Sunday, March 28, 2010

தியாகராஜ கிருதி - என்னாள்ளூரகே - ராகம் ஸு14 பந்துவராளி - Ennaallurake - Raga Subha Pantuvarali

பல்லவி
1என்னாள்ளூரகேயுந்து3வோ ஜூதாமு
2எவரடி3கே3-3வாரு லேதா3 ஸ்ரீ ராம

அனுபல்லவி
கொன்னாள்ளு ஸாகேத புரமேல லேதா3
4கோரிக முனுலகு கொன-ஸாக3 லேதா3 (எ)

சரணம்
ஸதி 5மாடனாலகிஞ்சி ஸத்3-ப4க்த கோடுல
ஸம்ரக்ஷிஞ்சக3 லேதா3
மதி-மந்துல 6ப்3ரோசே மதமு மாத3ன லேதா3
ஸததமு 7ஸ்ரீ த்யாக3ராஜு நம்மக3 லேதா3 (எ)


பொருள் - சுருக்கம்
ஸ்ரீ ராமா!

  • எத்தனை நாள் சும்மாயிருப்பாயோ, பார்க்கலாம்;
  • எவரும் (கேள்வி) கேட்பவரில்லையா?

    • சில காலம் சாகேத நகரத்தினை நீயாளவில்லையா?
    • முனிவர்களின் கோரிக்கைகளினை நிறைவேற்றவில்லையா?
    • இல்லாளின் சொல்லினைக் கருதி, நற்றொண்டர்களை நன்கு பேணவில்லையா?
    • அறிஞர்களைக் காக்கும் கொள்கை எமதெனவில்லையா?

    • எப்போழ்தும் தியாகராசன் (உன்னை) நம்பவில்லையா?

  • எத்தனை நாள் சும்மாயிருப்பாயோ, பார்க்கலாம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
என்னாள்ளு/-ஊரகே/-உந்து3வோ/ ஜூதாமு/
எத்தனை நாள்/ சும்மா/ இருப்பாயோ/ பார்க்கலாம்/

எவரு/-அடி3கே3-வாரு/ லேதா3/ ஸ்ரீ ராம/
எவரும்/ (கேள்வி) கேட்பவர்/ இல்லையா/ ஸ்ரீ ராமா/


அனுபல்லவி
கொன்னாள்ளு/ ஸாகேத/ புரமு/-ஏல லேதா3/
சில காலம்/ சாகேத/ நகரத்தினை/ (நீ) ஆளவில்லையா/

கோரிக/ முனுலகு/ கொன-ஸாக3/ லேதா3/ (எ)
கோரிக்கைகளினை/ முனிவர்களின்/ நிறைவேற்றவில்லையா/


சரணம்
ஸதி/ மாடனு/-ஆலகிஞ்சி/ ஸத்3-ப4க்த கோடுல/
இல்லாளின்/ சொல்லினை/ கருதி/ நற்றொண்டர்களை/

ஸம்ரக்ஷிஞ்சக3 லேதா3/
நன்கு பேணவில்லையா/

மதி-மந்துல/ ப்3ரோசே/ மதமு/ மாதி3/-அன லேதா3/
அறிஞர்களை/ காக்கும்/ கொள்கை/ எமது/ எனவில்லையா/

ஸததமு/ ஸ்ரீ த்யாக3ராஜு/ நம்மக3/ லேதா3/ (எ)
எப்போழ்தும்/ ஸ்ரீ தியாகராசன்/ (உன்னை) நம்பவில்லையா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - என்னாள்ளூரகே - என்னாள்ளுயூரகே.

2 - எவரடி3கே3 - எவரடி3கெ3டு3.

3 - வாரு லேதா3 - வாரு லேரா.

5 - மாடனாலகிஞ்சி - மாடலனாலகிஞ்சி.

6 - ப்3ரோசே - ப்3ரோசு.

7 - ஸ்ரீ த்யாக3ராஜு - ஸ்ரீ த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜு : இவ்விடத்தில் 'ஸ்ரீ த்யாக3ராஜு நுத' என்பது தவறாகும்.

Top

மேற்கோள்கள்
4 - கோரிக முனுலகு கொன-ஸாக3 லேதா3? - முனிவர்களின் கோரிக்கைகளினை நிறைவேற்றவில்லையா? வால்மீகி ராமாயணத்தில், (ஆரண்ய காண்டம், அத்தியாயம்-6) முனிவர்கள், அரக்கர்கள் தங்களுக்கிழைக்கும் கொடுமைகளை வருணித்து, தங்களைக் காக்கும்படி இராமனை வேண்டுகின்றனர். அங்ஙனமே, இராமன் அவர்களுக்கு உறுதிமொழி அளிக்கின்றான்.

Top

விளக்கம்



Updated on 28 Mar 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
கோரிக முனுலகு கொன-ஸாக3 லேதா3 -கொனஸாகு என்பதற்கு வர்த்3தி4ல்லு/ஸித்3தி4ஞ்சு என்று பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தாங்கள் ”முனிவர்களின் கோரிக்கைகளினை நிறைவேற்றவில்லையா” என்று பொருள் கொடுத்துள்ளீர். முனிவர்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லையா/ ஈடேறவில்லையா என்று பொருள் கொள்ளலாமா?
ந்னண்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'முனுல கோரிக கொனஸாக3 லேதா' என்றிருந்தால், நீங்கள் சொல்லும் விளக்கம் பொருந்தும். ஆனால் 'முனுலகு' (முனிவர்களுக்கு) என்றிருப்பதனால், அப்படிப் பொருள் கொள்ள இயலாது.

வணக்கம்
கோவிந்தன்