆஹிரி - Etula Kaapaaduduvo - Raga Ahiri

பல்லவி
எடுல காபாடு3து3வோ ஸ்ரீ ராமசந்த்3ர ந(ன்னெடுல)

அனுபல்லவி
1எடுல காபாடு3து3வோ ரகு4வீர
மடு மாய ஸம்ஸாரமந்து3 தகி3லின ந(ன்னெடுல)

சரணம்
சரணம் 1
அனு தி3னமுனு தா3ர தனய வர்கா3து3
பாலனமு ஸேயுட-கொரகு த4னமுலு கலிகி3
மனுஜுல பொக3டி3யார்ஜிஞ்சின பைகமுல ஜூசி
தனகு ஸரி லேத3னி பி3கு3வுன திரிகி3ன ந(ன்னெடுல)


சரணம் 2
காயஜ ஜனக நா ப்ராயமுலெல்லனு
மாயா பூரிதுலைன தா3யாது3ல சேத
ஸாய பர்யந்தமு காய க்லேஸ1மு ஜெந்த3னாயெனு
கானி மௌனி த்4யேய நினு தெலிய லேனி ந(ன்னெடுல)


சரணம் 3
ஸதமனி பா3ந்த4வுல ஜதனு நம்மி மதிகி
ஹிதவு லேக ஓ பதித பாவன
2ஸந்ததமு த்யாக3ராஜ ஹித ஸுர நிகர
பூஜித நின்னே ஸ1ரணு ஜொச்சிதி கானி ராம ந(ன்னெடுல)


பொருள் - சுருக்கம்
  • இராமசந்திரா!
  • இரகுவீரா!
  • காமனை யீன்றோனே! முனிவர் தியானிப்போனே!
  • ஓ வீழ்ந்தோரைப் புனிதப் படுத்துவோனே! தியாகராசனுக்கு இனியோனே! வானோர்கள் தொழுவோனே! இராமா!

  • எப்படிக் காப்பாயோ, என்னை?
  • தோன்றி மறையும் உலக வாழ்க்கையினில் சிக்கிய என்னை எப்படிக் காப்பாயோ?

    • அனுதினமும், மனைவி, மக்கள் வகையினரைப் பேணுவதற்காக, செல்வம் படைத்த மனிதர்களைப் புகழ்ந்து ஈட்டிய பணத்தைக் கண்டு, தனக்கு ஈடில்லையென, பிகுவுடன் திரிந்த என்னை,
    • எனது ஆயுள் முழுதும், மாயை நிரம்பிய பங்காளிகளின் கையில், (தினமும்) மாலை வரை, உடல் துயருறலாயிற்றே யன்றி, உன்னை யறியாத என்னை,
    • நிலையென, உறவினர் கும்பலை நம்பி, உள்ளத்திற்கு இதமின்றி, எவ்வமயமும், உன்னையே சரணடைந்தேன்; ஆயினும், என்னை,

  • எப்படிக் காப்பாயோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எடுல/ காபாடு3து3வோ/ ஸ்ரீ ராமசந்த்3ர/ நன்னு/-(எடுல)
எப்படி/ காப்பாயோ/ ஸ்ரீ ராமசந்திரா/ என்னை/


அனுபல்லவி
எடுல/ காபாடு3து3வோ/ ரகு4வீர/
எப்படி/ காப்பாயோ/ இரகுவீரா/

மடு மாய/ ஸம்ஸாரமு-அந்து3/ தகி3லின/ நன்னு/-(எடுல)
தோன்றி மறையும்/ உலக வாழ்க்கையினில்/ சிக்கிய/ என்னை/ எப்படி...


சரணம்
சரணம் 1
அனு தி3னமுனு/ தா3ர/ தனய/ வர்க3-ஆது3ல/
அனுதினமும்/ மனைவி/ மக்கள்/ வகையினரை/

பாலனமு ஸேயுட-கொரகு/ த4னமுலு/ கலிகி3ன/
பேணுவதற்காக/ செல்வம்/ படைத்த/

மனுஜுல/ பொக3டி3/-ஆர்ஜிஞ்சின/ பைகமுல/ ஜூசி/
மனிதர்களை/ புகழ்ந்து/ ஈட்டிய/ பணத்தை/ கண்டு/

தனகு/ ஸரி/ லேது3/-அனி/ பி3கு3வுன/ திரிகி3ன/ நன்னு/-(எடுல)
தனக்கு/ ஈடு/ இல்லை/ யென/ பிகுவுடன்/ திரிந்த/ என்னை/ எப்படி...


சரணம் 2
காயஜ/ ஜனக/ நா/ ப்ராயமுலு/-எல்லனு/
காமனை/ யீன்றோனே/ எனது/ ஆயுள்/ முழுதும்/

மாயா/ பூரிதுலைன/ தா3யாது3ல/ சேத/
மாயை/ நிரம்பிய/ பங்காளிகளின்/ கையில்/

ஸாய/ பர்யந்தமு/ காய/ க்லேஸ1மு/ ஜெந்த3னு-ஆயெனு/
(தினமும்) மாலை/ வரை/ உடல்/ துயர்/ உறலாயிற்றே/

கானி/ மௌனி/ த்4யேய/ நினு/ தெலிய லேனி/ நன்னு/-(எடுல)
அன்றி/ முனிவர்/ தியானிப்போனே/ உன்னை/ யறியாத/ என்னை/ எப்படி...


சரணம் 3
ஸதமு/-அனி/ பா3ந்த4வுல/ ஜதனு/ நம்மி/ மதிகி/
நிலை/ யென/ உறவினர்/ கும்பலை/ நம்பி/ உள்ளத்திற்கு/

ஹிதவு/ லேக/ ஓ பதித/ பாவன/
இதம்/ இன்றி/ ஓ வீழ்ந்தோரை/ புனிதப் படுத்துவோனே/

ஸந்ததமு/ த்யாக3ராஜ/ ஹித/ ஸுர நிகர/
எவ்வமயமும்/ தியாகராசனுக்கு/ இனியோனே/ வானோர்கள்/

பூஜித/ நின்னே/ ஸ1ரணு/ ஜொச்சிதி/ கானி/ ராம/ நன்னு/-(எடுல)
தொழுவோனே/ உன்னையே/ சரண்/ அடைந்தேன்/ ஆயினும்/ இராமா/ என்னை/ எப்படி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - எடுல காபாடு3து3வோ ரகு4வீர - அனுபல்லவியின் இச்சொற்கள், சில புத்தகங்களில் கொடுக்கப்படவில்லை.

2 - ஸந்ததமு த்யாக3ராஜ ஹித - ஸந்தத த்யாக3ராஜ ஸஹித.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
பிகுவு - செருக்கு

Top


Updated on 04 Oct 2010

No comments: