Showing posts with label Rama Sita Rama. Show all posts
Showing posts with label Rama Sita Rama. Show all posts

Thursday, September 24, 2009

தியாகாராஜ கிருதி - ராம ஸீதா ராம - ராகம் ஸ1ங்கராபரணம் - Rama Sita Rama - Raga Sankarabharanam

பல்லவி
1ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம

சரணம்
சரணம் 1
தப்புலென்ன போதே மாகு கொ3ப்பதனமு ராது3 மா-
யப்ப த3ய சேஸி கண்ட்3ல கப்புகொனி பாலிம்பவே (ராம)


சரணம் 2
தா3பு லேக நேனு நீது3 ப்ராபு கோருகொண்டி கானி
ரேபு மாபனுசு தோ3வ ஜூபக ராவய்ய ப்3ரோவ (ராம)


சரணம் 3
நீல வர்ண பாபமுலகாலயமைதினி நாது3
ஜாலி தீர்சி ப4யமு நீகேலயனியாது3கோவே (ராம)


சரணம் 4
வாலாயமுக3 க்ரு2பாலவால ரக்ஷிஞ்சு கனக
சேலயிந்த3ரிலோ நாது3 செயி லாகி3ய்ய ஸமயமு (ராம)


சரணம் 5
இதருலந்து3 மனஸு போது3 வெதலு நீகு தெலிய ராது3
3தியு 2மும்மாடிகி லேது3 க்ஷிதினெவ்வரினி வேட3 போது3 (ராம)


சரணம் 6
ராம ராம நித்ய ஸ1த்ரு பீ43பீ4ம நுத3
காம காம வைரி நுத நாம நா மதி3னி ராவே (ராம)


சரணம் 7
தே3வ தே3வார்சித ஸர்வ ஜீவ ஜீவன
மஹானுபா4வ பா4வஜ ரூப 4ஸ்ரீ-பாவ பாவன ராக4வ (ராம)


சரணம் 8
மாய மாயெட3 5வத்3து3ராத்4யேய த்4யேய விஷயாலேல
ரோயரோயெப்புடு3 தே3வ ராய 6ராயாயீ தே3ஹமு (ராம)


சரணம் 9
ராஜ ராஜ வந்தி3த விராஜ ராஜ ஹரே தி3
ராஜ ராஜ நயன த்யாக3ராஜ ராஜ த31ரத2 (ராம)


பொருள் - சுருக்கம்
  • இராமா! சீதாராமா! எமது அய்யனே! நீல வண்ணா! கருணைக் கடலே! பொன் ஆடைகளோனே!

  • என்றுமிருப்போனே! பகைவருக்கு அச்சமே! வல்லோரால் போற்றப் பெற்றோனே! இச்சைகள் அற்றவனே! காமன் பகைவனால் போற்றப் பெற்ற நாமத்தோனே!

  • இறைவா! தேவரால் தொழப்பெற்றோனே! அனைத்துயிர்களின் வாழ்வே! பெருந்தகையே! காமன் (நிகர்) உருவத்தோனே! இலக்குமி மணாளா! புனிதனே! இராகவா!

  • அறியவியலாதவனே! அறியப்படு பொருளே! தேவர் தலைவா!

  • பேரரசர்களால் வணங்கப் பெற்றோனே! கருடன் தலைவா! அரியே! பரிதி, மதிக் கண்களோனே! தியாகராசனின் தலைவனே! தசரதராமா!


    • தவறுகளை யெண்ணப்போனால் எமக்கு மேன்மை வாராது; தயவு செய்து கண்களை மூடிக்கொண்டு காப்பாயய்யா;

    • தஞ்சமின்றி, நானுனது புகல் கோரினேன்; ஆயினும் (ஆகவே) காலை மாலையென போக்குக் காட்டாது வாருமய்யா, காக்க;

    • பாவங்களுக்கு இருப்பிடமானேன்; எனது துயர் தீர்த்து, 'அச்சமுனக்கேன்' என, ஆதரிப்பாயய்யா;

    • தவறாது காப்பாய்; இவர்களிடை எனக்கு கைகொடுக்க சமயமிது;

    • மற்றவர்களிடம் மனது செல்லாது; வேதனையுனக்குத் தெரிய வாராது; கதியென்றுமே கிடையாது; புவியில் எவரை வேண்டப் போவேன்?

    • எனதுள்ளத்தினில் வாராய்; காப்பாய்; மாயைகள் எம்மிடம் வேண்டாமய்யா;


    • விடயங்களை (மனிதர்கள்) ஏனோ வெறுக்கமாட்டார், எவ்வமயமும்? கல்லோ யிவ்வுடல்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸீதா ராம/ ராம/ ராம/ ஸீதா ராம/ ராம/
இராமா/ சீதாராமா/ இராமா/ இராமா/ சீதாராமா/ இராமா/


சரணம்
சரணம் 1
தப்புலு/-என்ன/ போதே/ மாகு/ கொ3ப்பதனமு/ ராது3/ மா/-
தவறுகளை/ எண்ண/ போனால்/ எமக்கு/ மேன்மை/ வாராது/ எமது/

அப்ப/ த3ய/ சேஸி/ கண்ட்3ல/ கப்புகொனி/ பாலிம்பவே/ (ராம)
அய்யனே/ தயவு/ செய்து/ கண்களை/ மூடிக்கொண்டு/ காப்பாயய்யா/


சரணம் 2
தா3பு/ லேக/ நேனு/ நீது3/ ப்ராபு/ கோருகொண்டி/ கானி/
தஞ்சம்/ இன்றி/ நான்/ உனது/ புகல்/ கோரினேன்/ ஆயினும் (ஆகவே)/

ரேபு/ மாபு/-அனுசு/ தோ3வ/ ஜூபக/ ராவய்ய/ ப்3ரோவ/ (ராம)
காலை/ மாலை/ என/ போக்கு/ காட்டாது/ வாருமய்யா/ காக்க/


சரணம் 3
நீல/ வர்ண/ பாபமுலகு/-ஆலயமைதினி/ நாது3/
நீல/ வண்ணா/ பாவங்களுக்கு/ இருப்பிடமானேன்/ எனது/

ஜாலி/ தீர்சி/ ப4யமு/ நீகு/-ஏல/-அனி/-ஆது3கோவே/ (ராம)
துயர்/ தீர்த்து/ 'அச்சம்/ உனக்கு/ ஏன்'/ என/ ஆதரிப்பாயய்யா/


சரணம் 4
வாலாயமுக3/ க்ரு2பா/-ஆலவால/ ரக்ஷிஞ்சு/ கனக/
தவறாது/ கருணை/ கடலே/ காப்பாய்/ பொன்/

சேல/-இந்த3ரிலோ/ நாது3/ செயி லாகு3-இய்ய/ ஸமயமு/ (ராம)
ஆடைகளோனே/ இவர்களிடை/ எனக்கு/ கைகொடுக்க/ சமயம் (இது)/;


சரணம் 5
இதருல-அந்து3/ மனஸு/ போது3/ வெதலு/ நீகு/ தெலிய/ ராது3/
மற்றவர்களிடம்/ மனது/ செல்லாது/ வேதனை/ உனக்கு/ தெரிய/ வாராது/

3தியு/ மும்மாடிகி/ லேது3/ க்ஷிதினி/-எவ்வரினி/ வேட3/ போது3/ (ராம)
கதி/ என்றுமே/ கிடையாது/ புவியில்/ எவரை/ வேண்ட/ போவேன்/


சரணம் 6
ராம/ ராம/ நித்ய/ ஸ1த்ரு/ பீ4ம/ பீ4ம/ நுத/ க3த/
இராமா/ இராமா/ என்றுமிருப்போனே/ பகைவருக்கு/ அச்சமே/ வல்லோரால்/ போற்றப் பெற்றோனே/ அற்றவனே/

காம/ காம/ வைரி/ நுத/ நாம/ நா/ மதி3னி/ ராவே/ (ராம)
இச்சைகள்/ காமன்/ பகைவனால்/ போற்றப் பெற்ற/ நாமத்தோனே/ எனது/ உள்ளத்தினில்/ வாராய்/


சரணம் 7
தே3வ/ தே3வ/-அர்சித/ ஸர்வ/ ஜீவ/ ஜீவன/
இறைவா/ தேவரால்/ தொழப்பெற்றோனே/ அனைத்து/ உயிர்களின்/ வாழ்வே/

மஹானுபா4வ/ பா4வஜ/ ரூப/ ஸ்ரீ/-ப/-அவ/ பாவன/ ராக4வ/ (ராம)
பெருந்தகையே/ காமன் (நிகர்)/ உருவத்தோனே/ இலக்குமி/ மணாளா/ காப்பாய்/ புனிதனே/ இராகவா/


சரணம் 8
மாய/ மாயெட3/ வத்3து3ரா/-அத்4யேய/ த்4யேய/ விஷயால/-ஏல/
மாயைகள்/ எம்மிடம்/ வேண்டாமய்யா/ அறியவியலாதவனே/ அறியப்படு பொருளே/ விடயங்களை/ (மனிதர்கள்) ஏனோ/

ரோயரோ/-எப்புடு3/ தே3வ/ ராய/ ராயா/-ஈ/ தே3ஹமு/ (ராம)
வெறுக்கமாட்டார்/ எவ்வமயமும்/ தேவர்/ தலைவா/ கல்லோ/ இந்த/ உடல்/


சரணம் 9
ராஜ ராஜ/ வந்தி3த/ விராஜ/ ராஜ/ ஹரே/
பேரரசர்களால்/ வணங்கப் பெற்றோனே/ கருடன்/ தலைவா/ அரியே/

தி3ன ராஜ/ ராஜ/ நயன/ த்யாக3ராஜ/ ராஜ/ த31ரத2/ (ராம)
பகலவன் (பரிதி)/ மதி/ கண்களோனே/ தியாகராசனின்/ தலைவனே/ தசரத/ ராமா...

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம - ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம (சில புத்தகங்களில், பல்லவி சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது).

4 - ஸ்ரீ-பாவ பாவன - ஸ்ரீ-பாப பாவன : 'ஸ்ரீ-பாவ பாவன' என்பதனை 'ஸ்ரீ-ப+அவ+பாவன' என்று பிரித்து பொருள் கொள்ளலாம். ஆனால் 'ஸ்ரீ-பாப பாவன' என்பதற்கு பொருளேதும் இருப்பதாகத்தோன்றவில்லை.

5 - வத்3து3ராத்4யேய த்4யேய - வத்3து3ரா தே4ய தே4ய :'வத்3து3ராத்4யேய த்4யேய' என்பதனை 'வத்3து3ரா+அத்4யேய+த்4யேய' என்று பிரித்து பொருள் கொள்ளலாம். ஆனால் 'வத்3து3ரா தே4ய தே4ய' என்பதனில் 'தே4ய தே4ய' என்பதற்குப் பொருளேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

6 - ராயாயீ தே3ஹமு - ராமாயீ தே3ஹமு : 'ராயாயீ தே3ஹமு' என்பதற்கு 'இவ்வுடம்பு கல்லா?' என்று பொருளாகும். ஆனால் 'ராமாயீ தே3ஹமு' என்பதனில் உள்ள 'ஈ தே3ஹமு' தனித்து நிற்கின்றது. எனவே அதற்குப் பொருள் கூறவியலாது.

Top

மேற்கோள்கள்
5 - த்4யேய - அறியப்படு பொருள் - கடவுள். இதுகுறித்து, அக்ரூரரின் உரை பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 38 (செய்யுள் 6) நோக்கவும்

5 - அத்4யேய - அறியவியலாதவன் - சொல், மனம், அறிவிற்குப் புறம்பான பரம்பொருள். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (254), பரதேவதைக்கு, 'த்4யான த்4யாத்ரு2 த்4யேய ரூபா' என்று ஓர் பெயருண்டு. இதற்கு 'தியானமும், தியானிப்பவனும், தியானிக்கப்படு பொருளும்' என்று பொருளாகும். இவை மூன்றுமே ஒரே பொருளில் அடக்கமென்றால், அப்பொருளை அறிவதெங்ஙனம்? அதனால் 'அறிவியலாதவன்' என்று பரம்பொருள் கூறப்படும்.

Top

விளக்கம்
2 - மும்மாடிகி - மும்முறை - ஒரு சொல்லினை மும்முறை பகர்தல், அதனை உறுதிப்படுத்தவதாகும்.

3 - பீ4ம நுத - 'பீமனால் போற்றப்பெற்றோன்'. 'பீமன்' என்று சிவனுக்கும் ஓர் பெயருண்டு. ஆனால், அதே சரணத்தில் 'காம வைரி நுத நாம' என்று சிவனைக் கூறப்பட்டுள்ளதால், இங்கு 'பீ4ம' என்ற சொல்லுக்கு 'வல்லோர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தில் 'பீ4ம' என்பது, பாண்டவர் ஐவரில் ஒருவனான 'பீமன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

மற்றவர்களிடம் - மற்ற கடவுளர்களிடம்

காமன் பகைவன் - சிவன்

விடயங்கள் - புலன் நுகர்ச்சி

Top


Updated on 24 Sep 2009

Thursday, June 25, 2009

தியாகராஜ கிருதி - ராமா ஸீதா ராம - ராகம் ப3லஹம்ஸ - Rama Sita Rama - Raga Balahamsa

பல்லவி
ராம ஸீதா ராம ராம ராஜ தனய ராம த31ரத2
ராம ஸீதா ராம ராம ரகு4 குலாப்3தி4 ஸோம

சரணம்
சரணம் 1
உரக3முலு பெனகி3னட்லுன்னதி3 நா மனஸு
கருண ஜேஸி கண்ட ஜூசி கரமு பட்டு ராம (ராம)


சரணம் 2
ஸத்ஸதி பதி ஸேவ ஸேயு 1சந்த3முன நா மனஸு
உத்ஸவமுலு 2ஸேயுடகுப்பொங்கெ3னு ராம (ராம)


சரணம் 3
3கல்ப பூ4முன தீக3 4கட்டு ரீதி மனஸு
5கல்பமுலென்னைன விடி3சி 6கத3லது3 ஸ்ரீ ராம (ராம)


சரணம் 4
7அத்3வைத ஸாம்ராஜ்யமுலப்3பி3னட்டு ராம
8ஸத்3வைராக்3யமுனிதி3யு 9ஸாயுஜ்யமே ராம (ராம)


சரணம் 5
ஆக3ம நிக3மமுலகுனர்த2மிதி3 ராம
10த்யாக3ராஜுசே சேயிஞ்சி 11போ43மந்து3 ராம (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! சீதாராமா! இளவரசே! தசரத ராமா! இரகு குலக்கடலிலுத்த மதியே!
  • அரவுகள் பிணைத்தது போன்றுள்ளது எனது மனம்; கருணை புரிந்து, கண்ணால் நோக்கி, கைப்பற்றுவாய்;

  • உண்மையான மனைவி, கணவன் சேவை செய்தற் போன்று, எனது மனம் திருவிழா கொண்டாடப் பொங்கியது;

  • கற்ப தருவினை கொடிகள் பிணைத்தாற் போன்று, (எனது) மனம் கற்பங்கள் எத்தனையாகினும் (உன்னை) விட்டகலாது;

  • இரண்டன்மைப் பேரரசினை யடைதல் போன்று, உண்மையான பற்றறுத்தலும்; இஃதும் சாயுச்சியமே;

  • ஆகமங்கள், மறைகளின் பொருளிதுவே;

  • தியாகராசனால் சேவை செய்வித்து, களிப்பெய்துவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸீதா/ ராம/ ராம/ ராஜ/ தனய/ ராம/ த31ரத2/
இராமா/ சீதா/ ராமா/ இராமா/ மன்னன்/ மகனே (இளவரசே)/ இராமா/ தசரத/

ராம/ ஸீதா/ ராம/ ராம/ ரகு4/ குல/-அப்3தி4/ ஸோம/
ராமா/ சீதா/ ராமா/ இராமா/ இரகு/ குல/ கடலில் (உதித்த)/ மதியே/


சரணம்
சரணம் 1
உரக3முலு/ பெனகி3ன/-அட்லு/-உன்னதி3/ நா/ மனஸு/
அரவுகள்/ பிணைத்தது/ போன்று/ உள்ளது/ எனது/ மனம்/

கருண/ ஜேஸி/ கண்ட/ ஜூசி/ கரமு/ பட்டு/ ராம/ (ராம)
கருணை/ புரிந்து/ கண்ணால்/ நோக்கி/ கை/ பற்றுவாய்/ இராமா/


சரணம் 2
ஸத்/-ஸதி/ பதி/ ஸேவ/ ஸேயு/ சந்த3முன/ நா/ மனஸு/
உண்மையான/ மனைவி/ கணவன்/ சேவை/ செய்தற்/ போன்று/ எனது/ மனம்/

உத்ஸவமுலு/ ஸேயுடகு/-உப்பொங்கெ3னு/ ராம/ (ராம)
திருவிழா/ கொண்டாட/ பொங்கியது/ இராமா/


சரணம் 3
கல்ப/ பூ4ஜமுன/ தீக3/ கட்டு/ ரீதி/ மனஸு/
கற்ப/ தருவினை/ கொடிகள்/ பிணைத்தாற்/ போன்று/ (எனது) மனம்/

கல்பமுலு/-என்னி/-ஐன/ விடி3சி/ கத3லது3/ ஸ்ரீ ராம/ (ராம)
கற்பங்கள்/ எத்தனை/ ஆகினும்/ (உன்னை) விட்டு/ அகலாது/ ஸ்ரீ ராமா/


சரணம் 4
அத்3வைத/ ஸாம்ராஜ்யமுலு/-அப்3பி3ன/-அட்டு/ ராம/
இரண்டன்மை/ பேரரசினை/ யடைதல்/ போன்று/ இராமா/

ஸத்3/-வைராக்3யமுனு/-இதி3யு/ ஸாயுஜ்யமே/ ராம/ (ராம)
உண்மையான/ பற்றறுத்தலும்/ இஃதும்/ சாயுச்சியமே/ இராமா/


சரணம் 5
ஆக3ம/ நிக3மமுலகுனு/-அர்த2மு/-இதி3/ ராம/
ஆகமங்கள்/ மறைகளின்/ பொருள்/ இதுவே/ இராமா/

த்யாக3ராஜுசே/ சேயிஞ்சி/ போ43மு/-அந்து3/ ராம/ (ராம)
தியாகராசனால்/ (சேவை) செய்வித்து/ களிப்பு/ எய்துவாய்/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சந்த3முன - சந்தா3ன : 'சந்த3முன' சரியான சொல்லாகும்.

2 - உப்பொங்கெ3னு - உப்பொங்கி3னி : 'உப்பொங்கெ3னு' சரியான சொல்லலாகும்.

4 - கட்டு ரீதி மனஸு - கட்டு ரீதி நா மனஸு.

6 - கத3லது3 - கத3லனு : 'கத3லது3' இவ்விடத்தில் சரியான சொல்லலாகும்.

8 - ஸத்3வைராக்3யமுனிதி3யு - ஸத்3வைராக்3யமு நிதி4யு : 'ஸத்3வைராக்3ய' என்றிருந்தால், 'நிதி4யு' சரியாக இருக்கலாம். ஆனால், எல்லா புத்தகங்களிலும், 'ஸத்3வைராக்3யமு' என்று கொடுக்கப்பட்டுள்ளதால் 'நிதி4யு' தவறாகும்.

11 - போ43மந்து3 - போ43மொந்து3 : தியாகராஜர் மற்ற கிருதிகளிலும் 'போ43மந்து3' என்று பயன்படுத்துகின்றார். எனவே, 'போ43மந்து3' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
3 - கல்ப பூ4 - கற்பதரு - விரும்பியதையருளும் வானோர் தரு. கற்ப தருவினை கொடிகள் சுற்றியுள்ளதாகக் கூறுவர்.

5 - கல்பமுலு - கற்பம் - ஆயிரங்கோடியாண்டுகள்

9 - ஸாயுஜ்ய - இறைவனுடன் ஒன்றுதல் - ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்தலஹரி'யில் (செய்யுள் 28) இறைவனுடன் ஒன்றுதலில் உள்ள நான்கு படிகளான 'சாலோகம்', 'சாமீபம்', 'சாரூபம்' மற்றும் 'சாயுச்சியம்' விளக்கப்பட்டுள்ளது.

திருமூலரின் திருமந்திரம் செய்யுள் 1507 முதல் 1513 நோக்கவும்.

Top

விளக்கம்
7 - அத்3வைத ஸாம்ராஜ்யமு - இரண்டன்மை - அத்துவைதம். சதாசிவ பிரமேந்திரர் என்ற மகானின் 'கே2லதி பிண்டா3ண்டே3' என்ற கீர்த்தனையில் கூறப்படும் 'ஹம்ஸஸ்ஸோஹம் ஸோஹம் ஹம்ஸ' என்ற மகாவாக்கியத்தின் நேரடி உணர்வு.

10 - த்யாக3ராஜுசே சேயிஞ்சி - தியாகராசனால் சேவை செய்வித்து - 'தியாகராசனின் கரங்களால் சேவை செய்வித்து' என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனுக்கு சேவை செய்வதற்கும் இறைவனுடைய அருள் வேண்டும். இதனை 'அனுக்ரஹம்' என்று சம்ஸ்கிருதத்தில் கூறவர். இதுகுறித்து காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தினை நோக்கவும்.

11 - போ43மந்து3 - களிப்பு எய்துவாய் - இரண்டாவது சரணத்தில் கூறியபடியான 'உண்மையான மனைவி கணவனுக்குச் செய்யும் சேவை'யைக் குறிக்கும். இதனை, 'நாரத பக்தி சூத்திர'த்தில் (82) 'காந்தாசக்தி' (இறைவனிடம் மனைவியைப் போன்றதான பற்று கொள்ளுதல்) என்று கூறப்படும்.

பற்றறுத்தல் - 'வைராக்கியம்' எனப்படும் உலக இன்பங்களத் துறந்த நிலை

Top


Updated on 25 Jun 2009