Wednesday, September 30, 2009

தியாகராஜ கிருதி - ஸாரஸ நேத்ர - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Saarasa Netra - Raga Sankarabharanam

பல்லவி
ஸாரஸ நேத்ராபார கு3
1ஸாமஜ ஸி1க்ஷ 2கோ3த்34ரண

சரணம்
பாப க3ணாப்4ர ஸமீரண 3பாமர
பாலித பாவன நாம சண
தாபஸ மானஸ ஸாரஸ ஸு-
ப்4ரமரானக4 ராக4வ மா ரமண
(திஸ்ர க3தி)
யோகி3 வந்த்3ய பாஹி ஹே 4ஸாக3ரார்தி ஹரண
ராக3 லோப4 தூ3ர ஸ்ரீ த்யாக3ராஜ போஷண (ஸா)


பொருள் - சுருக்கம்
  • கமலக்கண்ணா! அளவு கடந்த குணங்களோனே! கரியைக் காத்தோனே! தாயை உயர்த்தியவனே!

  • பாவங்களெனும் மேகங்களை (விரட்டும்) புயலே! பாமரர்களைக் காப்போனே! புனித நாமத்தோனெனப் புகழுடைத்தோனே! தவசிகளின் உள்ளத் தாமரையின் உயர் வண்டே! பாவங்களற்றோனே! இராகவா! மா மணாளா! யோகியர் தொழுவோனே! கடலின் துயர் களைந்தோனே! ஆசை, கருமித்தனமற்றவனே! தியாகராசனைப் பேணுவோனே!

    • காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாரஸ/ நேத்ர/-அபார/ கு3ண/
கமலக்கண்ணா/ அளவு கடந்த/ குணங்களோனே/

ஸாமஜ/ ஸி1க்ஷ/ கோ3/-உத்34ரண/
கரியை/ காத்தோனே/ தாயை/ உயர்த்தியவனே/


சரணம்
பாப க3ண/-அப்4ர/ ஸமீரண/ பாமர/
பாவங்களெனும்/ மேகங்களை (விரட்டும்)/ புயலே/ பாமரர்களை/

பாலித/ பாவன/ நாம/ சண/
காப்போனே/ புனித/ நாமத்தோனென/ புகழுடைத்தோனே/

தாபஸ/ மானஸ/ ஸாரஸ/ ஸு-/
தவசிகளின்/ உள்ள/ தாமரையின்/ உயர்/

ப்4ரமர/-அனக4/ ராக4வ/ மா/ ரமண/
வண்டே/ பாவங்களற்றோனே/ இராகவா/ மா/ மணாளா/

யோகி3/ வந்த்3ய/ பாஹி/ ஹே/ ஸாக3ர/-ஆர்தி/ ஹரண/
யோகியர்/ தொழுவோனே/ காப்பாய்/, ஓ/ கடலின்/ துயர்/ களைந்தோனே/

ராக3/ லோப4/ தூ3ர/ ஸ்ரீ த்யாக3ராஜ/ போஷண/ (ஸா)
ஆசை/ கருமித்தனம்/ அற்றவனே (தூரமானவனே)/ ஸ்ரீ தியாகராசனை/ பேணுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பாடலை மற்ற புத்தகங்களுடன் ஒப்பிட இயலவில்லை.

மேற்குறிப்பிட்ட புத்தகத்தில் இப்பாடல் தியாகராஜரார் இயற்றப்பெற்றதா என ஐயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 - ஸாமஜ ஸி1க்ஷ - மேற்குறிப்பிட்ட புத்தகத்தில், இதற்கு, 'கம்ஸனின் யானையைக் கொன்றவன்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணன், மதுரைக்குச் சென்று, கம்ஸனைக் கொல்லுமுன், 'குவலயாபீடம்' என்ற யானையைக் கொன்றான். இவ்விடத்தில், கொடுக்கப்பட்டுள்ள சொல் 'ஸி1க்ஷ'. அதற்கு 'தண்டித்தல்' என்று பொருளாகும். 'கமஸனைத் தண்டித்தான்' என்றால் சரியாகும். ஆனால், கம்ஸனால் ஏவப்பட்டு, கண்ணனின் வழியை மறைத்த, யானையை தண்டித்தான் என்று கூறுவது தவறாகும். 'ஸி1க்ஷ' என்ற சொல்லுக்கு 'காத்தல்' என்றும் பொருளுண்டு. அங்ஙனமே, இங்கு மொழிபெயர்க்கப்பட்டது.
.
2 - கோ3த்34ரண - மேற்குறிப்பிட்ட புத்தகத்தில், இதற்கு 'கோவர்த்தனை மலையைத் தூக்கியவன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லை, 'கோ3 உத்34ரண' என்று பிரிக்கலாம். (அப்படிப் பிரித்தல் சரியாகுமா என ஐயமும் எழுகின்றது.) 'கோ3' என்ற சொல்லுக்கு 'கோவர்த்தன மலை' என்று பொருளில்லை. எனவே, அப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் கொள்வதற்கு இயலாது. 'கோ3' என்ற சொல்லுக்கு 'தாய்' என்றும் பொருளுண்டு. அந்தப் பொருளில் இங்கு மொழிபெயர்க்கப்பட்டது.

3 - பாமர - பொதுவாக இச்சொல்லுக்கு 'கெட்டவன்' என்று பொருளாகும். இச்சொல்லுக்கு 'அறிவிலி' என்றும் பொருளுண்டு. இவ்விடத்தில் அந்தப் பொருள்தான் (அறிவிலி) பொருந்தும்.

4 - ஸாக3ரார்தி ஹரண - 'கடலின் துயர் தீர்த்தவன்'. இது எந்த நிகழ்ச்சியினைக் குறிக்கின்றதெனத் தெரியவில்லை.

Top


Updated on 30 Sep 2009

2 comments:

Govindaswamy said...

அன்புடையீர்
T.K. கோவிந்தராவை T.K. கோதண்டராவ் என்று தவறாகக் கூறியுள்ளீர்.
யானையை தண்டித்தான் என்று கூறவது—கூறுவது என்று இருக்க வேண்டும்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. அவைகளைத் திருத்திவிட்டேன்.
வணக்கம்
வே கோவிந்தன்