ஸ்ரீ ரகு4வர தா3ஸ1ரதே2 ராம
சரணம்
சரணம் 1
வந்தி3த 1ஸுர முனி ப்3ரு2ந்த3 பராத்பர
மந்த3ர த4ர ஸ்ரீ ஸுந்த3ர ராம (ஸ்ரீ)
சரணம் 2
ஸ்ரீ-கர கோடி விபா4கர பா4ஸ
ஸுதா4கர வத3ன க்4ரு2ணாகர ராம (ஸ்ரீ)
சரணம் 3
2ஸாராத்-ஸார புராரி நுதாக4
விதா3ரண ஸ்ரீ ரகு4வீர ஹரே ராம (ஸ்ரீ)
சரணம் 4
பாலித ஸு-ஜன விஸா1ல நயன
கோ3பால வித்4ரு2த ஸ1ர ஜால ஹரே ராம (ஸ்ரீ)
சரணம் 5
அக3ணித கு3ண க3ண விக3ளித மோஹ
விஹக3 ராஜ வர துரக3 ஸ்ரீ ராம (ஸ்ரீ)
சரணம் 6
காயஜ ஜனக வினாயக நுத வர
தா3யக ஸ்ரீ ரகு4 நாயக ராம (ஸ்ரீ)
சரணம் 7
பா4வஜ த3மன விபா4வித 3த3னுஜ-
பா4வ மஹானுபா4வ ஹரே ராம (ஸ்ரீ)
சரணம் 8
ஸனகாதி3 வினுத கனகாம்ப3ர த4ர
இன குல திலக ஜனக ஸுதா ராம (ஸ்ரீ)
சரணம் 9
ராக்ஷஸ க3ண மத3 4ஸி1க்ஷக
தே3வாத்4யக்ஷ ஸாரஸ த3ளாக்ஷ ஹரே ராம (ஸ்ரீ)
சரணம் 10
ஸ1ங்கர ஸக2 நிஸ்1-ஸ1ங்க முக2 ஜித
ஸ1ஸா1ங்க ஸு-கு3ண ஸீதாங்க ஹரே ராம (ஸ்ரீ)
சரணம் 11
5ராஜானல தி3ன ராஜ ஸு-நயன
விராஜித த்யாக3ராஜ நுத ராம (ஸ்ரீ)
பொருள் - சுருக்கம்
- இரகுவரா! தசரதன் மைந்தா, இராமா!
- வானோர்கள், முனிவர்கள் வந்திக்கும் பராபரனே! மந்தர மலையைச் சுமந்த சுந்தர ராமா!
- சீரருள்வோனே! கோடி பரிதிகள் நிகரொளிர்வோனே! மதி வதனத்தோனே! கருணையுள்ளம் படைத்த இராமா!
- சாரத்தின் சாரமே! புரமெரித்தோன் போற்றும், பாவங்களை அழிப்போனே! இரகுவீரா! ஓ இராமா!
- நல்லோரைப் பேணுவோனே! அகன்ற கண்களோனே! கோபாலா! அம்புகளை ஏந்தும், ஓ இராமா!
- எண்ணற்ற பண்புகளோனே! மோகத்தை வென்றோனே! பறவை யரசன் மீது விரையும், இராமா!
- காமனையீன்றோனே! வினாயாகன் போற்றும் வரமருள்வோனே! இரகு நாயகா, இராமா!
- காமனை யழித்தோனால் மதிக்கப் பெற்றோனே! அரக்கரை வேரறுத்தோனே! பெருந்தகையே, ஓ இராமா!
- சனகாதியர் போற்றும், பொன்னாடை அணிவோனே! பரிதி குலத்திலகமே! சனகன் மகள் (உடனுறை) இராமா!
- அரக்கர்களின் செருக்கையழித்தோனே! தேவர் தலைவா! தாமரையிதழ்க் கண்ணா, ஓ இராமா!
- சங்கரனின் நண்பனே! ஐயமற்றோனே! மதியை வெல்லும் முகத்தோனே! நற்குணத்தோனே! சீதையமரும் மடியோனே, ஓ இராமா!
- மதி, நெருப்பு, பரிதிகளைக் கண்களாயுடையோனே! ஒளிரும், தியாகராசனால் போற்றப் பெற்ற, இராமா!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ரகு4வர/ தா3ஸ1ரதே2/ ராம/
ஸ்ரீ ரகுவரா/ தசரதன் மைந்தா/ இராமா/
சரணம்
சரணம் 1
வந்தி3த/ ஸுர/ முனி ப்3ரு2ந்த3/ பராத்பர/
வந்திக்கும்/ வானோர்கள்/ முனிவர்கள்/ பராபரனே/
மந்த3ர/ த4ர/ ஸ்ரீ ஸுந்த3ர/ ராம/ (ஸ்ரீ)
மந்தர மலையை/ சுமந்த/ ஸ்ரீ சுந்தர/ ராமா/
சரணம் 2
ஸ்ரீ/-கர/ கோடி/ விபா4கர/ பா4ஸ/
சீர்/ அருள்வோனே/ கோடி/ பரிதிகள் (நிகர்)/ ஒளிர்வோனே/
ஸுதா4கர/ வத3ன/ க்4ரு2ணாகர/ ராம/ (ஸ்ரீ)
மதி/ வதனத்தோனே/ கருணையுள்ளம் படைத்த/ இராமா/
சரணம் 3
ஸாராத்/-ஸார/ புர/-அரி/ நுத/-அக4/
சாரத்தின்/ சாரமே/ புரம்/ எரித்தோன் (பகைவன்)/ போற்றும்/ பாவங்களை/
விதா3ரண/ ஸ்ரீ ரகு4வீர/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
அழிப்போனே/ ஸ்ரீ ரகுவீரா/ ஓ/ இராமா/
சரணம் 4
பாலித/ ஸு-ஜன/ விஸா1ல/ நயன/
பேணுவோனே/ நல்லோரை/ அகன்ற/ கண்களோனே/
கோ3பால/ வித்4ரு2த/ ஸ1ர ஜால/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
கோபாலா/ ஏந்துவோனே/ அம்புகளை/ ஓ/ இராமா/
சரணம் 5
அக3ணித/ கு3ண க3ண/ விக3ளித/ மோஹ/
எண்ணற்ற/ பண்புகளோனே/ வென்றோனே/ மோகத்தினை/
விஹக3/ ராஜ/ வர/ துரக3/ ஸ்ரீ ராம/ (ஸ்ரீ)
பறவை/ யரசன் மீது/ உயர்/ விரைவோனே/ ஸ்ரீ ராமா/
சரணம் 6
காயஜ/ ஜனக/ வினாயக/ நுத/ வர/
காமனை/ ஈன்றோனே/ வினாயாகன்/ போற்றும்/ வரம்/
தா3யக/ ஸ்ரீ ரகு4/ நாயக/ ராம/ (ஸ்ரீ)
அருள்வோனே/ ஸ்ரீ ரகு/ நாயகா/ இராமா/
சரணம் 7
பா4வஜ/ த3மன/ விபா4வித/ த3னுஜ/
காமனை/ யழித்தோனால்/ மதிக்கப் பெற்றோனே/ அரக்கரை/
பா4வ/ மஹானுபா4வ/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
வேரறுத்தோனே/ பெருந்தகையே/ ஓ/ இராமா/
சரணம் 8
ஸனக-ஆதி3/ வினுத/ கனக/-அம்ப3ர/ த4ர/
சனகாதியர்/ போற்றும்/ பொன்/ ஆடை/ அணிவோனே/
இன/ குல/ திலக/ ஜனக/ ஸுதா/ ராம/ (ஸ்ரீ)
பரிதி/ குல/ திலகமே/ சனகன்/ மகள் (உடனுறை)/ இராமா/
சரணம் 9
ராக்ஷஸ க3ண/ மத3/ ஸி1க்ஷக/ தே3வ/-
அரக்கர்களின்/ செருக்கை/ யழித்தோனே/ தேவர்/
அத்4யக்ஷ/ ஸாரஸ/ த3ள/-அக்ஷ/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
தலைவா/ தாமரை/ இதழ்/ கண்ணா/ ஓ/ இராமா/
சரணம் 10
ஸ1ங்கர/ ஸக2/ நிஸ்1-ஸ1ங்க/ முக2/ ஜித/
சங்கரனின்/ நண்பனே/ ஐயமற்றோனே/ முகத்தில்/ வெல்வோனே/
ஸ1ஸ1-அங்க/ ஸு-கு3ண/ ஸீதா/-அங்க/ ஹரே/ ராம/ (ஸ்ரீ)
மதியை/ நற்குணத்தோனே/ சீதையமரும்/ மடியோனே/ ஓ/ இராமா/
சரணம் 11
ராஜ/-அனல/ தி3ன ராஜ/ ஸு-நயன/
மதி/ நெருப்பு/ பகலவனை/ கண்களாயுடையோனே/
விராஜித/ த்யாக3ராஜ/ நுத/ ராம/ (ஸ்ரீ)
ஒளிரும்/, தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஸி1க்ஷக - ஸி1க்ஷித.
Top
மேற்கோள்கள்
2 - ஸாராத்-ஸார - சாரத்தின் சாரம். 'ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடத'த்தில், பரம்பொருளினை இங்ஙனம் விவரிக்கப்பட்டுள்ளது -
"அது (பரம்பொருள்) சத்தியத்தின் சத்தியமாகும். பிராணம் சத்தியமாகும்; அது அதனின் (பிராணத்தின்) சத்தியமாகும்." (II.i.20)
"பிராணத்தின் பிராணத்தினை, கண்ணின் கண்ணினை, செவியின் செவியினை, மனதின் மனத்தினை அறிந்தவர்கள், அந்தப் பழம்பொருளை, முதற்பொருளை அறிந்தவராவார்கள்."(IV.iv.18) (ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
5 - ராஜானல தி3ன ராஜ ஸு-நயன - மதி, நெருப்பு, பகலவனைக் கண்களாயுடையோன். நரசிங்கமாக அவதரித்த விஷ்ணுவுக்கு, சிவன் போன்று, முக்கண்களென, வைணவப் பெருந்தகை, ஸ்வாமி தேசிகனின் 'காமஸிகாஷ்டக'த்தில் கூறப்பட்டுள்ளது. காமஸிகாஷ்டகம்-1 and காமஸிகாஷ்டகம்-2
Top
விளக்கம்
1 - ஸுர முனி ப்3ரு2ந்த3 - 'ப்3ரு2ந்த3' என்ற சொல் பன்மையைக் குறிக்கும். இவ்விடம், இச்சொல், 'ஸுர' மற்றும் 'முனி' என்ற இரண்டு சொற்களுக்கம் பொதுவானது.
3 - த3னுஜ-பா4வ - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடல் ராமனைக் குறித்து உள்ளதால், இச்சொற்களுக்கு, இவ்விடம் ஏதும் சரிவரப் பொருள் கொள்ள இயலவில்லை. இச்சொல் 'த3னுஜாபா4வ' என்றிருந்தால், அதனை 'த3னுஜ+ அபா4வ' என்று பிரித்து, 'அரக்கர்களை இல்லாமற்செய்தவன் (வேரறுத்தவன்)' என்று பொருள்கொள்வது, இராம அவதாரத்தின் நோக்கத்திற்கு உகந்ததாக இருக்கும் என நான் நம்புகின்றேன். அங்ஙனமே இங்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
பறவையரசன் - கருடன்
காமனை யழித்தோன் - சிவன்
Top
Updated on 29 Sep 2009