Thursday, October 7, 2010

தியாகராஜ கிருதி - பூல பான்பு - ராகம் ஆஹிரி - Poola Panpu - Raga Ahiri

பல்லவி
பூல பான்பு மீத3 பா33 பூர்ண பவ்வளிஞ்சு

அனுபல்லவி
நீல க4ன ஸ்1யாம ஹரே நிருபம ராமய்ய மல்லெ (பூ)

சரணம்
சரணம் 1
மது4 11ர்கரயான பாலு மரியாரகி3ஞ்சி
விது4 முக2 கம்மனி விடெ3மு வேஸி நனு கடாக்ஷிஞ்சி (பூ)


சரணம் 2
பரிமள க3ந்த4ம்பு3 மேன பா3கு3கா3னு பூஸி
மெரயக3 ஸும ஹாரமுலனு மெட3 நிண்ட3னு வேஸி (பூ)


சரணம் 3
ஆக3மோக்தமைன ஸ1ய்யனங்கீ3கரிஞ்சி
த்யாக3ராஜ க்ரு2தமுலெல்ல தத்2யமனி ஸந்தோஷிஞ்சி (பூ)

பொருள் - சுருக்கம்
முழுமுதலே! நீலமுகில் கார்வண்ண அரியே! ஒப்பற்ற இராமய்யா! மதி முகத்தோனே!

  • மலரணை மீது நன்கு பள்ளிகொள்வாய்.

    • தேன், சருக்கரை (கலந்த) காய்ச்சிய பாலினை ஏற்றருளி,
    • மணக்கும் வீடிகையை யேற்று,

    • பரிமள சந்தனத்தினை உடலினில் நன்றாகப் பூசி,
    • மிளிர, மலர் மாலைகளினை கழுத்து நிறைய வேய்ந்து,

    • ஆகமங்களில் உரைக்கப்பெற்ற அணையினை ஏற்றருளி,
    • தியாகராசனின் செயல்கள் யாவும் சொற்படியே யென மகிழ்ந்து,
    • என்னைக் கடைக்கணித்து,

  • மல்லிகை மலரணை மீது நன்கு பள்ளிகொள்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பூல/ பான்பு/ மீத3/ பா33/ பூர்ண/ பவ்வளிஞ்சு/
மலர்/ அணை/ மீது/ நன்கு/ முழுமுதலே/ பள்ளிகொள்வாய்/


அனுபல்லவி
நீல/ க4ன/ ஸ்1யாம/ ஹரே/ நிருபம/ ராமய்ய/ மல்லெ/ (பூ)
நீல/ முகில்/ கார்வண்ண/ அரியே/ ஒப்பற்ற/ இராமய்யா/ மல்லிகை/ மலரணை...


சரணம்
சரணம் 1
மது4/ ஸ1ர்கர/-ஆன/ பாலு/ மரி/-ஆரகி3ஞ்சி/
தேன்/ சருக்கரை (கலந்த)/ காய்ச்சிய/ பாலினை/ மேலும்/ ஏற்றருளி/

விது4/ முக2/ கம்மனி/ விடெ3மு/ வேஸி/ நனு/ கடாக்ஷிஞ்சி/ (பூ)
மதி/ முகத்தோனே/ மணக்கும்/ வீடிகையை/ யேற்று/ என்னை/ கடைக்கணித்து/ மலரணை...


சரணம் 2
பரிமள/ க3ந்த4ம்பு3/ மேன/ பா3கு3கா3னு/ பூஸி/
பரிமள/ சந்தனத்தினை/ உடலினில்/ நன்றாக/ பூசி/

மெரயக3/ ஸும/ ஹாரமுலனு/ மெட3/ நிண்ட3னு/ வேஸி/ (பூ)
மிளிர/ மலர்/ மாலைகளினை/ கழுத்து/ நிறைய/ வேய்ந்து/ மலரணை...


சரணம் 3
ஆக3ம/-உக்தமைன/ ஸ1ய்யனு/-அங்கீ3கரிஞ்சி/
ஆகமங்களில்/ உரைக்கப்பெற்ற/ அணையினை/ ஏற்றருளி/

த்யாக3ராஜ/ க்ரு2தமுலு/-எல்ல/ தத்2யமு/-அனி/ ஸந்தோஷிஞ்சி/ (பூ)
தியாகராசனின்/ செயல்கள்/ யாவும்/ சொற்படியே/ யென/ மகிழ்ந்து/ மலரணை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் அனுபல்லவி, பல்லவியின் இரண்டாவது வரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - 1ர்கரயான பாலு - ஸ1ர்கர வென்ன பாலு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 07 Oct 2010

No comments: