Wednesday, March 25, 2009

தியாகராஜ கிருதி - ஸர்வ லோக - ராகம் ஹுஸேனி - Sarva Loka - Raga Huseni

பல்லவி
ஸர்வ லோக த3யா நிதே4 ஸார்வபௌ4ம தா31ரதே2

சரணம்
சரணம் 1
பஞ்ச பூ4தமுலகு நாது23னுசு 1தெலுஸுகொண்டி (ஸ)


சரணம் 2
பூ4-ஸுதா கரமு பட்டி பூ4மி வெலயு வாடு3 நீவு (ஸ)


சரணம் 3
நீரதி4பை பா33 2யோக3 நித்3 ஸேயு வாடு3 நீவு (ஸ)


சரணம் 4
கமல ப3ந்து4 குலஜ வருல 3கட3 தேர்சின வாடு3 நீவு (ஸ)


சரணம் 5
பவமான 4குமாருண்டு33ண்டைன வாடு3 நீவு (ஸ)


சரணம் 6
5அந்தரிக்ஷ கேஸ1 நுதானந்த நாம ரூப ரஹித (ஸ)


சரணம் 7
6ஞான வைராக்3ய ப4க்தி 7தா3னமொஸகு3 வாடு3 நீவு (ஸ)


சரணம் 8
ஆக3ம நிக3மாதீத த்யாக3ராஜ வினுத சரித (ஸ)


பொருள் - சுருக்கம்
அனைத்துலக கருணைக் கடலே! அண்டமாள்வோனே! தசரதன் மைந்தா! சிவனால் போற்றப்பெற்ற, முடிவற்ற, பெயர், உருவற்றவனே! ஆகமங்கள், மறைகளுக்கு அப்பாற்பட்டோனே! தியாகராசனால் போற்றப் பெற்ற சரிதத்தோனே!
  • ஐம்பூதங்களின் தலைவன் (நீ) என அறிந்துகொண்டேன்;

  • புவிமகள் கரம் பற்றி, புவியில் ஒளிர்பவன் நீ;

  • பாற்கடலில் நன்கு அறிதுயில் கொள்பவன் நீ;

  • பகலவன் குலத்தோன்றல்களைக் கடைத் தேற்றியவன் நீ;

  • வாயு மைந்தனைச் சேவகனா யுடைத்தவன் நீ;

  • ஞானம், பற்றின்மை, இறைப்பற்று கொடை யருள்பவன் நீ



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸர்வ/ லோக/ த3யா/ நிதே4/ ஸார்வபௌ4ம/ தா31ரதே2/
அனைத்து/ உலக/ கருணை/ கடலே/ அண்டமாள்வோனே/ தசரதன் மைந்தா/


சரணம்
சரணம் 1
பஞ்ச/ பூ4தமுலகு/ நாது2டு3/-அனுசு/ தெலுஸுகொண்டி/ (ஸ)
ஐம்/ பூதங்களின்/ தலைவன்/ (நீ) என/ அறிந்துகொண்டேன்/


சரணம் 2
பூ4/-ஸுதா/ கரமு/ பட்டி/ பூ4மி/ வெலயு வாடு3/ நீவு/ (ஸ)
புவி/ மகள்/ கரம்/ பற்றி/ புவியில்/ ஒளிர்பவன்/ நீ/


சரணம் 3
நீரதி4பை/ பா33/ யோக3/ நித்3ர/ ஸேயு வாடு3/ நீவு/ (ஸ)
பாற்கடலில்/ நன்கு/ அறி/ துயில்/ கொள்பவன்/ நீ/


சரணம் 4
கமல/ ப3ந்து4/ குலஜ வருல/ கட3/ தேர்சின வாடு3/ நீவு/ (ஸ)
பகலவன்/ குலத்தோன்றல்களை/ கடை/ தேற்றியவன்/ நீ/


சரணம் 5
பவமான/ குமாருண்டு3/ ப3ண்டு/-ஐன வாடு3/ நீவு/ (ஸ)
வாயு/ மைந்தனை/ சேவகனா/ யுடைத்தவன்/ நீ/


சரணம் 6
அந்தரிக்ஷ/ கேஸ1/ நுத/-அனந்த/ நாம/ ரூப/ ரஹித/ (ஸ)
ஆகாய/ முடியோன் (சிவனால்)/ போற்றப்பெற்ற/ முடிவற்ற/ பெயர்/ உருவற்றவனே/


சரணம் 7
ஞான/ வைராக்3ய/ ப4க்தி/ தா3னமு/-ஒஸகு3 வாடு3/ நீவு/ (ஸ)
ஞானம்/ பற்றின்மை/ இறைப்பற்று/ கொடை/ யருள்பவன்/ நீ/


சரணம் 8
ஆக3ம/ நிக3ம/-அதீத/ த்யாக3ராஜ/ வினுத/ சரித/ (ஸ)
ஆகமங்கள்/ மறைகளுக்கு/ அப்பாற்பட்டோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ சரிதத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தெலுஸுகொண்டி - நே தெலுஸுகொண்டி

4 - குமாருண்டு3 - குமருண்டு3 : 'குமாருண்டு3' சரியான சொல்லாகும்.

7 - தா3னமொஸகு3 வாடு3 - தா3னமொஸகு3 வாட3 : அனைத்து சரணங்களிலும் கொடுத்துள்ள 'வாடு3' என்ற சொல்லை அனுசரித்து, இங்கும் 'வாடு3' என்று ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
2 - யோக3 நித்3 - யோக நித்திரை - அறிதுயில் - திருமூலரின் திருமந்திரம் செய்யுள் 129 நோக்கவும்.

3 - கட3 தேர்சின வாடு3 - நரசிங்க அவதாரத்தில் இறைவன் பிரகலாதனுக்கு வரமளித்தல் - பாகவத புராணம், புத்தகம் 7, அத்தியாயம் 10, செய்யுள் 18 நோக்கவும்.

"உன்னுடைய தந்தையும், அவனுக்கு முற்பட்ட இருபத்தொரு தலைமுறையினரும், நீ இந்த குலத்தில் பிறந்ததனால், பேறு பெற்றவராகினர்."

5 - அந்தரிக்ஷ கேஸ1 - ஆகாய முடியோன் - சூரியன் மற்றும் சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் சிவனின் கேசம் (முடி) எனக் கூறப்படும். அதனால் சிவனுக்கு அப்பெயர். - மகாபாரதம், புத்தகம் 7, துரோண பர்வம் - துரோணவத பர்வம், பகுதி 202 நோக்கவும்.

Top

விளக்கம்
6 - ஞான வைராக்3ய ப4க்தி - ஞானம், பற்றின்மை மற்றும் இறைப்பற்று - இவை மூன்றும் கலந்ததே முற்றும் துறந்த முனிவரின் இலக்கணம் - விஷ்ணு, ரிஷபராக அவதரித்து, உலகத்திற்கு எடுத்துக் காட்டியது பற்றி, பாகவத புராணம், புத்தகம் 5, அத்தியாயம் 5-ல் காணவும்.

பகலவன் குலம் - இராமனின் குலம்

Top


Updated on 25 Mar 2009

No comments: