Sunday, March 22, 2009

தியாகராஜ கிருதி - ராமா நின்னே நம்மி - ராகம் ஹுஸேனி - Ramaa Ninne Nammi - Raga Huseni

பல்லவி
1ராமா நின்னே நம்மினானு நிஜமுக3 ஸீதா (ரா)

அனுபல்லவி
காம ஜனக கமனீய வத3ன நனு
காவவே காருண்ய 2ஜலதி4 (ரா)

சரணம்
சரணம் 1
ஸார ஸாமாதி3 வேத3 ஸார ஸந்தத
பு34 விஹார 3ராஜித முக்தா
ஹார
கனக கேயூர த4ர ஸுகு3
பாராவார ஸுராராதி4த பத3 (ரா)


சரணம் 2
தீ4ர ஸு-ஜன ஹ்ரு2த்பஞ்ஜர கீர 4நீ பத3
4க்தி மாகீர
மத3ன ஸுந்த3-
ராகார த3னுஜ ஸம்ஹார து3ஷ்ட ஜன
தூ3ர ரகு4 குலோத்3தா4ரோதா3ர (ரா)


சரணம் 3
5ராஜ ராஜ வந்தி3 பூ4-ஜா நாயக ஸுர
ஸமாஜ ஸ்ரீ-கர 6த்யாக3-
ராஜ
மானஸ ஸரோஜ குஸும தி3
ராஜ பங்க்தி ரத2 ராஜ தனய ஸ்ரீ (ரா)


பொருள் - சுருக்கம்
  • இராமா! சீதாராமா!

  • காமனை யீன்றோனே! விரும்பத்தகு வதனத்தோனே! கருணைக் கடலே!

  • சாரமே! சாமம் முதலான மறைச் சாரமே! எவ்வமயமும் அறிஞர் உள்ளத்துறையே! முத்து மாலையினால் ஒளிர்வோனே! பொற் கேயூரமணிவோனே! நற்குணக் கடலே! வானோர் தொழும் திருவடியோனே!

  • தீரனே! நல்லோரிதயக் கூண்டுக் கிளியே! மதனனின் எழில் உருவத்தோனே! அரக்கரை யழித்தோனே! தீயோரினின்று விலகியோனே! இரகு குலத்தினை மேம்படுத்தியவனே! தாராள குணத்தோனே!

  • பேரரசர்களால் வந்திக்கப்பெற்றோனே! புவிமகள் நாயகா! வானோர் குழுமத்துறைவோனே! சீரருள்வோனே! தியாகராசனின் இதயத் தாமரை மலரினை மலரச்செய்யும் பகலவனே! ஈரைந்துத் தேரோன் மைந்தனே!

    • உன்னையே நம்பியுள்ளேன் உண்மையாக.

    • என்னைக் காப்பாயய்யா.

    • உனது திருவடிப் பற்றினை யெமக்கு அருள்வாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமா/ நின்னே/ நம்மினானு/ நிஜமுக3/ ஸீதா/ (ரா)
இராமா/ உன்னையே/ நம்பியுள்ளேன்/ உண்மையாக/, சீதா/ ராமா...


அனுபல்லவி
காம/ ஜனக/ கமனீய/ வத3ன/ நனு/
காமனை/ யீன்றோனே/ விரும்பத்தகு/ வதனத்தோனே/ என்னை/

காவவே/ காருண்ய/ ஜலதி4/ (ரா)
காப்பாயய்யா/ கருணை/ கடலே/


சரணம்
சரணம் 1
ஸார/ ஸாம/-ஆதி3/ வேத3/ ஸார/ ஸந்தத/
சாரமே/ சாமம்/ முதலான/ மறை/ சாரமே/ எவ்வமயமும்/

பு34/ விஹார/ ராஜித/ முக்தா/
அறிஞர்/ உள்ளத்துறையே/ ஒளிர்வோனே/ முத்து/

ஹார/ கனக/ கேயூர/ த4ர/ ஸுகு3ண/
மாலையினால்/ பொற்/ கேயூரம்/ அணிவோனே/ நற்குண/

பாராவார/ ஸுர/-ஆராதி4த/ பத3/ (ரா)
கடலே/ வானோர்/ தொழும்/ திருவடியோனே/


சரணம் 2
தீ4ர/ ஸு-ஜன/ ஹ்ரு2த்/-பஞ்ஜர/ கீர/ நீ/ பத3/
தீரனே/ நல்லோர்/ இதய/ கூண்டு/ கிளியே/ உனது/ திருவடி/

4க்தி/ மாகு/-ஈர/ மத3ன/ ஸுந்த3ர/-
பற்றினை/ யெமக்கு/ அருள்வாயய்யா/ மதனனின்/ எழில்/

ஆகார/ த3னுஜ/ ஸம்ஹார/ து3ஷ்ட ஜன/
உருவத்தோனே/ அரக்கரை/ யழித்தோனே/ தீயோரினின்று/

தூ3ர/ ரகு4/ குல/-உத்3தா4ர/-உதா3ர/ (ரா)
விலகியோனே/ இரகு/ குலத்தினை/ மேம்படுத்தியவனே/ தாராள குணத்தோனே/


சரணம் 3
ராஜ ராஜ/ வந்தி3த/ பூ4-ஜா/ நாயக/ ஸுர/
பேரரசர்களால்/ வந்திக்கப்பெற்றோனே/ புவிமகள்/ நாயகா/ வானோர்/

ஸமாஜ/ ஸ்ரீ/-கர/ த்யாக3ராஜ/
குழுமத்துறைவோனே/ சீர்/ அருள்வோனே/ தியாகராசனின்/

மானஸ/ ஸரோஜ/ குஸும/ தி3ன ராஜ/
இதய/ தாமரை/ மலரினை/ (மலரச்செய்யும்) பகலவனே/

பங்க்தி/ ரத2/ ராஜ/ தனய/ ஸ்ரீ/ (ரா)
ஈரைந்து/ தேர்/ மன்னன்/ மைந்தனே/ ஸ்ரீ/ ராம...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமா - ராம

2 - ஜலதி4 - ஜலதீ4 - ஜலதே4

3 - ராஜித முக்தா ஹார - ராஜித நவ முக்தா ஹார

5 - ராஜ ராஜ வந்தி3 - ராஜ ராஜ வந்தி3த பத3

6 - த்யாக3ராஜ - வர த்யாக3ராஜ

Top

மேற்கோள்கள்

விளக்கம்
4 - நீ பத34க்தி மாகீர - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இது நேரிடையாக விளிப்பதனால் 'மாகீரா' என நெடிலில் முடியவேண்டும்

கேயூரம் - தோளணி
புவிமகள் - சீதை
ஈரைந்துத் தேர் மன்னன் - தசரதன்

Top


Updated on 22 Mar 2009

No comments: