Tuesday, October 13, 2009

தியாகராஜ கிருதி - ஓ ராஜீவாக்ஷ - ராகம் ஆரபி4 - O Rajeevaaksha - Raga Arabhi

பல்லவி
ஓ ராஜீவாக்ஷ 1ஓர ஜூபுலு
ஜூசெத3வேரா நே நீகு வேரா

அனுபல்லவி
நேரனி நாபை நேரமுலெஞ்சிதே
காராத3னி 2பலகே வாரு லேனி நன்னு (ஓ)

சரணம்
சரணம் 1
மக்குவதோ நின்னு ம்ரொக்கின ஜனுலகு
3தி3க்கு நீவை அதி க்3ரக்குன ப்3ரோதுவனி
எக்குவ ஸுஜனுலயொக்க மாடலு வினி
சக்கனி ஸ்ரீ ராம த3க்கிதி கத3ரா (ஓ)


சரணம் 2
4மிதி மேர லேனி ப்ரக்ரு2திலோன தகி3லி நே
மதி ஹீனுடை3 ஸன்னுதி ஸேய நேரக
3திமாலி நீவே க3தியனி நெர
நம்மிதி கானி நினு மரசிதினா ஸந்ததமு (ஓ)


சரணம் 3
மா வர ஸுகு3ண உமா வர ஸன்னுத
தே3வர த3ய சேஸி ப்3ரோவக3 ராதா3
பாவன ப4க்த ஜனாவன மஹானுபா4
த்யாக3ராஜ பா4வித 5இங்க நன்னு (ஓ)


பொருள் - சுருக்கம்
  • ஓ கமலக்கண்ணா! இனிய இராமா! மா மணாளா! நற்குணத்தோனே! உமாபதி போற்றும் இறைவா! புனிதனே! தொண்டர்களைக் காப்போனே! பெருந்தகையே! தியாகராசனால் உணரப்பட்டோனே!

  • ஓரக்கண் நோக்குவதென்னவய்யா? நானுனக்கு வேறா?

    • கல்லாத என்மீது குற்றங்கள் கண்டால், கூடாதெனப் பகர்வோர் இல்லாத என்னை, ஓரக்கண் நோக்குவதென்னவய்யா?

    • காதலுடனுன்னை வணங்கும் மக்களுக்குப் புகல் நீயாகி, வெகு விரைவாகக் காப்பாயென, மிக்கு நல்லோர்களின் சொற்களைச் செவி மடுத்து, உனக்குப் பணிந்தேனல்லவோ அய்யா? எனவே, ஓரக்கண் நோக்குவதென்னவய்யா?

    • முடிவோ, கரையோ அற்ற இயற்கையுள் சிக்கி, நான் மதி கெட்டு (உன்னைப்) போற்றி செய்ய நேராது, (உன்னை) இரந்து, நீயே கதியென மிக்கு நம்பினேனே அன்றி, உன்னை மறந்தேனா? எனவே, எப்போழ்தும் ஓரக்கண் நோக்குவதென்னவய்யா?

  • தயை செய்து காக்கலாகாதா?

  • இன்னமும் என்னை ஓரக்கண் நோக்குவதென்னவய்யா?

  • நானுனக்கு வேறா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ ராஜீவ/-அக்ஷ/ ஓர/ ஜூபுலு/
ஓ கமல/ கண்ணா/ ஓர/ கண்/

ஜூசெத3வு/-ஏரா/ நே/ நீகு/ வேரா/
நோக்குவது/ என்னவய்யா/ நான்/ உனக்கு/ வேறா/


அனுபல்லவி
நேரனி/ நாபை/ நேரமுலு/-எஞ்சிதே/
கல்லாத/ என்மீது/ குற்றங்கள்/ கண்டால்/

காராது3/-அனி/ பலகே வாரு/ லேனி/ நன்னு/ (ஓ)
கூடாது/ என/ பகர்வோர்/ இல்லாத/ என்னை/ ஓ கமலக்கண்ணா...


சரணம்
சரணம் 1
மக்குவதோ/ நின்னு/ ம்ரொக்கின/ ஜனுலகு/
காதலுடன்/ உன்னை/ வணங்கும்/ மக்களுக்கு/

தி3க்கு/ நீவை/ அதி/ க்3ரக்குன/ ப்3ரோதுவு/-அனி/
புகல்/ நீயாகி/ வெகு/ விரைவாக/ காப்பாய்/ என/

எக்குவ/ ஸுஜனுல-ஒக்க/ மாடலு/ வினி/
மிக்கு/ நல்லோர்களின்/ சொற்களை/ செவி மடுத்து/

சக்கனி/ ஸ்ரீ ராம/ த3க்கிதி/ கத3ரா/ (ஓ)
இனிய/ ஸ்ரீ ராமா/ (உனக்குப்) பணிந்தேன்/ அல்லவோ அய்யா/


சரணம் 2
மிதி/ மேர/ லேனி/ ப்ரக்ரு2திலோன/ தகி3லி/ நே/
முடிவோ/ கரையோ/அற்ற/ இயற்கையுள்/ சிக்கி/ நான்/

மதி/ ஹீனுடை3/ ஸன்னுதி/ ஸேய/ நேரக/
மதி/ கெட்டு/ (உன்னைப்) போற்றி/ செய்ய/ நேராது/

3திமாலி/ நீவே/ க3தி/-அனி/ நெர/
(உன்னை) இரந்து/ நீயே/ கதி/ என/ மிக்கு/

நம்மிதி/ கானி/ நினு/ மரசிதினா/ ஸந்ததமு/ (ஓ)
நம்பினேனே/ அன்றி/ உன்னை/ மறந்தேனா/ எப்போழ்தும்/ ஓ கமலக்கண்ணா...


சரணம் 3
மா/ வர/ ஸுகு3ண/ உமா/ வர/ ஸன்னுத/
மா/ மணாளா/ நற்குணத்தோனே/ உமா/ பதி/ போற்றும்/

தே3வர/ த3ய/ சேஸி/ ப்3ரோவக3/ ராதா3/
இறைவா/ தயை/ செய்து/ காக்கல்/ ஆகாதா/

பாவன/ ப4க்த ஜன/-அவன/ மஹானுபா4வ/
புனிதனே/ தொண்டர்களை/ காப்போனே/ பெருந்தகையே/

த்யாக3ராஜ/ பா4வித/ இங்க/ நன்னு/ (ஓ)
தியாகராசனால்/ உணரப்பட்டோனே/ இன்னமும்/ என்னை/ ஓ கமலக்கண்ணா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பலகே வாரு - பலுகு வாரு.

3 - தி3க்கு நீவை - தி3க்கு நீவனி.

5 - இங்க நன்னு - இங்கனு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஓர ஜூபுலு - ஓரக் கண் - இது 'கடைக்கண்' என்பதனின்றும் வேறுபட்டதாகும். 'கடைக்கண்', அருளைக் குறிக்கும். 'ஓரக்கண்', சினத்தை அல்லது வெறுப்பைக் குறிக்கும்.

4 - மிதி மேர லேனி - முடிவோ கரையோ அற்ற - 'லேனி' (அற்ற), 'மிதி மேர' (முடிவு, கரை) இரண்டிற்கும் பொதுவானது.

இயற்கை - பிறவிக் கடல்

Top


Updated on 13 Oct 2009

No comments: