Tuesday, March 24, 2009

தியாகராஜ கிருதி - வினதா ஸுத ராரா - ராகம் ஹுஸேனி - Vinataa Suta Raaraa - Raga Huseni

பல்லவி
வினதா ஸுத ராரா நா வினுதி 1கை3கொனரா

அனுபல்லவி
4ன நாக3 பாஸ1ம்பு3ல க2ண்டி3ஞ்ச ராரா (வி)

சரணம்
சரணம் 1
2அமரேஸு1னி கெ3லிசி நீவம்ரு2தமு தெச்சி
விமல கீர்தி வஹிஞ்சி வெலஸில்லின வீரா (வி)


சரணம் 2
ஹரிகி வாஹனமௌ மாயய்ய வேக3 ராரா நீ
ஸரியௌ ப4க்துனி ப்3ரோவ ஸமயமிதி3 ராரா (வி)


சரணம் 3
த்யாக3ராஜ நுதுனி தா3ஸுடௌ3 தீ4ரா
நாகா31ன நின்னு வினா க3தியெவ்வருரா (வி)


பொருள் - சுருக்கம்
வினதை மைந்தா! அமரேசனை வென்று, நீ அமிழ்தினைக் கொணர்ந்து, மாசற்ற புகழடைந் தொளிரும் வீரா! அரியின் வாகனமாகிய எமதய்யா! தியாகராசனால் போற்றப் பெற்றோனின் தொண்டனாகிய தீரா! அரவுண்போனே!
  • வாராயய்யா, எனது போற்றியினை ஏற்பாயய்யா

  • கொடிய அரவு கட்டுகளைத் துண்டிக்க வாராயய்யா;

  • வேகமாய் வாராயய்யா; உனக்கு நிகரான தொண்டனைக் காக்கத் தருணமிது; வாராயய்யா;

  • உன்னையன்றி போக்கெவரய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினதா/ ஸுத/ ராரா/ நா/ வினுதி/ கை3கொனரா/
வினதை/ மைந்தா/ வாராயய்யா/ எனது/ போற்றியினை/ ஏற்பாயய்யா/


அனுபல்லவி
4ன/ நாக3/ பாஸ1ம்பு3ல/ க2ண்டி3ஞ்ச/ ராரா/ (வி)
கொடிய/ அரவு/ கட்டுகளை/ துண்டிக்க/ வாராயய்யா/


சரணம்
சரணம் 1
அமர/-ஈஸு1னி/ கெ3லிசி/ நீவு/-அம்ரு2தமு/ தெச்சி/
அமரர்/ ஈசனை/ வென்று/ நீ/ அமிழ்தினை/ கொணர்ந்து/

விமல/ கீர்தி/ வஹிஞ்சி/ வெலஸில்லின/ வீரா/ (வி)
மாசற்ற/ புகழ்/ அடைந்து/ ஒளிரும்/ வீரா/


சரணம் 2
ஹரிகி/ வாஹனமௌ/ மா/-அய்ய/ வேக3/ ராரா/ நீ/
அரியின்/ வாகனமாகிய/ எமது/ அய்யா/ வேகமாய்/ வாராயய்யா/ உனக்கு/

ஸரியௌ/ ப4க்துனி/ ப்3ரோவ/ ஸமயமு/-இதி3/ ராரா/ (வி)
நிகரான/ தொண்டனை/ காக்க/ தருணம்/ இது/ வாராயய்யா/


சரணம் 3
த்யாக3ராஜ/ நுதுனி/ தா3ஸுடௌ3/ தீ4ரா/
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனின்/ தொண்டனாகிய/ தீரா/

நாக3/-அஸ1ன/ நின்னு/ வினா/ க3தி/-எவ்வருரா/ (வி)
அரவு/ உண்போனே/ உன்னை/ யன்றி/ போக்கு/ எவரய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கை3கொனரா - கை3கொனுமா : அனுபல்லவி மற்றும் அனைத்து சரணங்களிலும், கடைச்சொற்களை கருத்தில் கொண்டு, 'கை3கொனரா' சரியென புலப்படுகின்றது.

2 - அமரேஸு1னி கெ3லிசி - அமரேஸு1னி கொ3லிசி : 'கெ3லிசி' என்றால் 'வென்று' என்றும், 'கொ3லிசி' என்றால் 'புகழ்ந்து' என்றும் பொருள்படும். கீழே கூறப்பட்ட மேற்கோளின்படி, கருடன், இந்திரனை வென்று, அமிழ்தினைக் கொணர்ந்தான். எனவே 'கெ3லிசி' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
2 - அமரேஸு1னி கெ3லிசி - தன்னுடைய தாய் வினதையை சிறை மீட்கவேண்டி, இந்திரனை வென்று, கருடன் அமிழ்து கொணர்ந்த கதையினை மகாபாரதம், ஆதி பர்வம், ஆஸ்திக பர்வம், பகுதிகள் 32 - 34-ல் நோக்கவும்.

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' எனும் நாட்டிய-நாடகத்தில், கடலரசன், பிரகலாதனுக்காக, கருடனை நோக்கிப் பாடுவதாக

வினதை - கருடனின் தாய்
அமரேசன் - இந்திரன்
உனக்கு நிகரான தொண்டன் - பிரகலாதனைக் குறிக்கும்
தியாகராசனால் போற்றப் பெற்றோன் - அரி

Top


Updated on 24 Mar 2009

No comments: