Sunday, October 11, 2009

தியாகராஜ கிருதி - அம்ப3 நினு - ராகம் ஆரபி4 - Amba Ninu - Raga Arabhi

பல்லவி
அம்ப3 நினு நம்மிதினண்டே
நீகனுமானமேமம்ம

அனுபல்லவி
11ம்ப3ர வைரி ஜனக ஸோத3ரி
1ரணு ஜொச்சி 2மனஸார ஸ்ரீ ஜக3(த3ம்ப3)

சரணம்
சரணம் 1
கீ3ர்வாண க3ணாதா4ரி அம்ப3
1ர்வாணி அக2ண்டா3காரி
பர்வத ராஜ மனோக்3ஞ குமாரி
நிர்வாஹமு லேக மதி3னி கோரி (அம்ப3)


சரணம் 2
ஸுர வைரி கத3ன ஸௌ1ர்யே
வருணாலய ஸம கா3ம்பீ4ர்யே
ஸ்வர ஜித கோகில ரவ மாது4ர்யே
பரிதாபமு தாளகனு ஸு-சர்யே (அம்ப3)


சரணம் 3
1ர்ம தா3யகி கௌ3ரி
து3ஷ்-கர்ம கலுஷ வன குடா2ரி
3நிர்மல த்யாக3ராஜ ஹ்ரு2ச்-சாரி
4ர்ம ஸம்வர்த4னி ஓங்காரி (அம்ப3)


பொருள் - சுருக்கம்
  • அம்மா!

  • சம்பரனின் பகைவனை யீன்றோனின் சோதரியே! ஓ உலகத்தாயே!

  • வானோர்களுக்கு ஆதாரமான, அம்மையே! சருவாணியே! நீக்கமற்ற உருவினளே! மலையரசனின் இனிய மகளே!

  • வானோர் பகைவரையழிக்கும் சூரியே! கடல் நிகர் மாட்சிமையுடையவளே! குயிலின் கூவலை வெல்லும் குரலினிமையுடைவளே! நன்னடத்தையினளே!

  • மகிழ்ச்சி அருளும் கௌரியே! தீயச் செயல்களெனும் இழிந்த அடவியை அழிக்கும் கோடரியே! களங்கமற்ற, தியாகராசனின் இதயத்துறையே! அறம் வளர்த்த நாயகியே! ஓங்காரியே!

    • உன்னை நம்பினேனென்றால் உனக்கு ஐயமென்னவம்மா?

    • புகலடைந்து, மனதார உன்னை நம்பினேனென்றால் உனக்கு ஐயமென்னவம்மா?

    • சமாளிக்க இயலாது, மனதினில் விழைந்து, உன்னை நம்பினேனென்றால் உனக்கு ஐயமென்னவம்மா?

    • பரிதாபம் தாளாது உன்னை நம்பினேனென்றால் உனக்கு ஐயமென்னவம்மா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அம்ப3/ நினு/ நம்மிதினி/-அண்டே/
அம்மா/ உன்னை/ நம்பினேன்/ என்றால்/

நீகு/-அனுமானமு/-ஏமம்ம/
உனக்கு/ ஐயம்/ என்னவம்மா/


அனுபல்லவி
1ம்ப3ர/ வைரி/ ஜனக/ ஸோத3ரி/
சம்பரனின்/ பகைவனை/ ஈன்றோனின்/ சோதரியே/

1ரணு/ ஜொச்சி/ மனஸார/ ஸ்ரீ ஜக3த்-(அம்ப3)
புகல்/ அடைந்து/ மனதார/ ஸ்ரீ உலக/ தாயே...


சரணம்
சரணம் 1
கீ3ர்வாண க3ண/-ஆதா4ரி/ அம்ப3/
வானோர்களுக்கு/ ஆதாரமான/ அம்மையே/

1ர்வாணி/ அக2ண்ட3/-ஆகாரி/
சருவாணியே/ நீக்கமற்ற/ உருவினளே/

பர்வத/ ராஜ/ மனோக்3ஞ/ குமாரி/
மலை/ யரசனின்/ இனிய/ மகளே/

நிர்வாஹமு/ லேக/ மதி3னி/ கோரி/ (அம்ப3)
சமாளிக்க/ இயலாது/ மனதினில்/ விழைந்து/ அம்மா...


சரணம் 2
ஸுர/ வைரி/ கத3ன/ ஸௌ1ர்யே/
வானோர்/ பகைவரை/ யழிக்கும்/ சூரியே/

வருண-ஆலய/ ஸம/ கா3ம்பீ4ர்யே/
கடல்/ நிகர்/ மாட்சிமையுடையவளே/

ஸ்வர/ ஜித/ கோகில/ ரவ/ மாது4ர்யே/
குரல்/ வெல்லும்/ குயிலின்/ கூவலை/ இனிமையுடைவளே/

பரிதாபமு/ தாளகனு/ ஸு-சர்யே/ (அம்ப3)
பரிதாபம்/ தாளாது/ நன்னடத்தையினளே/ அம்மா...


சரணம் 3
1ர்ம/ தா3யகி/ கௌ3ரி/
மகிழ்ச்சி/ அருளும்/ கௌரியே/

து3ஷ்/-கர்ம/ கலுஷ/ வன/ குடா2ரி/
தீய/ செயல்களெனும்/ இழிந்த/ அடவியை (அழிக்கும்)/ கோடரியே/

நிர்மல/ த்யாக3ராஜ/ ஹ்ரு2ச்-சாரி/
களங்கமற்ற/ தியாகராசனின்/ இதயத்துறையே/

4ர்ம/ ஸம்வர்த4னி/ ஓங்காரி/ (அம்ப3)
அறம்/ வளர்த்த நாயகியே/ ஓங்காரியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மனஸார - மனஸாரக3.

Top

மேற்கோள்கள்
1 - 1ம்ப3ர வைரி - சம்பரனின் பகைவன் - காமன் - சம்பரன் என்ற அரக்கனை, காமனின் மறு உருவாகக் கருதப்படும், கண்ணனின் மகனாகிய, பிரத்யும்னன் கொன்றான்

Top

விளக்கம்
3 - நிர்மல - களங்கமற்ற - 'களங்கமற்ற, தியாகராசனின் இதயத்துறையே!' என்றோ, அல்லது 'களங்கமற்றவளே! தியாகராசனின் இதயத்துறையே!' என்றோ கொள்ளலாம்.

சம்பரனின் பகைவனையீன்றோன் - அரி
சருவாணி - சிவனின் மனைவி
நீக்கமற்ற - 'உருவமற்ற', 'பாகுபடாத' என்றும் கொள்ளலாம்.
அறம் வளர்த்த நாயகி - திருவைய்யாற்றில் அம்மையின் பெயர்

Top


Updated on 11 Oct 2009

No comments: