ஏமந்து3னே விசித்ரமுனு
இலலோன மனுஜுலாடே3
அனுபல்லவி
1நீ மந்த்ர மஹிமனெருங்க3 லேக
ஸாமான்யுலை பல்கெரு நீதோ(னே)
சரணம்
2தாமஸம்பு3 சேத தத்வமு பல்குசு
காம தா3ஸுலை கருண மாலி மதி3னி
பூ4மி ஸஞ்சரிஞ்சி பொட்ட நிம்புசுனு
தாமே பெத்3த3லட த்யாக3ராஜ நுத (ஏ)
பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- உன்னிடம் என்னவென்பேனய்யா, புவியில் மனிதர்கள் நடக்கும் புதுமையினை!
- உனது மந்திர மகிமையினை யறியாது, சாதாரணமாகப் பகரலாயினர்;
- தாமத குணத்துடனே தத்துவம் பேசிக்கொண்டு,
- காமத்திற்கு அடிமைகளாகி,
- உள்ளத்தினில் கருணையற்று,
- புவியில் சஞ்சரித்து, வயிற்றினை நிரப்பிக்கொண்டு,
- தாமத குணத்துடனே தத்துவம் பேசிக்கொண்டு,
- தாமே பெரியோராம்!
- என்னவென்பேனய்யா, புவியில் மனிதர்கள் நடக்கும் புதுமையினை!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமி/-அந்து3னே/ விசித்ரமுனு/
என்ன/ என்பேனய்யா/ புதுமையினை/
இலலோன/ மனுஜுலு/-ஆடே3/
புவியில்/ மனிதர்கள்/ நடக்கும்/ (புதுமையினை)
அனுபல்லவி
நீ/ மந்த்ர/ மஹிமனு/-எருங்க3 லேக/
உனது/ மந்திர/ மகிமையினை/ யறியாது/
ஸாமான்யுலை/ பல்கெரு/ நீதோனு/-(ஏ)
சாதாரணமாக/ பகரலாயினர்/ உன்னிடம்/ என்னவென்பேனய்யா...
சரணம்
தாமஸம்பு3 சேத/ தத்வமு/ பல்குசு/
தாமத குணத்துடனே/ தத்துவம்/ பேசிக்கொண்டு/
காம/ தா3ஸுலை/ கருண/ மாலி/ மதி3னி/
காமத்திற்கு/ அடிமைகளாகி/ கருணை/ அற்று/ உள்ளத்தினில்/
பூ4மி/ ஸஞ்சரிஞ்சி/ பொட்ட/ நிம்புசுனு/
புவியில்/ சஞ்சரித்து/ வயிற்றினை/ நிரப்பிக்கொண்டு/
தாமே/ பெத்3த3லு-அட/ த்யாக3ராஜ/ நுத/ (ஏ)
தாமே/ பெரியோராம்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - நீ மந்த்ர - உனது மந்திரம் - 'ராம' என்பது தாரக நாமமாகும் - காஞ்சி மகாஸ்வாமிகளின் சொற்பொழிவினை நோக்கவும்.
2 - தாமஸம்பு3 சேத தத்வமு பல்குசு - தாமத குணத்துடன் தத்துவம் பேசிக்கொண்டு - இது குறித்து, கீதையில் (2-வது அத்தியாயம்), கண்ணன், அர்ச்சுனனுக்கு உரைத்தது -
"வருந்தவேண்டாதவருக்கு நீ வருந்துகின்றாய்; தத்துவச்சொற்களும் பேசுகின்றாய்;
சென்றவருக்காகவோ, இருப்பவருக்காகவோ, அறிஞர்கள் வருந்துவதில்லை." (11)
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
தாமத குணம் - முக்குணங்களில் இருள் வழி
Top
Updated on 15 Jul 2010
No comments:
Post a Comment