Sunday, September 5, 2010

தியாகராஜ கிருதி - சேஸினதெ3ல்ல - ராகம் தோடி - Chesinadella - Raga Todi

பல்லவி
சேஸினதெ3ல்ல மரசிதிவோ ஓ ராம ராம

அனுபல்லவி
ஆஸ கொன்னட்டி நன்னலயிஞ்சுடகு முனு (சே)

சரணம்
சரணம் 1
1ஆலு நீகைன ப4க்துராலனுசு நாடு3
பாலு மாலக ரவி பா3லுனி செலிமியு (சே)


சரணம் 2
பா4ஷ தப்பகனு விபீ4ஷணுனி கொரகாதி3
ஸே1ஷுட3கு3 தம்முனி போஷிஞ்சமனி ராஜு (சே)


சரணம் 3
ராம ஸ்ரீ த்யாக3ராஜ ப்ரேமாவதார ஸீதா
பா4ம மாடலு 2தெல்பு 3பீ4மாஞ்ஜனேய ப்3ரஹ்ம (சே)


பொருள் - சுருக்கம்
ஓ இராமா, தியாகராசனின் காதலுருவே!

  • செய்ததெல்லாம் மறந்தனையோ?
  • (உன்னிடம்) ஆசை கொண்டவனாகிய என்னை, அலையச் செய்வதற்கு, முன்னம் செய்ததெல்லாம் மறந்தனையோ?

    • இல்லாள், உனக்குகந்த அடியவளென, அன்று, தயங்காது, பரிதி மைந்தனின் நட்பு கொண்டதெல்லாம் மறந்தனையோ?
    • சொல் தவறாது, விபீடணனனுக்கு வேண்டி, ஆதி சேடனாகிய, பின்னவனைப் பேணச் செய்து, (இலங்கை) அரசனாக்கியதெல்லாம் மறந்தனையோ?
    • சீதைப் பெண்ணாள் விவரங்களைத் தெரிவித்த, அச்சமூட்டும், அனுமனை பிரமனாக்கியதெல்லாம் மறந்தனையோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சேஸினதி3/-எல்ல/ மரசிதிவோ/ ஓ ராம/ ராம/
செய்தது/ எல்லாம்/ மறந்தனையோ/ ஓ இராமா/ இராமா/


அனுபல்லவி
ஆஸ/ கொன்ன/-அட்டி/ நன்னு/-அலயிஞ்சுடகு/ முனு/ (சே)
(உன்னிடம்) ஆசை/ கொண்டவன்/ ஆகிய/ என்னை/ அலையச் செய்வதற்கு/ முன்னம்/ செய்ததெல்லாம்...


சரணம்
சரணம் 1
ஆலு/ நீகு/-ஐன/ ப4க்துராலு/-அனுசு/ நாடு3/
இல்லாள்/ உனக்கு/ உகந்த/ அடியவள்/ என/ அன்று/

பாலு மாலக/ ரவி/ பா3லுனி/ செலிமியு/ (சே)
தயங்காது/ பரிதி/ மைந்தனின்/ நட்பு/ கொண்டது எல்லாம்....


சரணம் 2
பா4ஷ/ தப்பகனு/ விபீ4ஷணுனி/ கொரகு/-ஆதி3/
சொல்/ தவறாது/ விபீடணனனுக்கு/ வேண்டி/ ஆதி/

ஸே1ஷுட3கு3/ தம்முனி/ போஷிஞ்சமு/-அனி/ ராஜு/ (சே)
சேடனாகிய/ பின்னவனை/ பேண/ செய்து/ (இலங்கை) அரசன்/ ஆக்கியதெல்லாம்....


சரணம் 3
ராம/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ப்ரேம/-அவதார/ ஸீதா/
இராமா/ தியாகராசனின்/ காதல்/ உருவே/ சீதை/

பா4ம/ மாடலு/ தெல்பு/ பீ4ம/-ஆஞ்ஜனேய/ ப்3ரஹ்ம/ (சே)
பெண்ணாள்/ விவரங்களை/ தெரிவித்த/ அச்சமூட்டும்/ அனுமனை/ பிரமன்/ ஆக்கியதெல்லாம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தெல்பு - தெல்ப.
3 - ஆஞ்ஜனேய - ஆஞ்ஜனேயு : இவ்விடத்தில் 'ஆஞ்ஜனேயுனி' என்றிருக்க வேண்டும்.

Top

மேற்கோள்கள்
1 - ஆலு நீகைன ப4க்துராலு - இல்லாள் உனக்குகந்த அடியவள் - தியாகராஜர், தமது 'ஏ வரமடு3கு3து3ரா' என்ற கல்யாணி ராக கீர்த்தனையில், 'திருமணமானவன் என்ற மோகத்தினையும் மறந்து, 'ஸோஹம்' (அவனே நான்) எனும் சுகம் சீதையினைச் சேர்ந்திருக்க' என்கின்றார். அதாவது, சீதை, ராமனை, கணவனாக நோக்காது, தன்னுடைய உள்ளத்தினில், 'ஸோஹம்' எனப்படும் 'அவனே நான்' என்ற உணர்வினில் காண்கின்றாள்' என்கின்றார். இதனால், தொண்டனின் பதவி, எத்தனை உயர்ந்து என்று தெரிவிக்கின்றார்.

Top

விளக்கம்
3 - ஆஞ்ஜனேய ப்3ரஹ்ம சேஸினதி3 - அனுமனை, பிரமனாக்கியது - வால்மீகி ராமாயணத்தில், அத்தகைய நிகழ்ச்சி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. யுத்த காண்டத்தில் (முதல் அத்தியாயம்), சீதையின் செய்தியினைக் கொணர்ந்த அனுமனை, ராமன் மார்புறத் தழுவிக் கொண்டான் என்று கூறப்பட்டுள்ளது. உத்தர காண்டத்தினில் (108-வது அத்தியாயம்), அனுமன், ராமனுடன் சுவர்க்கத்திற்கு வர மறுத்து, ராமனின் பெயர் புவியில் பாடப்படும் வரை, தான் இங்கேயே இருக்க விரும்புவதாகக் கூறுகின்றான். அதற்கு, ராமன் ஆமோதித்ததாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இராமன், அனுமனை பிரமனாக்கியதற்கான புராண ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் பொது வழக்கில் அங்ஙனமே நம்பப்படுகின்றது.

பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
பரிதி மைந்தனின் நட்பு - சீதையைக் கண்டுபிடிக்க
பின்னவன் - இலக்குவன் - ஆதிசேடனின் அவதாரம் எனப்படும்

Top


Updated on 05 Sep 2010

No comments: