Tuesday, September 29, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ரகு4வர தா3ஸ1ரதே2 - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Sri Raghuvara Dasarathe - Raga Sankarabharanam

பல்லவி
ஸ்ரீ ரகு4வர தா31ரதே2 ராம

சரணம்
சரணம் 1
வந்தி31ஸுர முனி ப்3ரு2ந்த3 பராத்பர
மந்த3ர த4ர ஸ்ரீ ஸுந்த3ர ராம (ஸ்ரீ)


சரணம் 2
ஸ்ரீ-கர கோடி விபா4கர பா4
ஸுதா4கர வத3ன க்4ரு2ணாகர ராம (ஸ்ரீ)


சரணம் 3
2ஸாராத்-ஸார புராரி நுதாக4
விதா3ரண ஸ்ரீ ரகு4வீர ஹரே ராம (ஸ்ரீ)


சரணம் 4
பாலித ஸு-ஜன விஸா1ல நயன
கோ3பால வித்4ரு2த ஸ1ர ஜால ஹரே ராம (ஸ்ரீ)


சரணம் 5
அக3ணித கு3ண க3ண விக3ளித மோஹ
விஹக3 ராஜ வர துரக3 ஸ்ரீ ராம (ஸ்ரீ)


சரணம் 6
காயஜ ஜனக வினாயக நுத வர
தா3யக ஸ்ரீ ரகு4 நாயக ராம (ஸ்ரீ)


சரணம் 7
பா4வஜ த3மன விபா4வித 33னுஜ-
பா4
மஹானுபா4வ ஹரே ராம (ஸ்ரீ)


சரணம் 8
ஸனகாதி3 வினுத கனகாம்ப3ர த4
இன குல திலக ஜனக ஸுதா ராம (ஸ்ரீ)


சரணம் 9
ராக்ஷஸ க3ண மத3 4ஸி1க்ஷக
தே3வாத்4யக்ஷ ஸாரஸ த3ளாக்ஷ ஹரே ராம (ஸ்ரீ)


சரணம் 10
1ங்கர ஸக2 நிஸ்1-ஸ1ங்க முக2 ஜித
1ஸா1ங்க ஸு-கு3ண ஸீதாங்க ஹரே ராம (ஸ்ரீ)


சரணம் 11
5ராஜானல தி3ன ராஜ ஸு-நயன
விராஜித த்யாக3ராஜ நுத ராம (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
 • இரகுவரா! தசரதன் மைந்தா, இராமா!

 • வானோர்கள், முனிவர்கள் வந்திக்கும் பராபரனே! மந்தர மலையைச் சுமந்த சுந்தர ராமா!

 • சீரருள்வோனே! கோடி பரிதிகள் நிகரொளிர்வோனே! மதி வதனத்தோனே! கருணையுள்ளம் படைத்த இராமா!

 • சாரத்தின் சாரமே! புரமெரித்தோன் போற்றும், பாவங்களை அழிப்போனே! இரகுவீரா! ஓ இராமா!

 • நல்லோரைப் பேணுவோனே! அகன்ற கண்களோனே! கோபாலா! அம்புகளை ஏந்தும், ஓ இராமா!

 • எண்ணற்ற பண்புகளோனே! மோகத்தை வென்றோனே! பறவை யரசன் மீது விரையும், இராமா!

 • காமனையீன்றோனே! வினாயாகன் போற்றும் வரமருள்வோனே! இரகு நாயகா, இராமா!

 • காமனை யழித்தோனால் மதிக்கப் பெற்றோனே! அரக்கரை வேரறுத்தோனே! பெருந்தகையே, ஓ இராமா!

 • சனகாதியர் போற்றும், பொன்னாடை அணிவோனே! பரிதி குலத்திலகமே! சனகன் மகள் (உடனுறை) இராமா!

 • அரக்கர்களின் செருக்கையழித்தோனே! தேவர் தலைவா! தாமரையிதழ்க் கண்ணா, ஓ இராமா!

 • சங்கரனின் நண்பனே! ஐயமற்றோனே! மதியை வெல்லும் முகத்தோனே! நற்குணத்தோனே! சீதையமரும் மடியோனே, ஓ இராமா!

 • மதி, நெருப்பு, பரிதிகளைக் கண்களாயுடையோனே! ஒளிரும், தியாகராசனால் போற்றப் பெற்ற, இராமா!பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ரகு4வர/ தா31ரதே2/ ராம/
ஸ்ரீ ரகுவரா/ தசரதன் மைந்தா/ இராமா/


சரணம்
சரணம் 1
வந்தி3த/ ஸுர/ முனி ப்3ரு2ந்த3/ பராத்பர/
வந்திக்கும்/ வானோர்கள்/ முனிவர்கள்/ பராபரனே/

மந்த3ர/ த4ர/ ஸ்ரீ ஸுந்த3ர/ ராம/ (ஸ்ரீ)
மந்தர மலையை/ சுமந்த/ ஸ்ரீ சுந்தர/ ராமா/


சரணம் 2
ஸ்ரீ/-கர/ கோடி/ விபா4கர/ பா4ஸ/
சீர்/ அருள்வோனே/ கோடி/ பரிதிகள் (நிகர்)/ ஒளிர்வோனே/

ஸுதா4கர/ வத3ன/ க்4ரு2ணாகர/ ராம/ (ஸ்ரீ)
மதி/ வதனத்தோனே/ கருணையுள்ளம் படைத்த/ இராமா/


சரணம் 3
ஸாராத்/-ஸார/ புர/-அரி/ நுத/-அக4/
சாரத்தின்/ சாரமே/ புரம்/ எரித்தோன் (பகைவன்)/ போற்றும்/ பாவங்களை/

விதா3ரண/ ஸ்ரீ ரகு4வீர/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
அழிப்போனே/ ஸ்ரீ ரகுவீரா/ ஓ/ இராமா/


சரணம் 4
பாலித/ ஸு-ஜன/ விஸா1ல/ நயன/
பேணுவோனே/ நல்லோரை/ அகன்ற/ கண்களோனே/

கோ3பால/ வித்4ரு2த/ ஸ1ர ஜால/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
கோபாலா/ ஏந்துவோனே/ அம்புகளை/ ஓ/ இராமா/


சரணம் 5
அக3ணித/ கு3ண க3ண/ விக3ளித/ மோஹ/
எண்ணற்ற/ பண்புகளோனே/ வென்றோனே/ மோகத்தினை/

விஹக3/ ராஜ/ வர/ துரக3/ ஸ்ரீ ராம/ (ஸ்ரீ)
பறவை/ யரசன் மீது/ உயர்/ விரைவோனே/ ஸ்ரீ ராமா/


சரணம் 6
காயஜ/ ஜனக/ வினாயக/ நுத/ வர/
காமனை/ ஈன்றோனே/ வினாயாகன்/ போற்றும்/ வரம்/

தா3யக/ ஸ்ரீ ரகு4/ நாயக/ ராம/ (ஸ்ரீ)
அருள்வோனே/ ஸ்ரீ ரகு/ நாயகா/ இராமா/


சரணம் 7
பா4வஜ/ த3மன/ விபா4வித/ த3னுஜ/
காமனை/ யழித்தோனால்/ மதிக்கப் பெற்றோனே/ அரக்கரை/

பா4வ/ மஹானுபா4வ/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
வேரறுத்தோனே/ பெருந்தகையே/ ஓ/ இராமா/


சரணம் 8
ஸனக-ஆதி3/ வினுத/ கனக/-அம்ப3ர/ த4ர/
சனகாதியர்/ போற்றும்/ பொன்/ ஆடை/ அணிவோனே/

இன/ குல/ திலக/ ஜனக/ ஸுதா/ ராம/ (ஸ்ரீ)
பரிதி/ குல/ திலகமே/ சனகன்/ மகள் (உடனுறை)/ இராமா/


சரணம் 9
ராக்ஷஸ க3ண/ மத3/ ஸி1க்ஷக/ தே3வ/-
அரக்கர்களின்/ செருக்கை/ யழித்தோனே/ தேவர்/

அத்4யக்ஷ/ ஸாரஸ/ த3ள/-அக்ஷ/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
தலைவா/ தாமரை/ இதழ்/ கண்ணா/ ஓ/ இராமா/


சரணம் 10
1ங்கர/ ஸக2/ நிஸ்1-ஸ1ங்க/ முக2/ ஜித/
சங்கரனின்/ நண்பனே/ ஐயமற்றோனே/ முகத்தில்/ வெல்வோனே/

11-அங்க/ ஸு-கு3ண/ ஸீதா/-அங்க/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
மதியை/ நற்குணத்தோனே/ சீதையமரும்/ மடியோனே/ ஓ/ இராமா/


சரணம் 11
ராஜ/-அனல/ தி3ன ராஜ/ ஸு-நயன/
மதி/ நெருப்பு/ பகலவனை/ கண்களாயுடையோனே/

விராஜித/ த்யாக3ராஜ/ நுத/ ராம/ (ஸ்ரீ)
ஒளிரும்/, தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஸி1க்ஷக - ஸி1க்ஷித.

Top

மேற்கோள்கள்
2 - ஸாராத்-ஸார - சாரத்தின் சாரம். 'ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடத'த்தில், பரம்பொருளினை இங்ஙனம் விவரிக்கப்பட்டுள்ளது -

"அது (பரம்பொருள்) சத்தியத்தின் சத்தியமாகும். பிராணம் சத்தியமாகும்; அது அதனின் (பிராணத்தின்) சத்தியமாகும்." (II.i.20)

"பிராணத்தின் பிராணத்தினை, கண்ணின் கண்ணினை, செவியின் செவியினை, மனதின் மனத்தினை அறிந்தவர்கள், அந்தப் பழம்பொருளை, முதற்பொருளை அறிந்தவராவார்கள்."(IV.iv.18) (ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

5 - ராஜானல தி3ன ராஜ ஸு-நயன - மதி, நெருப்பு, பகலவனைக் கண்களாயுடையோன். நரசிங்கமாக அவதரித்த விஷ்ணுவுக்கு, சிவன் போன்று, முக்கண்களென, வைணவப் பெருந்தகை, ஸ்வாமி தேசிகனின் 'காமஸிகாஷ்டக'த்தில் கூறப்பட்டுள்ளது. காமஸிகாஷ்டகம்-1 and காமஸிகாஷ்டகம்-2

Top

விளக்கம்
1 - ஸுர முனி ப்3ரு2ந்த3 - 'ப்3ரு2ந்த3' என்ற சொல் பன்மையைக் குறிக்கும். இவ்விடம், இச்சொல், 'ஸுர' மற்றும் 'முனி' என்ற இரண்டு சொற்களுக்கம் பொதுவானது.

3 - 3னுஜ-பா4 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடல் ராமனைக் குறித்து உள்ளதால், இச்சொற்களுக்கு, இவ்விடம் ஏதும் சரிவரப் பொருள் கொள்ள இயலவில்லை. இச்சொல் 'த3னுஜாபா4வ' என்றிருந்தால், அதனை 'த3னுஜ+ அபா4வ' என்று பிரித்து, 'அரக்கர்களை இல்லாமற்செய்தவன் (வேரறுத்தவன்)' என்று பொருள்கொள்வது, இராம அவதாரத்தின் நோக்கத்திற்கு உகந்ததாக இருக்கும் என நான் நம்புகின்றேன். அங்ஙனமே இங்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

பறவையரசன் - கருடன்
காமனை யழித்தோன் - சிவன்

Top


Updated on 29 Sep 2009

5 comments:

Govindaswamy said...

அன்புடைய திரு கோவிந்தன் அவர்களே

சரணம் 1
வந்தி3த/ ஸுர/ முனி ப்3ரு2ந்த3/ பராத்பர/
வந்திக்கும்/ வானோர்கள்/ முனிவர்கள்/ பராபரனே/

இதனை ‘வந்திக்கப்படுபவனே, வானோர்கள், முனிவர்களால்’ என்று கொடுத்திருக்கலாம். நீங்கள் கொடுத்த பதவுரை தெளிவாக இல்லை.

சரணம் 10
முகத்தில்/ வெல்வோனே/ மதியை/-- முகத்தால் என்பது சரியாக இருக்கும். அல்லது மதியை வெல்லும் முகத்தோனே என்றும் இருக்கலாம்.
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
நீங்கள் கூறிய இரண்டினையும், உரைச்சுருக்கத்துடன் ஒப்பட்டு நோக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

'வந்தி3த ஸுர முனி ப்3ரு2ந்த3' என்பதனை, தமிழில் 'ஸுர முனி ப்3ரு2ந்த3 வந்தி3த' என்றுதான் மொழி பெயர்க்கமுடியும். ஆனால் பதம் பிரித்து, உரை கூறுகையில், அந்தந்த பதத்திற்குரிய உரையினை சுருக்கத்தினில் உள்ளபடி பிரித்துக் கூறியுள்ளேன். இதுபோன்றதே இரண்டாவதும்.

பதம் பதமாகப் பிரித்து, உரையெழுதுகையில், சிறிது மாற்றம் ஏற்படத்தான் செய்யும். கூடியவரையில் நான் பொருள் மாறாதவகையில் பதம் பிரித்துள்ளேன்.

வணக்கம்
வே கோவிந்தன்.

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 3-புரமெரித்தோன் போற்றும், பாவங்களை அழிப்போனே- போற்றும் எனும் சொல்லின் பின், அரைப்புள்ளி (comma) கொடிக்கப்பட்டிருந்தாலும் அதனை அடுத்த சொல்லோடு சேர்த்துப்படித்தால் தவறான பொருள் தரும். புராரிநுத என்பதற்குத் தனியாகப் பொருள் கொடுத்திருக்கலாமே?
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தெலுங்குச் சொல் 'நுத' என்பதனை தமிழில் 'போற்றப் பெற்ற' என்றுதான் பெரும்பாலான இடங்களில் மொழிபெயர்த்துள்ளேன். ஆனால், சில இடங்களில் தமிழில், வரி மிக்கு நீள்கையில், அதனைச் சுருக்கி 'போற்றும்' என்று அடுத்த அடைமொழியுடன் சேர்த்துக் கொடுத்துள்ளேன்.

கூடியவரையில் 'போற்றப் பெற்றோன்' (பெற்றவள்) என்றே மொழிபெயர்த்துள்ளேன்.

இவ்விடத்தில் ஏதும் குழப்பத்திற்கு இடமிருப்பதாக நான் கருதவில்லை.

வணக்கம்.
கோவிந்தன்.

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களுக்கு
நான் கூற விழைந்தது என்னவெனின் போற்றும், என்ற சொல்லையும் பாவங்களை என்ற சொல்லையும் சேர்த்துப்
படித்தால் தவறான பொருள் தரும் என்பது தான். புரமெரித்தோனால் போற்றப்பட்டோனே , பாவங்களை அழிப்போனே என்று கொடுத்திருக்கலாமே என்பது என் கருத்து.
வணக்கம்
கோவிந்தசாமி