Sunday, October 11, 2009

தியாகராஜ கிருதி - இபுடை3ன நனு - ராகம் ஆரபி4 - Ipudaina Nanu - Raga Arabhi - Prahlada Bhakti Vijayam

பல்லவி
1இபுடை3ன நனு தலசினாரா ஸ்வாமி
2க்ரு2பகு பாத்ருட3னனி கீர்திஞ்சினாரா

சரணம்
சரணம் 1
3ய சேஸி நா மாடலெல்ல நா
தல்லிதோ பலிகின கொல்ல
நயமுக3 விண்டி 3மீ வல்ல நேடு3
நா மனஸுனனெந்தோ சல்லனாயெ (இ)


சரணம் 2
உன்னத த3யகாஸகொண்டி நேனு
3ன்னமுலகு பாலையுண்டி
கன்னுலார மிமு கண்டி நேடு3
கர்ணாம்ரு2தபு மாட விண்டி 4ஸ்வாமி (இ)


சரணம் 3
5பலு ரூபமுலு தானு பூ3னி நன்னு
பா3தி4ஞ்சி வேட்3க ஜூசின
பலுமாரு நன்னு 6ஏசின 7புண்ய
பாபமு ஹரி செந்த
கானியேமந்து3 (இ)


சரணம் 4
பூ4மினி புட்டக3 லேனு பூ4யோ
பூ4யோ ஹரினி நம்மினானு
தாமஸமுனு தாள லேனு வர
த்யாக3ராஜாப்துடு3 8மதி3 லோனு (இ)


பொருள் - சுருக்கம்
(நாரதரை நோக்கி பிரகலாதன் பகரும் சொற்கள்)

  • இப்போதாவது என்னை நினைத்தாரா, சுவாமி! அருளுக்குத் தகுந்தவனெனப் போற்றினாரா!

  • தயை செய்து, என்னைப் பற்றிய சொற்களையெல்லாம் எனது தாயிடம் (அரி) பகர்ந்த கொள்ளையை நன்றாகக் கேட்டேன், உம்மால் இன்று; எனது உள்ளத்தினில் மிக்கு குளுமையாகியது;

  • உன்னதமான கருணைக்கு ஆசைகொண்டேன்; நான் இடறுகளுக்குள்ளாகி யிருந்தேன்; கண்ணார உம்மைக் கண்டேனின்று; செவிக்கமிழ்தான சொற்களைக் கேட்டேன்;

  • பல உருவங்களைத் தான் பூண்டு, என்னைத் துன்புறுத்தி வேடிக்கை பார்த்தாலும், பலமுறை என்னை தொல்லைப்படுத்தினாலும், புண்ணிய பாவங்கள் அரியிடமேயன்றி, வேறென்ன சொல்வேன்?

  • புவியில் பிறக்கவியலேன், மீண்டும் மீண்டும்; அரியை நம்பியுள்ளேன்; தாமதத்தினைப் பொறுக்கவியலேன்;

  • உயர் தியாகராசனுக்கு வேண்டியவர் (தனது) உள்ளத்தினில் இப்போதாவது என்னை நினைத்தாரா!பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இபுடை3ன/ நனு/ தலசினாரா/ ஸ்வாமி/
இப்போதாவது/ என்னை/ நினைத்தாரா/ சுவாமி/

க்ரு2பகு/ பாத்ருட3னு/-அனி/ கீர்திஞ்சினாரா/
அருளுக்கு/ தகுந்தவன்/ என/ போற்றினாரா/


சரணம்
சரணம் 1
3ய/ சேஸி/ நா/ மாடலு/-எல்ல/ நா/
தயை/ செய்து/ என்னைப் பற்றிய/ சொற்களை/ எல்லாம்/ எனது/

தல்லிதோ/ பலிகின/ கொல்ல/
தாயிடம்/ (அரி) பகர்ந்த/ கொள்ளையை/

நயமுக3/ விண்டி/ மீ வல்ல/ நேடு3/
நன்றாக/ கேட்டேன்/ உம்மால்/ இன்று/

நா/ மனஸுனனு/-எந்தோ/ சல்ல/-ஆயெ/ (இ)
எனது/ உள்ளத்தினில்/ மிக்கு/ குளுமை/ ஆகியது/


சரணம் 2
உன்னத/ த3யகு/-ஆஸகொண்டி/ நேனு/
உன்னதமான/ கருணைக்கு/ ஆசைகொண்டேன்/ நான்/

3ன்னமுலகு/ பாலை/-உண்டி/
இடறுகளுக்கு/ உள்ளாகி/ இருந்தேன்/

கன்னுலார/ மிமு/ கண்டி/ நேடு3/
கண்ணார/ உம்மை/ கண்டேன்/ இன்று/

கர்ண/-அம்ரு2தபு/ மாட/ விண்டி/ ஸ்வாமி/ (இ)
செவிக்கு/ அமிழ்தான/ சொற்களை/ கேட்டேன்/ சுவாமி/ இப்போதாவது...


சரணம் 3
பலு/ ரூபமுலு/ தானு/ பூ3னி/ நன்னு/
பல/ உருவங்களை/ தான்/ பூண்டு/ என்னை/

பா3தி4ஞ்சி/ வேட்3க/ ஜூசின/
துன்புறுத்தி/ வேடிக்கை/ பார்த்தாலும்/

பலுமாரு/ நன்னு/ ஏசின/ புண்ய/
பலமுறை/ என்னை/ தொல்லைப்படுத்தினாலும்/ புண்ணிய/

பாபமு/ ஹரி செந்த/ கானி/-ஏமந்து3/ (இ)
பாவங்கள்/ அரியிடமே/ அன்றி/ (வேறு) என்ன/ சொல்வேன்/


சரணம் 4
பூ4மினி/ புட்டக3/ லேனு/ பூ4யோ/
புவியில்/ பிறக்க/ இயலேன்/ மீண்டும்/

பூ4யோ/ ஹரினி/ நம்மினானு/
மீண்டும்/ அரியை/ நம்பியுள்ளேன்/

தாமஸமுனு/ தாள/ லேனு/ வர/
தாமதத்தினை/ பொறுக்க/ இயலேன்/ உயர்/

த்யாக3ராஜ/-ஆப்துடு3/ மதி3 லோனு/ (இ)
தியாகராசனுக்கு/ வேண்டியவர்/ (தனது) உள்ளத்தினில்/ இப்போதாவது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - க்ரு2பகு பாத்ருட3னனி கீர்திஞ்சினாரா - பல்லவியின் இச்சொற்கள் அனுபல்லவியாக சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

3 - மீ வல்ல - நீ வல்ல : இரண்டாவது சரணத்தில், பிரகலாதன் நாரதரை, 'மிம்மு கண்டி' - 'உம்மைக் கண்டேன்' என்று மரியாதைப் பன்மையில் கூறுகின்றான். எனவே, இங்கும் மரியாதைப் பன்மையாகிய 'மீ வல்ல' தான் இருக்கவேண்டும்.

4 - ஸ்வாமி - சில புத்தகங்களில், இச்சொல் கொடுக்கப்படவில்லை. இச்சொல் நாரதரைக் குறிப்பதாகவோ அல்லது இறைவனைக் குறிப்பதாகவோ கொள்ளலாம்.

Top

மேற்கோள்கள்
7 - புண்ய பாபமு ஹரி செந்த - புண்ணிய, பாவங்கள் அரியிடமே - அரிக்கே அர்ப்பணம் என. இது, கீதையில், கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசிக்கும் (18-வது அத்தியாயம், 66-வது செய்யுள்) சரணாகதி நெறியினை ஒட்டியுள்ளது. கண்ணன் கூறுவதாவது -

"அனைத்து தர்மங்களையும் கைவிட்டு என் ஒருவனையே சரணடைவாயாக;
நான் உன்னை அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலை கொள்ளாதே."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
1 - இபுடை3ன நனு தலசினாரா - இப்போதாவது என்னை நினைத்தாரா! இப்பாடல், பிரகலாதன், அரியின் செய்தியைக் கொணர்ந்த நாரதரை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது. எனவே, இது ஒரு கேள்வியல்ல; தன்னுடைய வியப்பினை பிரகலாதன் வெளிப்படுத்துவதாக.

5 - பலு ரூபமுலு - பல உருவங்களைத் தான் பூண்டு - இது, பிரகலாதனின் உள்ளப் பாங்கினை வெளிப்படுத்தவதாக அமைந்துள்ளது. அவனுக்குத் தொல்லைகள் தரும் தந்தையாகிலும், அவனுடை (தந்தையின்)ஆணையை நிறைவேற்றி, பிரகலாதனுக்குத் தொல்லைகள் கொடுக்கும், அவனது (தந்தையின்) ஏவலாளிகளாகிலும், அவர்கள் யாவருமே, அரியின் பல உருவங்களாக பிரகலாதனின் கண்ணுக்குத் தோன்றுகின்றது. இத்தகைய உயர்ந்த உள்ள நிலை பெற அவன் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

6 - ஏசின - புத்தகங்களில் இச்சொல்லினை 'ஏய்த்தாலும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தெலுங்கு சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை. எனவே தெலுங்கு மொழியின் பொருளான 'தொல்லப் படுத்தினாலும்' என்றே கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும், 'ஏய்த்தாலும்' என்ற பொருளும் இங்கு பொருந்தும்.

8 - மதி3 லோனு - இச்சொல், இங்ஙனமே, எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரையில், இது, 'மதி3 லோன' என்றிருக்கவேண்டும்.

இந்த கீர்த்தனை பிரகலாத பக்தி விஜயம் என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.

எனது தாய் - இலக்குமியைக் குறிக்கும்
தியாகராசனுக்கு வேண்டியவர் - அரியினைக் குறிக்கும்

Top


Updated on 12 Oct 2009

4 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
ஆங்கிலத்தில் கருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டபோது இரண்டு சந்தேகங்களை நான் எழுப்பினேன்,
1. திருப்பதி திருமலை தேவஸ்தான வெளியீட்டில் இது பிரகலாதன் விஷ்ணுவை நோக்கிப் பாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. நாரதரைப் பார்த்து பாடப்பட்டது என்று எவ்வாறு தாங்கள் கூறுகின்றீர்?
2. சரணம் 1 ல் ’ பலிகின கொல்ல’ என்பதற்கு ’ பகர்ந்த கொள்ளையை’ என்று பொருள் கூறியுள்ளீர். என்னால் இதை முழுமையாக் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தல்லிதோ பலிகினதி3 கொள்ள நயமுக3 விண்டி என்று எடுத்துக் கொள்ளலாமா. கொள்ள என்பது மிக்க எனும் பொருளில் வழங்குகிறது.
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

முதலாவது சரணத்தில்,'மீவல்ல நேடு3' என்று கூறப்பட்டுள்ளது. அது நாரதரைக் குறிக்கும். தியாகராஜர் எழுதிய இரண்டு நாட்டிய-நாடகங்களிலும், வசனப் பகுதி தனியாக உள்ளது. அதனை நான் இதுவரை மொழி்பெயர்க்கவில்லை. அந்த வசனப்பகுதியினைக் கருத்தில் கொண்டுதான் நான் எனது குறிப்புகளை எழுதுகின்றேன். அந்த வசனத்தின்படி, இப்பாடல், பிரகலாதன் நாரதரை நோக்கிப் பாடுவதாகும்.

கொல்ல - இதைப்பற்றி நாம் ஆங்கிலப் பகுதியில் நமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம். என்னாலியன்றவரை, இந்த சொல்லுக்கு, சூழ்நிலைக்கேற்றவாறு, மொழிபெயர்த்துள்ளேன். நான் மொழிபெயர்த்துதான் சரியென்று நான் கூறவில்லை. ஆகவே, தங்களுடைய கருத்துக்கள் இங்கு வெளியாவதனால், இந்த blog-களைப் படிப்போர் தமது நோக்கத்தின்படி ஐயப்பாடுகளை ஏற்றுக்கொள்வர் அல்லது நிராகரிப்பர்.

வணக்கம்
கோவிந்தன்

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களுக்கு

கொல்ல என்ற சொல்லுக்கு கீழ்க்கண்ட பாடல்களில் கொள்ளை என்று பொருள் கொடுத்துள்ளீர். கோயமுத்தூர் பகுதியில் பேசும் தெலுங்கில் கொல்ல/கொள்ள/கொள்ளகா என்பது ’மிக’ என்னும் பொருளில் வழங்குகிறது.

1 இபுடை3ன நனு தலசினாரா ஸ்வாமி
க்ரு2பகு பாத்ருட3னனி கீர்திஞ்சினாரா

மாடலெல்ல நா
தல்லிதோ பலிகின கொல்ல
நயமுக3

பொருள்- எனது தாயிடம் (அரி) பகர்ந்த கொள்ளையை நன்றாகக் கேட்டேன்,


2 இன்னாள்ளு த3ய ராகுன்ன வைனமேமி

சல்லனி பத3முல கொல்லலாடு3சு

பொருள்-உனது குளிர்ந்த திருவடிகளைக் கொள்ளை கொண்டு,

கீழ்க்காணும் அன்னமாச்சாரியார் பாடலில் கொல்லலு என்பது ‘பல’ என்னும் பொருள் தருகிறது. கொள்ளை என்று அல்ல.

கோ3விந்தா3தி3 நாமோச்சாரண கொல்லலு தொ3ரிகெனு மனகிபுடு3

வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தமிழில் 'கொள்ளை' என்ற சொல், 'மிக்கு அதிகமாக' என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகின்றது - உதாரணமாக - 'தக்காளி கொள்ளை போகின்றது'. இதற்கு ஈடான தெலுங்கு சொல் 'கொல்ல' ஆகும். எனவே, நான் 'கொள்ளை' என்று தமிழ் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியது தவறாகாது.

வணக்கம்,
கோவிந்தன்