Sunday, March 22, 2009

தியாகராஜ கிருதி - ரகு4 வீர ரண - ராகம் ஹுஸேனி - Raghu Veera Rana - Raga Huseni

பல்லவி
ரகு4 வீர ரண தீ4ர ராரா ராஜ குமார

அனுபல்லவி
1ப்4ரு2கு3 ஸூனு மத3 விதா3 ப்3ரு2ந்தா3ரகாதா4ர (ர)

சரணம்
ராவண க4ட கர்ண 23லாராதி ரிபு 3நக3 நகா3ரி
ஸ்தா2வர ஜங்க3ம ரூப த்யாக3ராஜ ஹ்ரு2ச்சாரி (ர)


பொருள் - சுருக்கம்
  • இரகுவீரா! போர்க்களத்தில் தீரனே! இளவரசே!

  • பிருகு மைந்தனின் செருக்கினை யழித்தோனே! வானோருக்கு ஆதாரமே!

  • இராவணன், கும்பகர்ணன், இந்திரசித்து ஆகியோருக்கு, மலைகளுக்கு இந்திரன் போன்றோனே! அசையாதவை மற்றும் அசைவன உருவத்தோனே! தியாகராசனின் இதயத்தினிலுறையே!

வாராய்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரகு4/ வீர/ ரண/ தீ4ர/ ராரா/ ராஜ குமார/
இரகு/ வீரா/ போர்க்களத்தில்/ தீரனே/ வாராய்/ இளவரசே/


அனுபல்லவி
ப்4ரு2கு3/ ஸூனு/ மத3/ விதா3ர/ ப்3ரு2ந்தா3ரக/-ஆதா4ர/ (ர)
பிருகு/ மைந்தனின்/ செருக்கினை/ யழித்தோனே/ வானோருக்கு/ ஆதாரமே/


சரணம்
ராவண/ க4ட/ கர்ண/ ப3ல-அராதி ரிபு/ நக3/ நக3/-அரி/
இராவணன்/ கும்ப/ கர்ணன்/ இந்திரஜித்து ('ப3ல' அரக்கனின் எதிரிக்கு எதிரி)/ மலைகளுக்கு/ இந்திரன் (மலை எதிரி)/

ஸ்தா2வர/ ஜங்க3ம/ ரூப/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-சாரி/ (ர)
அசையாதவை/ அசைவன/ உருவத்தோனே/ தியாகராசனின்/ இதயத்தினில்/ உறையே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ப்4ரு2கு3 ஸூனு மத3 விதா3 - பிருகு மைந்தன் - பரசுராமன் : வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 76 நோக்கவும்.

2 - 3லாராதி ரிபு - 'ப3ல' அரக்கனின் எதிரி - இந்திரன்; ப3ல அரக்கனின் எதிரிக்கு எதிரி - இந்திரஜித்து; இந்திரஜித்து - இராவணன் மைந்தன் : பாற்கடலைக் கடந்தபோது, வானோருக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் 'ப3ல' என்னும் அரக்கனை இந்திரன் கொன்றான். பாகவத புராணம், புத்தகம் 8, அத்தியாயம் 11 - சுருக்கம்

3 - நக3 நகா3ரி - மலைகளுக்கு இந்திரன் - மலைகளைப் பொடியாக்கியவன் : அனுமன், இலங்கைக்கு வான மார்க்கத்தில் செல்லுகையில், அவனுக்கு, 'மைனாக' என்ற மலை, மனித உரு பூண்டு, தன்னுடைய கதையைச் சொன்னான். வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், அத்தியாயம் 1 நோக்கவும்.

Top

விளக்கம்



Updated on 22 Mar 2009

No comments: