Monday, March 23, 2009

தியாகராஜ கிருதி - ராம ராம ராம ஸீதா - ராகம் ஹுஸேனி - Rama Rama Rama Sita - Raga Huseni

பல்லவி
ராம ராம ராம ஸீதா ரமண பாப ஹரண

சரணம்
சரணம் 1
செந்த ராகயுண்டு3டெவரி 1செலிமோ நிண்டு3 கலிமோ (ரா)


சரணம் 2
மனமேசேமனுசு இந்த மத3மா காம த3மா (ரா)


சரணம் 3
நனு வினா க3தி எவ்வரனுசு நக3வோ லேக பி3கு3வோ (ரா)


சரணம் 4
கருண ஜூதுனனுசு பலுகு கருவா ப்3ரோவ ப3ருவா (ரா)


சரணம் 5
இல ரக்ஷண ஸேய லேனி குலமா வ்யாகுலமா (ரா)


சரணம் 6
ராமாயனி மொரலிட3 மதி3 ராயா தே3வ ராயா (ரா)


சரணம் 7
இன்னி வின்னபமுலகு மதி3 இனுமா மாட வினுமா (ரா)


சரணம் 8
1ஸி1 முக2 நன்னேசேதி3 யஸ1மா நாது3 வஸ1மா (ரா)


சரணம் 9
4ளி ப4ளி தன கர்மமெந்த ப3லமோ லேக சலமோ (ரா)


சரணம் 10
வலசி பாடி3 இந்த பல்க வலெனா தாள க3லனா (ரா)


சரணம் 11
லேமி தெல்ப பெத்33லெவரு லேரோ நீது3 போரோ (ரா)


சரணம் 12
உண்டி3னனு நின்னு போலியுந்து3ரே ஆடு3கொந்து3ரே (ரா)


சரணம் 13
வஸ1மு காது3 த்யாக3ராஜ வரத3 குந்த3 ஸு-ரத3 (ரா)


பொருள் - சுருக்கம்
இராமா! சீதைக் கேள்வா! பாவத்தைக் களைவோனே! இச்சைகளை வென்றோனே! தேவர் தலைவா! மதி முகத்தோனே! தியாகராசனின் வரதா! முல்லைப் பற்களோனே!
  • அருகில் வாராமலிருத்தல் எவருடைய நட்பினாலோ, மிக்கு செல்வத்தினாலோ?

  • நாம் ஏய்த்துவிட்டோமென இத்தனை செருக்கா?

  • 'என்னைத் தவிர கதியெவர்' என நகைப்போ யன்றி இறுமாப்போ?

  • கருணை செய்வேன் என்றொரு சொல் பஞ்சமா அன்றி காத்தல் பளுவா?

  • புவியில் (அண்டியோரைக்) காவாத குலமா யன்றி கவலையா?

  • 'ராமா'யென முறையிட, மனம் கல்லா?

  • இத்தனை விண்ணப்பங்களுக்கும் மனம் இரும்பா? சொல் செவிமடுப்பாய்.

  • என்னை ஏய்த்தல் (உனக்குப்) பெருமையா? எனது வசமா?

  • பலே! பலே! எனது ஊழ்வினை யெத்தனை வலுவோ? அன்றி (உனது) ஏமாற்றலோ?

  • காதலித்து, பாடி, இத்தனைப் பகர வேணுமா? தாளவியலுமா?

  • இன்மையைத் தெரிவிக்கப் பெரியோர் எவரும் இலரோ அன்றி யுனது அலைக்கழிப்போ?

  • (பெரியோர்) இருந்தாலும் உன்னைப் போல் இருப்பரே; (என்னைக்) குறை சொல்வரே;

  • (எனது) வசமன்று.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ ஸீதா/ ரமண/ பாப/ ஹரண/
இராமா/ இராமா/ இராமா/ சீதை/ கேள்வா/ பாவத்தை/ களைவோனே/


சரணம்
சரணம் 1
செந்த/ ராக/-உண்டு3ட/-எவரி/ செலிமோ/ நிண்டு3/ கலிமோ/ (ரா)
அருகில்/ வாராமல்/ இருத்தல்/ எவருடைய/ நட்பினாலோ/ மிக்கு/ செல்வத்தினாலோ/


சரணம் 2
மனமு/-ஏசேமு/-அனுசு/ இந்த/ மத3மா/ காம/ த3மா/ (ரா)
நாம்/ ஏய்த்துவிட்டோம்/ என/ இத்தனை/ செருக்கா/ இச்சைகளை/ வென்றோனே/


சரணம் 3
நனு/ வினா/ க3தி/ எவ்வரு/-அனுசு/ நக3வோ/ லேக/ பி3கு3வோ/ (ரா)
'என்னை/ தவிர/ கதி/ யெவர்'/ என/ நகைப்போ/ யன்றி/ இறுமாப்போ/


சரணம் 4
கருண/ ஜூதுனு/-அனுசு/ பலுகு/ கருவா/ ப்3ரோவ/ ப3ருவா/ (ரா)
கருணை/ செய்வேன்/ என்ற (ஒரு)/ சொல்/ பஞ்சமா/ (அன்றி) காத்தல்/ பளுவா/


சரணம் 5
இல/ ரக்ஷண ஸேய லேனி/ குலமா/ வ்யாகுலமா/ (ரா)
புவியில்/ (அண்டியோரைக்) காவாத/ குலமா/ (யன்றி) கவலையா/


சரணம் 6
ராமா/-அனி/ மொரலு-இட3/ மதி3/ ராயா/ தே3வ/ ராயா/ (ரா)
'ராமா'/யென/ முறையிட/ மனம்/ கல்லா/ தேவர்/ தலைவா/


சரணம் 7
இன்னி/ வின்னபமுலகு/ மதி3/ இனுமா/ மாட/ வினுமா/ (ரா)
இத்தனை/ விண்ணப்பங்களுக்கும்/ மனம்/ இரும்பா/ சொல்/ செவிமடுப்பாய்/


சரணம் 8
1ஸி1/ முக2/ நன்னு/-ஏசேதி3/ யஸ1மா/ நாது3/ வஸ1மா/ (ரா)
மதி/ முகத்தோனே/ என்னை/ ஏய்த்தல்/ (உனக்குப்) பெருமையா/ எனது/ வசமா/


சரணம் 9
4ளி/ ப4ளி/ தன/ கர்மமு/-எந்த/ ப3லமோ/ லேக/ சலமோ/ (ரா)
பலே/ பலே/ எனது/ ஊழ்வினை/ யெத்தனை/ வலுவோ/ அன்றி/ (உனது) ஏமாற்றலோ/


சரணம் 10
வலசி/ பாடி3/ இந்த/ பல்க/ வலெனா/ தாள/ க3லனா/ (ரா)
காதலித்து/ பாடி/ இத்தனை/ பகர/ வேணுமா/ தாள/ இயலுமா/


சரணம் 11
லேமி/ தெல்ப/ பெத்33லு/-எவரு/ லேரோ/ நீது3/ போரோ/ (ரா)
இன்மையை/ தெரிவிக்க/ பெரியோர்/ எவரும்/ இலரோ/ (அன்றி) யுனது/ அலைக்கழிப்போ/


சரணம் 12
உண்டி3னனு/ நின்னு/ போலி/-உந்து3ரே/ ஆடு3கொந்து3ரே/ (ரா)
(பெரியோர்) இருந்தாலும்/ உன்னை/ போல்/ இருப்பரே/ (என்னைக்) குறை சொல்வரே/


சரணம் 13
வஸ1மு/ காது3/ த்யாக3ராஜ/ வரத3/ குந்த3/ ஸு-ரத3/ (ரா)
(எனது) வசமன்று/ தியாகராசனின்/ வரதா/ முல்லை/ பற்களோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - செலிமோ நிண்டு3 கலிமோ - செலிமி நிண்டு3 கலிமி

மேற்கோள்கள்

விளக்கம்
இன்மை - வறுமை

Top


Updated on 23 Mar 2009

No comments: