ராம ஏவ தை3வதம் ரகு4 குல திலகோ மே
சரணம்
சரணம் 1
விக3த காம மோஹ மதோ3
விமல ஹ்ரு2த3ய ஸு1ப4 ப2லதோ3 (ராம)
சரணம் 2
ஜித கௌ3தம க்ரு2த ஸா1போ
நத வரத3 ஸீதாபோ (ராம)
சரணம் 3
ப4க்த சித்த 1தாப ஹரோ
2பா4வுக தா3ன சதுரோ (ராம)
சரணம் 4
ஸுர தாரக க3ண சந்த்3ரோ
3முர 4நரகேப4 ம்ரு2கே3ந்த்3ரோ (ராம)
சரணம் 5
ஹரி பத்3மஜ 5ஸ1ர்வேஸோ1
6ஹரித3ஸ்1வ ஸு-ஸங்காஸோ1 (ராம)
சரணம் 6
த்யாக3ராஜ ஹ்ரு2த்-ஸத3னோ
நாக3 ராஜ வர ஸ1யனோ (ராம)
பொருள் - சுருக்கம்
- இரகு குலத்திலகமாகிய இராமனே எனக்கு தெய்வம்!
- ஆசை, மயக்கம் மற்றும் செருக்கற்ற,
- தூய இதயத்தோருக்கு நற்பயனளிக்கும்,
- கௌதம முனிவரின் சாபத்தினைப் போக்கிய,
- பணிந்தோருக்கருளும் சீதைக் கேள்வனாகிய,
- தொண்டரின் மனவெம்மை நீக்கும்,
- பேறருளும் திறமையுடைய,
- சுரரெனும் தாரைகளிடை மதியாகிய,
- முரன், நரகனெனும் யானைகளுக்குச் சிங்கமாகிய,
- அரி, மலரோன் மற்றும் சர்வனுக்கும் தலைவனாகிய,
- பரிதி நிகரொளியுடைய,
- தியாகராசனின் இதயத்துறையும்,
- உயர் அரவரசன் மேற்றுயிலும்,
- இரகு குலத்திலகமாகிய இராமனே எனக்கு தெய்வம்!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம ஏவ/ தை3வதம்/ ரகு4/ குல/ திலகோ/ மே/
இராமனே/ தெய்வம்/ இரகு/ குல/ திலகம்/ எனக்கு/
சரணம்
சரணம் 1
விக3த/ காம/ மோஹ/ மதோ3/
அற்றோன்/ ஆசை/ மயக்கம்/ (மற்றும்) செருக்கு/
விமல/ ஹ்ரு2த3ய/ ஸு1ப4/ ப2லதோ3/ (ராம)
தூய/ இதயத்தோருக்கு/ நற்/ பயனளிக்கும்/ இராமனே...
சரணம் 2
ஜித/ கௌ3தம/ க்ரு2த/ ஸா1போ/
(வென்ற) போக்குவோன்/ கௌதம (முனிவர்)/ இட்ட/ சாபத்தினை/
நத/ வரத3/ ஸீதா/-போ/ (ராம)
பணிந்தோருக்கு/ அருளும்/ சீதை/ கேள்வன்/ இராமனே...
சரணம் 3
ப4க்த/ சித்த/ தாப/ ஹரோ/
தொண்டரின்/ மன/ வெம்மை/ நீக்கும்/
பா4வுக/ தா3ன/ சதுரோ/ (ராம)
பேறு/ அருளும்/ திறமையுடைய/ இராமனே...
சரணம் 4
ஸுர/ தாரக க3ண/ சந்த்3ரோ/
சுரரெனும்/ தாரைகளிடை/ மதியும்/
முர/ நரக/-இப4/ ம்ரு2க3-இந்த்3ரோ/ (ராம)
முரன்/ நரகனெனும்/ யானைகளுக்கு/ சிங்கம்/ இராமனே...
சரணம் 5
ஹரி/ பத்3மஜ/ ஸ1ர்வ/-ஈஸோ1/
அரி/ மலரோன்/ (மற்றும்) சர்வனுக்கும்/ தலைவன்/
ஹரித்/-அஸ்1வ/ ஸு-ஸங்காஸோ1/ (ராம)
வெண் சிவப்பு/ குதிரையோன் (பரிதி)/ நிகரொளியுடைய/ இராமனே...
சரணம் 6
த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-ஸத3னோ/
தியாகராசனின்/ இதயத்து/ உறையும்/
நாக3/ ராஜ/ வர/ ஸ1யனோ/ (ராம)
அரவு/ அரசன்/ உயர்/ மேற்றுயில்வோன்/ இராமனே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாப - பாப : இதற்கு முன் வரும் 'சித்த' என்று சொல்லினால் 'தாப' என்ற சொல்லே சரியாகும்.
Top
மேற்கோள்கள்
3 - முர - முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன் - பாகவத புராணம், புத்தகம் 10. அத்தியாயம் 59 - முரன் என்னும் அரக்கன் - கதையின் சுருக்கம்
4 - நரக - நரகாசுரன் எனப்படும் பௌ4மாசுரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன். பாகவத புராணம், புத்தகம் 10, அத்தியாயம் 59 - நரகாசுரன் கதை சுருக்கம்
5 - ஸ1ர்வ - சிவன் - வியாச முனிவர் இயற்றிய 'ஸ1த ருத்3ரீயம்' நோக்கவும்
6 - ஹரித3ஸ்1வ - வெண் சிவப்புக் குதிரையோன். 'ஆதி3த்ய ஹ்ரு2த3யம்' என்ற சூரியனைக் குறித்த தோத்திரத்தில், சூரியனுக்கு ஒரு பெயர்.
Top
விளக்கம்
2 - பா4வுக - சில புத்தகங்களில் இச்சொல்லுக்கு 'மோக்ஷம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் இங்கு பொருந்துமாகிலும், சம்ஸ்கிருத மற்றும் தெலுங்கு அகராதிகளின்படி இச்சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை.
கௌதம முனிவரின் சாபம் - அகலியைக்கிட்ட சாபம்
மலரோன் - பிரமன்
Top
Updated on 24 Jun 2009
No comments:
Post a Comment