Friday, October 1, 2010

தியாகராஜ கிருதி - ஸாரி வெட3லின - ராகம் அஸாவேரி - Saari Vedalina - Raga Asaveri

பல்லவி
1ஸாரி வெட3லினயீ காவேரினி ஜூட3ரே

அனுபல்லவி
வாரு வீரனுசு ஜூட3
தானவ்வாரிகா3பீ4ஷ்டமுலனொஸங்கு3சு (ஸா)

சரணம்
சரணம் 1
தூ3ரமுனனொக தாவுன க3ர்ஜன
பீ4கரமொக தாவுன நிண்டு3 கருணதோ
நிரதமுக3னொக தாவுன நடு3சுசு
வர காவேரி கன்யகா மணி (ஸா)


சரணம் 2
வேடு3ககா3 கோகிலமு ம்ரோயக3னு
வேடு3சு ரங்கே3ஸு1னி ஜூசி மரி
ஈரேடு3 ஜக3முலகு ஜீவனமைன
2மூடு3 ரெண்டு3 நதி3 நாது2னி ஜூட3 (ஸா)


சரணம் 3
ராஜ ராஜேஸ்1வரியனி பொக3டு3சு
ஜாஜி ஸுமமுல த4ராமர க3ணமுலு
பூஜலிருக33ல ஸேயக3 த்யாக3-
ராஜ ஸன்னுதுராலை முத்3து33 (ஸா)


பொருள் - சுருக்கம்
  • பரந்தோடும் இந்தக் காவிரியினைக் காணீரே!

    • அவரிவரென (வேறுபாடுடன்) நோக்காது, தான், ஏராளமாக விருப்பங்களை வழங்கிக் கொண்டு,

    • தூரத்தில் ஓரிடத்தினில், அச்சுறுத்தும் முழக்கத்துடனும்,
    • ஓரிடத்தினில், நிறைக் கருணையுடனும்,
    • ஓரிடத்தினில், எவ்வமயமும் மெல்ல நடந்துகொண்டும்,

    • வேடிக்கையாக, குயில்கள் கூவவும்,
    • வேண்டுதலுடன், அரங்க நாதனைக் கண்டு, பின்னர்
    • ஈரேழுலகிற்கும் வாழ்வாகிய, மூவிரண்டு நதி நாதனைக் காண,

    • 'ராஜ ராஜேசுவரி' எனப் புகழ்ந்துகொண்டு, மல்லிகை மலர்களினால், அந்தணர்கள் வழிபாடு, இரு கரைகளிலும் செய்ய,
    • தியாகராசனால் போற்றப் பெற்றவளாகி,

  • ஒயிலாக, பரந்தோடும் இவ்வுயர் காவிரிக் கன்னிப் பெண்மணியினைக் காணீரே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாரி/ வெட3லின/-ஈ/ காவேரினி/ ஜூட3ரே/
பரந்து/ ஓடும்/ இந்த/ காவிரியினை/ காணீரே/


அனுபல்லவி
வாரு/ வீரு/-அனுசு/ ஜூட3க/
அவர்/ இவர்/ என/ (வேறுபாடுடன்) நோக்காது/

தானு/-அவ்வாரிக3/-அபீ4ஷ்டமுலனு/-ஒஸங்கு3சு/ (ஸா)
தான்/ ஏராளமாக/ விருப்பங்களை/ வழங்கிக் கொண்டு/ பரந்தோடும்...


சரணம்
சரணம் 1
தூ3ரமுன/-ஒக/ தாவுன/ க3ர்ஜன/ பீ4கரமு/-
தூரத்தில்/ ஓர்/ இடத்தினில்/ முழக்கம்/ அச்சுறுத்தவும்/

ஒக/ தாவுன/ நிண்டு3/ கருணதோ/
ஓர்/ இடத்தினில்/ நிறை/ கருணையுடனும்/

நிரதமுக3னு/-ஒக/ தாவுன/ நடு3சுசு/
எவ்வமயமும்/ ஓர்/ இடத்தினில்/ (மெல்ல) நடந்துகொண்டும்/

வர/ காவேரி/ கன்யகா/ மணி/ (ஸா)
(இந்த) உயர்/ காவிரி/ கன்னி/ பெண்மணி/ பரந்தோட...


சரணம் 2
வேடு3ககா3/ கோகிலமு/ ம்ரோயக3னு/
வேடிக்கையாக/ குயில்கள்/ கூவவும்/

வேடு3சு/ ரங்க3/-ஈஸு1னி/ ஜூசி/ மரி/
வேண்டுதலுடன்/ அரங்க/ நாதனை/ கண்டு/ பின்னர்/

ஈரு-ஏடு3/ ஜக3முலகு/ ஜீவனமைன/
ஈரேழு/ உலகிற்கும்/ வாழ்வாகிய/

மூடு3/ ரெண்டு3/ நதி3/ நாது2னி/ ஜூட3/ (ஸா)
மூன்று/ இரண்டு/ நதி/ நாதனை/ காண/ பரந்தோடும்...


சரணம் 3
ராஜ ராஜ-ஈஸ்1வரி/-அனி/ பொக3டு3சு/
'ராஜ ராஜேசுவரி'/ என/ புகழ்ந்துகொண்டு/

ஜாஜி/ ஸுமமுல/ த4ர/-அமர க3ணமுலு/
மல்லிகை/ மலர்களினால்/ புவி/ அமரர்கள் (அந்தணர்கள்)/

பூஜலு/-இரு/ க33ல/ ஸேயக3/ த்யாக3ராஜ/
வழிபாடு/ இரு/ கரைகளிலும்/ செய்ய/ தியாகராசனால்/

ஸன்னுதுராலை/ முத்3து33/ (ஸா)
போற்றப் பெற்றவளாகி/ ஒயிலாக/ பரந்தோடும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - மூடு3 ரெண்டு3 நதி3 நாத2 - மூவிரண்டு நதி நாதன் - திருவைய்யாற்றப்பன் - ஐந்து நதிகளாவன - காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, வெண்ணார், வெட்டார்.

காவிரி நதி உற்பத்தியாவது முதல் கடலில் கலக்கும் வரையிலான வழி பற்றி அறியவும்.

Top

விளக்கம்
1 - ஸாரி - இந்தத் தெலுங்குச் சொல் 'ஸாரிஞ்சு' (பரப்பு) என்ற சொல்லின் திரிபு என்று கருதுகின்றேன். ஏனெனில் 'ஸாரி' என்ற சொல்லுக்கு 'சமயம்' என்று பொருளாகும். அந்தப் பொருள் இவ்விடம் பொருந்தாது.

Top


Updated on 01 Oct 2010

No comments: