Wednesday, March 31, 2010

தியாகராஜ கிருதி - பாஹி ராம தூ3த - ராகம் வஸந்த வராளி - Pahi Rama Duta - Raga Vasanta Varali

பல்லவி
பாஹி ராம தூ3த ஜக3த்-ப்ராண குமார மாம்

அனுபல்லவி
வாஹினீஸ1 தரண 131 வத3ன ஸூனு தனு ஹரண (பா)

சரணம்
சரணம் 1
கோ4ராஸுர வாரான்னிதி4 2கும்ப4 தனய க்ரு2த கார்ய
3பாரிஜாத தரு நிவாஸ பவன துல்ய வேக3 (பா)


சரணம் 2
4பாத3 விஜித து3ஷ்ட க்3ரஹ பதித லோக பாவன
5வேத3 ஸா1ஸ்த்ர நிபுண வர்ய விமல சித்த ஸததம் மாம் (பா)


சரணம் 3
தருணாருண வத3னாப்3ஜ தபன கோடி ஸங்காஸ1
கர த்4ரு2த ரகு4வர ஸு-சரண கலி மலாப்463ந்த4 வாஹ (பா)


சரணம் 4
கருணா ரஸ பரிபூர்ண காஞ்சனாத்3ரி ஸம தே3
பரம பா43வத வரேண்ய வரத3 7த்யாக3ராஜ வினுத (பா)


பொருள் - சுருக்கம்
  • இராம தூதனே!
  • உலக மூச்சுக்காற்றின் மைந்தா!

    • கடலைத் தாண்டியவனே!
    • பத்து முகத்தோன் மைந்தனை வதைத்தவனே!

    • கொடிய அரக்கரெனும் கடலினை, கும்ப முனி போன்று, வற்றடித்தவனே!
    • பாரிசாத மரத்தினடியில் உறைபவனே!
    • வாயு நிகர் வேகத்தோனே!
    • கால்களால் தீய கோள்களை வென்றவனே!
    • வீழ்ந்தோரைப் புனிதப்படுத்துவோனே!

    • மறைகள் மற்றும் சாத்திரங்களில் வல்லோனே!
    • தூய உள்ளத்தோனே!
    • இளஞ்சூரியன் நிகர் கமல வதனத்தோனே!
    • பரிதி கோடி ஒருங்கிணைந்த ஒளியுடையோனே!
    • இரகுவரனின் புனிதத் திருவடிகளைக் கையிலேந்துவோனே!
    • கலி மலமெனும் கார்முகிலினை விரட்டும் புயலே!

    • கருணை உணர்வு நிறைந்தோனே!
    • பொன்மலை நிகருடலோனே!
    • தலைசிறந்த பாகவதர்களால் வேண்டப்படுவோனே!
    • வரமருள்வோனே!
    • தியாகராசனால் போற்றப் பெற்றோனே!


  • எவ்வமயமும் என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ ராம/ தூ3த/ ஜக3த்/-ப்ராண// குமார/ மாம்/
காப்பாய்/ இராம/ தூதனே/ உலக/ மூச்சுக்காற்றின்/ மைந்தா/ என்னை/


அனுபல்லவி
வாஹினீ/-ஈஸ1/ தரண/ த31/ வத3ன/ ஸூனு/ தனு ஹரண/ (பா)
நதி/ பதி (கடலை)/ தாண்டியவனே/ பத்து/ முகத்தோன்/ மைந்தனை/ வதைத்தவனே/


சரணம்
சரணம் 1
கோ4ர/-அஸுர/ வாராந்/-நிதி4/ கும்ப4/ தனய/ க்ரு2த கார்ய/
கொடிய/ அரக்கர்/ (எனும்) நீரின்/ நிதி (கடலினை)/ கும்பத்தில்/ தோன்றியோன் (முனி)/ (போன்று) செய்தவனே (வற்றடித்தவனே)/

பாரிஜாத/ தரு/ நிவாஸ/ பவன/ துல்ய/ வேக3/ (பா)
பாரிசாத/ மரத்தி்ன் (அடியில்)/ உறைபவனே/ வாயு/ நிகர்/ வேகத்தோனே/


சரணம் 2
பாத3/ விஜித/ து3ஷ்ட/ க்3ரஹ/ பதித லோக/ பாவன/
கால்களால்/ வென்றவனே/ தீய/ கோள்களை/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துவோனே/

வேத3/ ஸா1ஸ்த்ர/ நிபுண வர்ய/ விமல/ சித்த/ ஸததம்/ மாம்/ (பா)
மறைகள்/ சாத்திரங்களில்/ வல்லோனே/ தூய/ உள்ளத்தோனே/ எவ்வமயமும்/ என்னை/...


சரணம் 3
தருண/-அருண/ வத3ன/-அப்3ஜ/ தபன/ கோடி/ ஸங்காஸ1/
இளம்/ சூரியன் (நிகர்)/ வதனத்தோனே/ கமல/ பரிதி/ கோடி/ ஒருங்கிணைந்த ஒளியுடையோனே/

கர/ த்4ரு2த/ ரகு4வர/ ஸு-சரண/ கலி/ மல/-அப்4ர/ க3ந்த4 வாஹ/ (பா)
கையில்/ ஏந்துவோனே/ இரகுவரனின்/ புனிதத் திருவடிகளை/ கலி/ மலம் (எனும்)/ கார்முகிலினை/ (விரட்டும்) புயலே/


சரணம் 4
கருணா/ ரஸ/ பரிபூர்ண/ காஞ்சன/-அத்3ரி/ ஸம/ தே3ஹ/
கருணை/ உணர்வு/ நிறைந்தோனே/ பொன்/ மலை/ நிகர்/ உடலோனே/

பரம/ பா43வத/ வரேண்ய/ வரத3/ த்யாக3ராஜ/ வினுத/ (பா)
தலைசிறந்த/ பாகவதர்களால்/ வேண்டப்படுவோனே/ வரம்/ அருள்வோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
முதல் மூன்று சரணங்களும் சில புத்தகங்களில் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

6 - 3ந்த4 வாஹ - க3ந்த4 வஹ.

7 - த்யாக3ராஜ வினுத - த்யாக3ராஜ நுத.

Top

மேற்கோள்கள்
1 - 31 வத3ன ஸூனு - பத்து முகத்தோன் மைந்தன் - இராவணின் மைந்தன் - அட்ச குமாரன். அனுமன், சீதையைத் தேடி இலங்கை சென்றபோது, அட்ச குமாரனை வதைத்தான்

2 - கும்ப4 தனய - கும்ப முனி - அகத்தியர் - அகத்திய முனிவர், கடலில் பதுங்கியிருந்த அரக்கர்களை வெளிக்கொணர, கடலினைக் குடித்தார் என மகாபாரதத்தில் (3-வது புத்தகம், வன பருவம், 104 மற்றும் 105-வது அத்தியாயங்கள்) கூறப்பட்டுள்ளது.

3 - பாரிஜாத தரு - பாரிசாதத் தரு. அனுமன், பாரிசாதத் தருவின் அடியில் இருப்பதாகக் கூறப்படும் - 'பாரிஜாத தரு மூல வாஸினம்' - ஆஞ்சனேய தோத்திரம்.
Top

4 - பாத3 விஜித து3ஷ்ட க்3ரஹ - தீய கோள்களைக் காலால் வென்றவன் - செவ்வாய் மற்றும் சனி தீய கோள்கள் எனக் கருதப்படும்.

அனுமன், செவ்வாய் மற்றும் சனி கோள்களினால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குவதாகக் கூறப்படும்".

பராசரரின் 'ப்3ரு2ஹத் பராசர ஹோர சாத்திரம்' மற்றும் 'விகிபீடியா'வில் அனுமனைப் பற்றியும், தீய கோள்கள் பற்றியும் நோக்கவும்.

Top

5 - வேத3 ஸா1ஸ்த்ர நிபுண வர்ய - வால்மீகி ராமாயணத்தில் (கிஷ்கிந்தா காண்டம், 3-வது அத்தியாயம், செய்யுட்கள் 28, 29) இராமன், அனுமனைப் பற்றிக் கூறுவது -

"எவன், ரிக் வேதத்தினை, அதனுடைய பொருளுடன் அறிந்திலனோ, எவன், யஜுர் வேதத்தினை உருவேற்றவில்லையோ, எவன், சாம வேதத்தினை அறியானோ, அவனால் இவ்விதம் பேச இயலாது.

தவறாக, ஒரு சொல் கூட பேசாத இவனது திறமையைக் கண்டு, ஐயமின்றி, (ஸம்ஸ்கிருத) இலக்கணம் முழுவதும் இவனால் அறியப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது."

Top

விளக்கம்
உலக மூச்சுக்காற்று - வாயு
கலி மலம் - கலி யுகத்தின் தீயவைகள்
பொன்மலை - மேரு மலை

Top


Updated on 31 Mar 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 1- அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ள வேற்றுமை உருபுகள் எல்லாமே தொக்கி நிற்கின்றனவா. ஸம்ஸ்க்ருதத்தில் செய்யுள் இவ்வாறு தான் புனையப்படுமா.
பதம் பிரித்து வார்த்தைகளின் பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டால் பின் வருமாறு பொருள் முழுமையடைவதில்லையே.
‘கொடிய அரக்கர் நீரின் நிதி குடம் மகன்செய்தாய் செயல்’
இதற்குக் கீழ் வருமாறு பொருள் கொள்ளலாமா.
கொடிய/ அரக்கர்/ (எனும்) நீரின்/ நிதிக்கு (கடலினுக்கு)/ கும்பத்தில்/ தோன்றியோன் (முனி)/ காரியத்தைச் செய்தவனே (வற்றடித்தவனே)/
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களே,

தியாகராஜர் 'ஸ1ஸி1 வத3ன' என்ற சந்த்3ரஜ்யோதி ராக கீர்த்தனையில், கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் - 'தி3ன தி3னமௌபாஸன ஜப தப த்4யான யாக3மு வேள மனஸுன புட்டின க4ன ட3ம்புனி தோட3னு மாரீசுனி பனி செரசின' - இதனில் வரும் 'மாரீசுனி பனி செரசின' என்பதும், இந்த கீர்த்தனையில் வரும், 'கும்ப4 தனய க்ரு2த கார்ய' என்பதும் ஒரே மாதிரியானவை.

நான் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருளையும் கலந்தாலோசித்த பின்னரே இதற்குப் பொருள் எழுதினேன்.

நீங்கள் கூறியுள்ள பொருள் நான் கூறியதிலிருந்து மாறுபட்டதாகத் தெரியவில்லை.

வணக்கம்
கோவிந்தன்