1உய்யாலலூக3வய்ய ஸ்ரீ ராம
அனுபல்லவி
ஸய்யாட பாடலனு ஸத்ஸார்வபௌ4ம (உ)
சரணம்
சரணம் 1
கமலஜாத்3யகி2ல ஸுருலு நினு கொல்வ
விமலுலைன முனீந்த்3ருலு த்4யானிம்ப
கமனீய பா4க3வதுலு கு3ண
கீர்தனமுலனாலாபம்பு3லு ஸேயக3 (உ)
சரணம் 2
நாரதா3து3லு மெரயுசு நுதியிம்ப
ஸாரமுலு பா3க3 வினுசு நினு நம்மு
வாரல ஸதா3 ப்3ரோசுசு வேத3
ஸார ஸப4லனு ஜூசுசு ஸ்ரீ ராம (உ)
சரணம் 3
நவ மோஹனாங்கு3லைன ஸுர ஸதுலு
விவரமுக3 பாட3க3 நா பா4க்3யமா
நவ ரத்ன மண்டபமுன த்யாக3ராஜ
வினுதாக்ரு2தி பூனின ஸ்ரீ ராம (உ)
பொருள் - சுருக்கம்
இராமா! மெய்யான, உலகாள்வோனே! எனது பேறே! தியாகராசனால் போற்றப் பெற்றோனெனும் உருக்கொண்டோனே!
- தொட்டிலினில் ஆடுமய்யா;
- கேளிக்கையான பாடல்களெனும் தொட்டிலினில் ஆடுமய்யா;
- மலரோன் முதலாக அனைத்து வானோரும் உன்னை சேவிக்க,
- தூயோரான, முனிவரில் தலைசிறந்தோர் (உன்னை) தியானிக்க,
- பாகவதர்கள், விரும்பத்தக்க, உனது புகழ்பாடும் கீர்த்தனங்களை, ஆலாபனம் செய்ய,
- மலரோன் முதலாக அனைத்து வானோரும் உன்னை சேவிக்க,
- தொட்டிலினில் ஆடுமய்யா.
- நாரதாதியர், ஒளிர்ந்துகொண்டு, (உன்னைப்) புகழ,
- (அவற்றின்) சாரத்தினை நன்கு செவி மடுத்துக்கொண்டு,
- உன்னை நம்பினோரை எவ்வமயமும் பேணிக்கொண்டு,
- மறைகளின் சாரமுரைக்கும் அவைகளை நோக்கிக்கொண்டு,
- நாரதாதியர், ஒளிர்ந்துகொண்டு, (உன்னைப்) புகழ,
- தொட்டிலினில் ஆடுமய்யா;
- இளைய, எழிலங்கங்களுடைய, வான் மடந்தையர் விவரமாகப் பாட,
- நவரத்தின மண்டபத்தினில்,
- இளைய, எழிலங்கங்களுடைய, வான் மடந்தையர் விவரமாகப் பாட,
- தொட்டிலினில் ஆடுமய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
உய்யாலல/-ஊக3வய்ய/ ஸ்ரீ ராம/
தொட்டிலினில்/ ஆடுமய்யா/ ஸ்ரீ ராமா/
அனுபல்லவி
ஸய்யாட/ பாடலு/-அனு/ ஸத்/-ஸார்வபௌ4ம/ (உ)
கேளிக்கையான/ பாடல்கள்/ எனும்/ மெய்யான/ உலகாள்வோனே/ தொட்டிலினில்...
சரணம்
சரணம் 1
கமலஜ/-ஆதி3/-அகி2ல/ ஸுருலு/ நினு/ கொல்வ/
மலரோன்/ முதலாக/ அனைத்து/ வானோரும்/ உன்னை/ சேவிக்க/
விமலுலைன/ முனி/-இந்த்3ருலு/ த்4யானிம்ப/
தூயோரான/ முனிவரில்/ தலைசிறந்தோர்/ (உன்னை) தியானிக்க/
கமனீய/ பா4க3வதுலு/ கு3ண/
விரும்பத்தக்க/ பாகவதர்கள்/ (உனது) புகழ்பாடும்/
கீர்தனமுலனு/-ஆலாபம்பு3லு/ ஸேயக3/ (உ)
கீர்த்தனங்களை/ ஆலாபனம்/ செய்ய/ தொட்டிலினில்...
சரணம் 2
நாரத3-ஆது3லு/ மெரயுசு/ நுதியிம்ப/
நாரதாதியர்/ ஒளிர்ந்துகொண்டு/ (உன்னைப்) புகழ/
ஸாரமுலு/ பா3க3/ வினுசு/ நினு/
(அவற்றின்) சாரத்தினை/ நன்கு/ செவி மடுத்துக்கொண்டு/ உன்னை/
நம்மு வாரல/ ஸதா3/ ப்3ரோசுசு/ வேத3/
நம்பினோரை/ எவ்வமயமும்/ பேணிக்கொண்டு/ மறைகளின்/
ஸார/ ஸப4லனு/ ஜூசுசு/ ஸ்ரீ ராம/ (உ)
சாரம் (உரைக்கும்)/ அவைகளை/ நோக்கிக்கொண்டு/ ஸ்ரீ ராமா/ தொட்டிலினில்...
சரணம் 3
நவ/ மோஹன/-அங்கு3லைன/ ஸுர/ ஸதுலு/
இளைய/ எழில்/ அங்கங்களுடைய/ வான்/ மடந்தையர்/
விவரமுக3/ பாட3க3/ நா/ பா4க்3யமா/
விவரமாக/ பாட/ எனது/ பேறே/
நவ/ ரத்ன/ மண்டபமுன/ த்யாக3ராஜ/
நவ/ ரத்தின/ மண்டபத்தினில்/ தியாகராசனால்/
வினுத/-ஆக்ரு2தி/ பூனின/ ஸ்ரீ ராம/ (உ)
போற்றப் பெற்றோனெனும்/ உரு/ கொண்ட/ இராமா/ தொட்டிலினில்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - உய்யாலலூக3வய்ய ஸ்ரீ ராம - உய்யாலலூக3வய்ய.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
Updated on 24 Dec 2009
No comments:
Post a Comment