Saturday, October 2, 2010

தியாகராஜ கிருதி - ஆ த3ய ஸ்ரீ ரகு4வர - ராகம் ஆஹிரி - Adaya Sri Raghuvara - Raga Ahiri

பல்லவி
ஆ த3ய ஸ்ரீ ரகு4வர நேடே3
1ராத3 ஓ த3யாம்பு3தி4 நீகா (த3ய)

அனுபல்லவி
மோத3முதோ ஸத்3-ப4க்தி மர்மமுனு
போ34ன ஜேஸி ஸதா3 ப்3ரோசின நீகா (த3ய)

சரணம்
நின்னு திட்டி கொட்டி ஹிம்ஸ பெட்டினத3ன்னியு நன்னன லேதா3
என்ன ரானி நிந்த3ல தாளுமனி 2மன்னிஞ்சக3 லேதா3
அன்னமு தாம்பூ3லமொஸகி3 தே3ஹமு மின்ன ஸேய லேதா3
கன்ன தல்லி தண்ட்3ரி மேமனுசு
த்யாக3ராஜுனிகி பரவஸ1மீ லேதா3 (ஆ த3ய)


பொருள் - சுருக்கம்
இரகுவரா! ஓ கருணைக் கடலே!
  • அக்கருணை, இன்றேன் வாராதய்யா, உனக்கு?
    • மகிழ்வுடன், தூய பக்தியின் மருமத்தினை போதனை செய்து, எவ்வமயமும் காத்த உனக்கு

  • அக்கருணை, இன்றேன் வாராதய்யா உனக்கு?

    • உன்னை வைது, அடித்து, கொடுமை இழைத்ததெல்லாம், என்னை எனவில்லையா?
    • என்ன வந்தாலும் நிந்தைகளைத் தாளுவாயெனப் பரிந்துரைக்கவில்லையா?
    • உணவும் தாம்பூலமும் அளித்து உடலை மின்னச் செய்யவில்லையா?
    • ஈன்ற தாய் தந்தையர் யாமெனக் கூறி தியாகராசனுக்குப் பரவசம் அளிக்கவில்லையா?

  • அக்கருணை, இன்றேன் வாராதய்யா, உனக்கு?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஆ/ த3ய/ ஸ்ரீ ரகு4வர/ நேடு3/-ஏல/
அந்த/ கருணை/ ஸ்ரீ ரகுவரா/ இன்று/ ஏன்/

ராது3/-அய/ ஓ த3யா/-அம்பு3தி4/ நீகு/-(ஆ த3ய)
வாராது/ அய்யா/ ஓ கருணை/ கடலே/ உனக்கு/


அனுபல்லவி
மோத3முதோ/ ஸத்3/-ப4க்தி/ மர்மமுனு/
மகிழ்வுடன்/ தூய/ பக்தியின்/ மருமத்தினை/

போ34ன/ ஜேஸி/ ஸதா3/ ப்3ரோசின/ நீகு/-(ஆ த3ய)
போதனை/ செய்து/ எவ்வமயமும்/ காத்த/ உனக்கு/ அந்த...


சரணம்
நின்னு/ திட்டி/ கொட்டி/ ஹிம்ஸ/ பெட்டினதி3/-அன்னியு/ நன்னு/-அன லேதா3/
உன்னை/ வைது/ அடித்து/ கொடுமை/ இழைத்தது/ எல்லாம்/ என்னை/ எனவில்லையா/

என்ன/ ரானி/ நிந்த3ல/ தாளுமு/-அனி/ மன்னிஞ்சக3 லேதா3/
என்ன/ வந்தாலும்/ நிந்தைகளை/ தாளுவாய்/ என/ பரிந்துரைக்கவில்லையா/

அன்னமு/ தாம்பூ3லமு/-ஒஸகி3/ தே3ஹமு/ மின்ன/ ஸேய லேதா3/
உணவும்/ தாம்பூலமும்/ அளித்து/ உடலை/ மின்ன/ செய்யவில்லையா/

கன்ன/ தல்லி/ தண்ட்3ரி/ மேமு/-அனுசு/
ஈன்ற/ தாய்/ தந்தையர்/ யாம்/ எனக் கூறி/

த்யாக3ராஜுனிகி/ பரவஸ1மு/-ஈ லேதா3/ (ஆ த3ய)
தியாகராசனுக்கு/ பரவசம்/ அளிக்கவில்லையா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் சரணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு அடிகள், முதல் சரணமாகவும், மிகுதி, இரண்டாவது சரணமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ராத3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை 'ராது3+அய' என்று பிரித்து பொருள் கொள்ளப்பட்டது. 'அய' என்ற சொல், 'அய்யா' என்று இவ்விடத்தில் பொருள்படும். ஆனால், தெலுங்கில், அத்தகைய சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இது, 'அய்ய' என்ற சொல்லின் பேச்சு வழக்கு வடிவமா, அல்லது, இது கவிகளுக்கு உரித்தான விலக்கா என்று தெரியவில்லை.

2 - மன்னிஞ்சக3 - இச்சொல் பொதுவாக 'மன்னித்தல்' என்ற பொருளில் வழங்கும். ஆனால், இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'மதித்தல்', 'சம்மதித்தல்' என்று பொருள்களும் உண்டு. ஆனால் இந்த பொருள்கள் ஏதும் இவ்விடத்தில் பொருந்தாது. எனவே, 'பரிந்துரைத்தல்' என்ற பொருள் கொள்ளப்பட்டது,
Top

இந்தப் பாடலின் பின்னணி - தலைசிறந்த உபந்நியாசகரான திரு TS பாலகிருஷ்ண சாஸ்திரிகள், 'தியாகராஜ சரித்திரம்' என்ற தனது உபந்நியாசத்தினில், இப்பாடல் பாடப்பெற்ற சூழ்நிலை பற்றி விவரித்துள்ளார். அதன்படி, தியாகராஜரை, அவரது தமையனார் அடித்துக் கொடுமைப் படுத்தியதாகவும், அதனால், தியாகராஜர், ஐந்து நாட்கள் நினைவின்றி இருந்ததாகவும், அந்த சமயத்தில், ராமனும், சீதையும், தியாகராஜருடைய சூக்ஷ்ம சரீரத்துடன் பேசி, இந்தப் பாடலில் உள்ள சொற்களை (உன்னைக் கொடுமைப் படுத்தியது எனக்கு இழைத்ததாகும் ஆகியவை) கூறி, தியாகராஜரின் உடற்புண்ணைத் தடவிக்கொடுத்ததாகவும், அதன்பின்னர், தியாகராஜர், தூக்கத்திலிருந்து விழிப்பது போன்று உடல் நலமுற்று எழுந்ததாகவும் கூறுகின்றார். மேலும், இந்தப்பாடலில், தியாகராஜர், தமது தமையனாரை மன்னிக்கும்படி வேண்டுவதாகக் கூறுகின்றார்.

என்னை எனவில்லயா - எனக்கு இழைத்தது எனவில்லையா
பரவசம் - தன்வயமற்றிருத்தல்

Top


Updated on 03 Oct 2010

No comments: