Friday, July 16, 2010

தியாகராஜ கிருதி - பரியாசகமா - ராகம் வனஸ்பதி - Pariyachakama - Raga Vanaspati

பல்லவி
1பரியாசகமா 2மாட பதி3-கு3ரிலோ பொக3டி3னதி3

அனுபல்லவி
3வெரபுனனனுமானம்பு3ன வெஸனம்பு3 நே கோரி
1ரணாக3த ரக்ஷக நினு ஸந்ததமுனு ஸ1ரணனக3 (ப)

சரணம்
ஒக முனிகை 4த்3ரௌபதி3 த்3வாரக நிலயா ஸ1ரணனக3
ஒக மாடகு 5விபீ4ஷணுடு3 ஓர்வ லேக ஸ1ரணனக3
ஸகலேஸ்1வர 6ப்ரஹ்லாது3டு3 ஜாலிசே ஸ1ரணனக3
ஹித-கருண்டை3 ப்3ரோசிதிவே த்யாக3ராஜுனி மாட (ப)


பொருள் - சுருக்கம்
சரணடைந்தோரைக் காப்போனே! யாவர்க்கும் இறைவா!

  • கேலியா (எனது) சொல், பலர் நடுவில் (உன்னைப்) புகழ்ந்தது?

  • அச்சத்தினாலும், ஐயத்தினாலும், துயரத்தினாலும் நான் விழைந்து, உன்னை எவ்வமயமும் 'சரணம்' என, கேலியா (எனது) சொல்?

    • ஓரு முனிவனுக்காக, துரோபதை, 'துவாரகை நிலையா! சரணம்' என,
    • ஒரு சொல்லுக்கு விபீடணன் பொறுக்கவியலாது, 'சரணம்' என,
    • பிரகலாதன், துயரத்தினால், 'சரணம்' என,

  • வேண்டியவனாகிக் காத்தாயன்றோ?

  • தியாகராசனின் சொல் (மட்டும்) கேலியா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரியாசகமா/ மாட/ பதி3-கு3ரிலோ/ பொக3டி3னதி3/
கேலியா/ (எனது) சொல்/ பலர் நடுவில்/ (உன்னைப்) புகழ்ந்தது/


அனுபல்லவி
வெரபுன/-அனுமானம்பு3ன/ வெஸனம்பு3ன/ நே/ கோரி/
அச்சத்தினாலும்/ ஐயத்தினாலும்/ துயரத்தினாலும்/ நான்/ விழைந்து/

1ரணு/-ஆக3த/ ரக்ஷக/ நினு/ ஸந்ததமுனு/ ஸ1ரணு/-அனக3/ (ப)
சரண்/ அடைந்தோரை/ காப்போனே/ உன்னை/ எவ்வமயமும்/ 'சரணம்'/ என/ கேலியா...


சரணம்
ஒக/ முனிகை/ த்3ரௌபதி3/ த்3வாரக/ நிலயா/ ஸ1ரணு/-அனக3/
ஓரு/ முனிவனுக்காக/ துரோபதை/ 'துவாரகை/ நிலையா/ சரணம்/ என/

ஒக/ மாடகு/ விபீ4ஷணுடு3/ ஓர்வ/ லேக/ ஸ1ரணு/-அனக3/
ஒரு/ சொல்லுக்கு/ விபீடணன்/ பொறுக்க/ இயலாது/ 'சரணம்/ என/

ஸகல/-ஈஸ்1வர/ ப்ரஹ்லாது3டு3/ ஜாலிசே/ ஸ1ரணு/-அனக3/
யாவர்க்கும்/ இறைவா/ பிரகலாதன்/ துயரத்தினால்/ 'சரணம்'/ என/

ஹித-கருண்டை3/ ப்3ரோசிதிவே/ த்யாக3ராஜுனி/ மாட/ (ப)
வேண்டியவனாகி/ காத்தாயன்றோ/ தியாகராசனின்/ சொல் (மட்டும்)/ கேலியா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பரியாசகமா - பரிஹாஸகமா : 'பரி்யாசகம்', 'பரிஹாஸம்' - இரண்டு சொற்களுமே 'கேலி' என்று பொருள்படும். ஆனால் 'பரிஹாஸகம்' என்பது தவறானதாகும். எனவே 'பரியாசகமா' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
4 - த்3ரௌபதி3 - துரோபதை - இந்நிகழ்ச்சி, மகாபாரதத்தில் (3-வது புத்தகம், வன பர்வம், துரோபதை ஹரண பர்வம், அத்தியாயம் 261) கூறப்பட்டுள்ளது.

5 - விபீ4ஷணுடு3 - ராவணன், விபீடணனைக் கடும் சொற்கள் கூறியது பற்றி வால்மீகி ராமாயணத்தில் (யுத்தகாண்டம், அத்தியாயம் 16) நோக்கவும்.

6 - ப்ரஹ்லாது3டு3 - பிரகலாதனின் கதை, பாகவத புராணத்தில் (7-வது புத்தகம், அத்தியாயங்கள் 4 - 6) நோக்கவும்.

Top

விளக்கம்
2 - மாட - (எனது) சொல் - அனுபல்லவியில் தியாகராஜர் இதனை விவரித்துள்ளார்.

3 - வெரபுன, அனுமானம்பு3ன, வெஸனம்பு3 - அச்சத்தினாலும், ஐயத்தினாலும், துயரத்தினாலும் - சரணத்தில் கூறப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளையும் இவை சுட்டும். முனிவனின் அச்சத்தினால், துரோபதையும், தமையன் என்ன செய்வானோ என்ற ஐயத்தினால், விபீடணனும், தனது தந்தை இழைத்த கொடுமைகளின் துயரத்தினால், பிரகலாதனும், இறைவனிடம் சரணம் புகுந்தனர்.

முனிவன் - துர்வாச முனி
ஒரு சொல் - தன் தமையன் இராவணனின் கொடிய சொல்

Top


Updated on 16 Jul 2010

No comments: