Thursday, July 15, 2010

தியாகராஜ கிருதி - கா3ன மூர்தே - ராகம் கா3ன மூர்தி - Gaana Murte - Raga Gaana Murti

பல்லவி
கா3ன மூர்தே ஸ்ரீ க்ரு2ஷ்ண வேணு
கா3ன லோல த்ரி-பு4வன பால பாஹி (கா3)

அனுபல்லவி
மானினீ மணி ஸ்ரீ ருக்மிணீ
மானஸாபஹார மார ஜனக தி3வ்ய (கா3)

சரணம்
நவனீத சோர நந்த3 ஸத்கிஸோ1
1நர மித்ர தீ4ர நர ஸிம்ஹ ஸூ1
நவ மேக4 தேஜ நக3ஜா ஸஹஜ
2நரகாந்தகாஜ நத த்யாக3ராஜ (கா3)


பொருள் - சுருக்கம்
  • திவ்விய இசை வடிவே, கண்ணா! குழலிசை விரும்புவோனே! மூவுலகைப் பேணுவோனே!
  • கற்பரசிகளில் சிறந்த ருக்குமிணியின் மனம் கவர்வோனே! மதனை ஈன்றோனே!
  • வெண்ணெய்த் திருடா! நந்தனின் நற்புதல்வா! அருச்சுனனின் நண்பா! தீரா! நரசிங்க சூரா! புது முகில் ஒளியோனே! மலைமகள் சோதரா! நரகனை வதைத்த, பிறவாதவனே! தியாகராசன் வணங்கும் இசை வடிவே, கண்ணா!

    • காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கா3ன/ மூர்தே/ ஸ்ரீ க்ரு2ஷ்ண/ வேணு/
இசை/ வடிவே/ கண்ணா/ குழல்/

கா3ன/ லோல/ த்ரி-பு4வன/ பால/ பாஹி/ (கா3)
இசை/ விரும்புவோனே/ மூவுலகை/ பேணுவோனே/ காப்பாய்/


அனுபல்லவி
மானினீ/ மணி/ ஸ்ரீ ருக்மிணீ/
கற்பரசிகளில்/ சிறந்த/ ஸ்ரீ ருக்குமிணியின்/

மானஸ/-அபஹார/ மார/ ஜனக/ தி3வ்ய/ (கா3)
மனம்/ கவர்வோனே/ மதனை/ ஈன்றோனே/ திவ்விய/ இசை...


சரணம்
நவனீத/ சோர/ நந்த3/ ஸத்-கிஸோ1ர/
வெண்ணெய்/ திருடா/ நந்தனின்/ நற்புதல்வா/

நர/ மித்ர/ தீ4ர/ நர/ ஸிம்ஹ/ ஸூ1ர/
அருச்சுனனின்/ நண்பா/ தீரா/ நர/ சிங்க/ சூரா/

நவ/ மேக4/ தேஜ/ நக3ஜா/ ஸஹஜ/
புது/ முகில்/ ஒளியோனே/ மலைமகள்/ சோதரா/

நரக/-அந்தக/-அஜ/ நத/ த்யாக3ராஜ/ (கா3)
நரகனை/ வதைத்த/ பிறவாதவனே/ வணங்கும்/ தியாகராசன்/ இசை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - நர - எல்லா புத்தகங்களிலும், இதற்கு, 'அர்ச்சுனன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அர்ச்சுனனும், கண்ணனும், 'நர-நாராயணர்' என்ற இருடிகள் என்று பாரதத்தில் (5-வது புத்தகம், 96-வது அத்தியாயம்) கூறப்பட்டுள்ளது.

2 - நரகாந்தக - நரகாசுரன் எனப்படும் பௌமாசுரனை கண்ணன் வதைத்தான். இது பற்றி பாகவத புராணத்தில் (10-வது புத்தகம், 59-வது அத்தியாயம்) கூறப்பட்டுள்ளது. நரகாசுரன் கதைச் சுருக்கம்.

Top

விளக்கம்
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், தியாகராஜர் இயற்றினாரா என்று ஐயமுள்ள பாடல்களின் பட்டியலில், இப்பாடலும் இடம் பெற்றுள்ளது.

நந்தன் - கண்ணனின் வளர்ப்புத் தந்தை
மலைமகள் - பார்வதி
நரகன் - நரகாசுரன்

Top


Updated on 15 Jul 2010

1 comment:

நாடி நாடி நரசிங்கா! said...

Great service! thanks

mp3 song also incluede its too good!