Monday, September 6, 2010

தியாகராஜ கிருதி - தா3சுகோவலெனா - ராகம் தோடி - Daachukovalena - Raga Todi

பல்லவி
தா3சுகோவலெனா தா31ரதி2 நீது33

அனுபல்லவி
ஜூசுவாரலலோன சுலகனே நனு ஜூசி (தா3)

சரணம்
சரணம் 1
கனிகரமு காந்தபை கலிகி3 முத்3தி3டு3 வேள
ஜனகஜ நா மாட ஸமயமனி 1பல்கிதே (தா3)


சரணம் 2
கரகி3 பத3முலன வ்ரால கனி கருண ஸேயு வேள
4ரதுடெ3ந்தோ நன்னு ப4க்துட3னி 1பல்கிதே (தா3)


சரணம் 3
2நேமமுக3 பரிசர்ய 3நேர்புனு பொக3டு3 வேள
ஸௌமித்ரி த்யாக3ராஜுனி மாட 1பல்கிதே (தா3)


பொருள் - சுருக்கம்
தாசரதி!

  • மறைத்துக் கொள்ளவேண்டுமோ, உனது தயையினை?
  • காண்போரிடை, இழிவாக என்னை நோக்கி மறைத்துக் கொள்ளவேண்டுமோ, உனது தயையினை?

    • மனையாள் மீது கனிவுகொண்டு, முத்தமிடும் வேளை, சனகன் மகள், உகந்த சமயமென, எனது பேச்செடுத்தாலும், மறைத்துக் கொள்ளவேண்டுமோ, உனது தயையினை?
    • உருகி, திருவடிகளில் வீழக் கண்டு, கருணை புரியும் வேளை, பரதன் மிக்கு, என்னைத் தொண்டனெனச் சொன்னாலும், மறைத்துக் கொள்ளவேண்டுமோ, உனது தயையினை?
    • நியமமாகத் தொண்டின் நேர்த்தியினைப் போற்றும் வேளை, சௌமித்திரி, தியாகராசனின் பேச்செடுத்தாலும், மறைத்துக் கொள்ளவேண்டுமோ, உனது தயையினை?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தா3சுகோவலெனா/ தா31ரதி2/ நீது3/ த3ய/
மறைத்துக் கொள்ளவேண்டுமோ/ தாசரதி/ உனது/ தயையினை/


அனுபல்லவி
ஜூசுவாரலலோன/ சுலகனே/ நனு/ ஜூசி/ (தா3)
காண்போரிடை/ இழிவாக/ என்னை/ நோக்கி/ மறைத்து...


சரணம்
சரணம் 1
கனிகரமு/ காந்தபை/ கலிகி3/ முத்3து3/-இடு3/ வேள/
கனிவு/ மனையாள்/ மீது/ கொண்டு/ முத்தம்/ இடும்/ வேளை/

ஜனகஜ/ நா/ மாட/ ஸமயமு/-அனி/ பல்கிதே/ (தா3)
சனகன் மகள்/ எனது/ பேச்சு/ (உகந்த) சமயம்/ என/ எடுத்தாலும்/ மறைத்து...


சரணம் 2
கரகி3/ பத3முலன/ வ்ரால/ கனி/ கருண/ ஸேயு/ வேள/
உருகி/ திருவடிகளில்/ வீழ/ கண்டு/ கருணை/ புரியும்/ வேளை/

4ரதுடு3/-எந்தோ/ நன்னு/ ப4க்துடு3/-அனி/ பல்கிதே/ (தா3)
பரதன்/ மிக்கு/ என்னை/ தொண்டன்/ என/ சொன்னாலும்/ மறைத்து...


சரணம் 3
நேமமுக3/ பரிசர்ய/ நேர்புனு/ பொக3டு3/ வேள/
நியமமாக/ தொண்டின்/ நேர்த்தியினை/ போற்றும்/ வேளை/

ஸௌமித்ரி/ த்யாக3ராஜுனி/ மாட/ பல்கிதே/ (தா3)
சௌமித்திரி/ தியாகராசனின்/ பேச்சு/ எடுத்தாலும்/ மறைத்து...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பல்கிதே - பல்கின.

2 - நேமமுக3 - நேமமுன - நேமமு : 'நேமமு' என்பது பொருந்தாது.

3 - நேர்புனு - நேர்புன.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
தாசரதி - இராமன் - தசரதன் மைந்தன்
சனகன் மகள் - சீதை
தொண்டின் நேர்த்தி - இலக்குவனைக் குறிக்கும்
சௌமித்திரி - இலக்குவன்

Top


Updated on 07 Sep 2010

1 comment:

Anonymous said...

நல்லா இருக்கின்றது!