ஸ1ம்போ4 ஸி1வ ஸ1ங்கர 1கு3ரு அம்போ4-ருஹ நயன
சரணம்
சரணம் 1
த4ரணீ த4ர வர பூ4ஷண ஸுர ஸேவித சரண (ஸ1ம்)
சரணம் 2
தருணாருண கிரணாப4 ஸு-சரணாஸுர ஹரண (ஸ1ம்)
சரணம் 3
கமனீய நிக3ம ஸன்னுத ஹிம கி3ரிஜா ரமண (ஸ1ம்)
சரணம் 4
2ஸ1மனாந்தக விமலாங்க3 பரம காருண்ய நிதே4 (ஸ1ம்)
சரணம் 5
ஸமலங்க்ரு2த கமலாஹித கமலா ஸுத ஹரண (ஸ1ம்)
சரணம் 6
நத போஷண ஹித பா4ஷண த்4ரு2த சாரு குரங்க3 (ஸ1ம்)
சரணம் 7
3மத பே4த3 பதித மானவ மத3 ஸந்தத ப4ங்க3 (ஸ1ம்)
சரணம் 8
ஸு-தபோ-த4ன ஹித கர பாலித த்யாக3ராஜ (ஸ1ம்)
பொருள் - சுருக்கம்
- சம்போ! சிவ சங்கர குருவே! கமலக்கண்ணா!
- புவி சுமப்போனை நல்லணிகலமாயுடைத்தோனே! வானோர் தொழும் திருவடியோனே!
- இளங்காலைக் கதிரவன் கதிர்கள் நிகர் நற்றிருவடிகளோனே! அசுரர்களை யழிப்போனே!
- மறைகள் போற்றும் விரும்பத்தக்கோனே! பனிமலை மடந்தை மணாளா!
- நமனை அடக்கிய தூய திருவடியோனே! பெருங்கருணைக் கடலே!
- கமலப் பகைவனால் நன்கு அலங்கரிக்கப் பெற்றோனே! கமலை மைந்தனை யெரித்தோனே!
- பணிந்தோரைப் பேணுவோனே! இனிது பகர்வோனே! எழிலான மானையேந்துவோனே!
- மத வேறுபாடுகளில் வீழ்ந்த மானிடரின் செருக்கினை எவ்வமயமும் அழிப்போனே!
- நற்றவச் செல்வருக்கு இனிதருள்வோனே! தியாகராசனைப் பேணுவோனே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ1ம்போ4/ ஸி1வ/ ஸ1ங்கர/ கு3ரு/ அம்போ4-ருஹ/ நயன/
சம்போ/ சிவ/ சங்கர/ குருவே/ கமல/ கண்ணா/
சரணம்
சரணம் 1
த4ரணீ/ த4ர/ வர பூ4ஷண/ ஸுர/ ஸேவித/ சரண/ (ஸ1ம்)
புவி/ சுமப்போனை/ நல்லணிகலமாயுடைத்தோனே/ வானோர்/ தொழும்/ திருவடியோனே/
சரணம் 2
தருண/-அருண/ கிரண/-ஆப4/ ஸு-சரண/-அஸுர/ ஹரண/ (ஸ1ம்)
இளம்/ காலைக் கதிரவன்/ கதிர்கள்/ நிகர்/ நற்றிருவடிகளோனே/ அசுரர்களை/ யழிப்போனே/
சரணம் 3
கமனீய/ நிக3ம/ ஸன்னுத/ ஹிம/ கி3ரிஜா/ ரமண/ (ஸ1ம்)
விரும்பத்தகு/ மறைகள்/ போற்றுவோனே/ பனி/ மலை மடந்தை/ மணாளா/
சரணம் 4
ஸ1மன/-அந்தக/ விமல/-அங்க3/ பரம/ காருண்ய/ நிதே4/ (ஸ1ம்)
அடக்கிய/ நமனை/ தூய/ திருவடியோனே/ பெரும்/ கருணை/ கடலே!
சரணம் 5
ஸமலங்க்ரு2த/ கமல/-அஹித/ கமலா/ ஸுத/ ஹரண/ (ஸ1ம்)
நன்கு அலங்கரிக்கப் பெற்றோனே /கமல/ பகைவனால்/ கமலை/ மைந்தனை/ யெரித்தோனே/
சரணம் 6
நத/ போஷண/ ஹித/ பா4ஷண/ த்4ரு2த/ சாரு/ குரங்க3/ (ஸ1ம்)
பணிந்தோரை/ பேணுவோனே/ இனிது/ பகர்வோனே/ ஏந்துவோனே/ எழிலான/ மானை/
சரணம் 7
மத/ பே4த3/ பதித/ மானவ/ மத3/ ஸந்தத/ ப4ங்க3/ (ஸ1ம்)
மத/ வேறுபாடுகளில்/ வீழ்ந்த/ மானிடரின்/ செருக்கினை/ எவ்வமயமும்/ அழிப்போனே/
சரணம் 8
ஸு-தபோ/-த4ன/ ஹித கர/ பாலித/ த்யாக3ராஜ/ (ஸ1ம்)
நற்றவ/ செல்வருக்கு/ இனிதருள்வோனே/ தியாகராசனை/ பேணுவோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், முதல் சரணம், அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
2 - ஸ1மனாந்தக விமலாங்க3 - நமனை அடக்கிய - இது மார்க்கண்டேயனைக் காப்பதற்கு, சிவன், நமனைக் காலால் உதைத்த நிகழ்ச்சியைக் குறிக்கும். மார்க்கண்டேயனின் கதைச் சுருக்கம்
3 - மத - சைவம், வைணவம் முதலான ஆறு விதமான தெய்வ வழிபாட்டு முறைகளைக் குறிக்கும்.
Top
விளக்கம்
1 - கு3ரு - இச்சொல் 'ஆசான்' என்ற பொருளில் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டாலும், இச்சொல்லுக்கு இவ்விடத்தில் ஏதேனும் தனிப் பொருளை மனதில் கொண்டு தியாகராஜர் இணைத்துள்ளாரா என்பது தெரியவில்லை.
புவி சுமப்போன் - சேடன்
பனிமலை மடந்தை - பார்வதி
கமலப் பகைவன் - மதி
கமலை மைந்தன் - காமன்
மதங்கள் - அறுவகை மதங்கள் - சைவம், வைணவம் ஆகியவை
Top
Updated on 28 Sep 2009
No comments:
Post a Comment