Saturday, March 21, 2009

தியாகராஜ கிருதி - ப4ஜ ராமம் - ராகம் ஹுஸேனி - Bhaja Ramam - Raga Huseni

பல்லவி
14ஜ ராமம் ஸததம் மானஸ

சரணம்
சரணம் 1
அமித ஸு1பா4கரம் பாப திமிர விபா4-கரம் (ப4)


சரணம் 2
21த முக2 நுத கீ3தம் ஸகலாஸ்1ரித பாரிஜாதம் (ப4)


சரணம் 3
பாலித லோக க3ணம் பரம கபாலி வினுத ஸுகு3ணம் (ப4)


சரணம் 4
ஸரோஜ வர நாப4ம் 3யம புராராதி லாப4ம் (ப4)


சரணம் 5
வரானந்த3 கந்த3ம் நத ஸுராதி3 முனி ப்3ரு2ந்த3ம் (ப4)


சரணம் 6
கமனீய ஸ1ரீரம் தீ4ரம் மம ஜீவாதா4ரம் (ப4)


சரணம் 7
கர த்4ரு2த ஸ1ர சாபம் ராமம் ப4ரித கு3ண கலாபம் (ப4)


சரணம் 8
4வ ஜல நிதி4 போதம் ஸாரஸ ப4வ முக2 நிஜ தாதம் (ப4)


சரணம் 9
வாதாத்மஜ ஸுலப4ம் வர ஸீதா வல்லப4ம் (ப4)


சரணம் 10
ராஜ ரவி நேத்ரம் த்யாக3ராஜ வர மித்ரம் (ப4)


பொருள் - சுருக்கம்
மனமே!
    வழிபடுவாய், இராமனை எவ்வமயமும்.
  • அளவற்ற மங்களத்தின் ஊற்றினை,

  • பாவ இருள் நீக்கும் பகலவனை,

  • இராவணனால் போற்றப்பெற்றோனால் புகழப்பட்டவனை,

  • அண்டியோர் யாவர்க்கும் பாரிஜாதத்தினை,

  • உலக மக்களைக் காத்தோனை,

  • உயர் கபாலியினால் போற்றப்பெற்ற நற்குணத்தோனை,

  • உயர் கமல உந்தியோனை,

  • நமன், முப்புரங்களின் பகைவனால் தெரியப்பெற்றோனை,

  • உயர் ஆனந்தக் கிழங்கினை,

  • வானோராலும், முனிவர்களாலும் தொழப்பெற்றோனை,

  • விரும்பத்தக்க உடலோனை,

  • தீரனை,

  • எனது உயிருக்கு ஆதாரமானவனை,

  • கரங்களில் வில்லம்பேந்துவோனை,

  • களிப்பூட்டுவோனை,

  • நற்பண்புக்குவியலை,

  • பிறவிக் கடலினைக் கடத்தும் படகினை,

  • மலரோனின் நிசமான தந்தையினை,

  • வாயு மைந்தனுக்கு எளியோனை,

  • உயர் சீதை மணாளனை,

  • மதி, பரிதிக் கண்களோனை,

  • தியாகராசனின் உயர் நண்பனை,

வழிபடுவாய், இராமனை எவ்வமயமும்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4ஜ/ ராமம்/ ஸததம்/ மானஸ/
வழிபடுவாய்/ இராமனை/ எவ்வமயமும்/ மனமே/


சரணம்
சரணம் 1
அமித/ ஸு14/-ஆகரம்/ பாப/ திமிர/ விபா4-கரம்/ (ப4)
அளவற்ற/ மங்களத்தின்/ ஊற்றினை/ பாவ/ இருள் (நீக்கும்)/ பகலவனை/ வழிபடுவாய்...


சரணம் 2
1த/ முக2/ நுத/ கீ3தம்/ ஸகல/-ஆஸ்1ரித/ பாரிஜாதம்/ (ப4)
நூறு/ தலை(முக) (இராவணனால்)/ போற்றப்பெற்றோனால்/ புகழப்பட்டவனை/ அனைத்து/ அண்டியோர்க்கும்/ பாரிஜாதத்தினை/ வழிபடுவாய்...


சரணம் 3
பாலித/ லோக க3ணம்/ பரம/ கபாலி/ வினுத/ ஸுகு3ணம்/ (ப4)
காத்தோனை/ உலக/ மக்களை/ உயர்/ கபாலியினால்/ போற்றப்பெற்ற/ நற்குணத்தோனை/ வழிபடுவாய்...


சரணம் 4
ஸரோஜ/ வர/ நாப4ம்/ யம/ புர/-அராதி/ லாப4ம்/ (ப4)
கமல/ உயர்/ உந்தியோனை/ நமன்/ முப்புரங்களின்/ பகைவனால்/ தெரியப்பெற்றோனை/ வழிபடுவாய்...


சரணம் 5
வர/-ஆனந்த3/ கந்த3ம்/ நத/ ஸுர-ஆதி3/ முனி ப்3ரு2ந்த3ம்/ (ப4)
உயர்/ ஆனந்த/ கிழங்கினை/ தொழப்பெற்றோன்/ வானோராலும்/ முனிவர்களாலும்/ வழிபடுவாய்...


சரணம் 6
கமனீய/ ஸ1ரீரம்/ தீ4ரம்/ மம/ ஜீவ/-ஆதா4ரம்/ (ப4)
விரும்பத்தக்க/ உடலோனை/ தீரனை/ எனது/ உயிருக்கு/ ஆதாரமானவனை/ வழிபடுவாய்...


சரணம் 7
கர/ த்4ரு2த/ ஸ1ர/ சாபம்/ ராமம்/ ப4ரித/ கு3ண/ கலாபம்/ (ப4)
கரகளில்/ ஏந்துவோன்/ வில்/ அம்புகணை/ களிப்பூட்டுவோனை/ நிறை/ நற்பண்பு/ குவியலை/ வழிபடுவாய்...


சரணம் 8
4வ/ ஜல நிதி4/ போதம்/ ஸாரஸ ப4வ/ முக2/ நிஜ/ தாதம்/ (ப4)
பிறவி/ கடலினை/ (கடத்தும்) படகினை/ மலரோனின்/ சிறந்த/ நிசமான/ தந்தையினை/ வழிபடுவாய்...


சரணம் 9
வாத/-ஆத்மஜ/ ஸுலப4ம்/ வர/ ஸீதா/ வல்லப4ம்/ (ப4)
வாயு/ மைந்தனுக்கு/ எளியோனை/ உயர்/ சீதை/ மணாளனை/ வழிபடுவாய்...


சரணம் 10
ராஜ/ ரவி/ நேத்ரம்/ த்யாக3ராஜ/ வர/ மித்ரம்/ (ப4)
மதி/ பரிதி/ கண்களோனை/ தியாகராசனின்/ உயர்/ நண்பனை/ வழிபடுவாய்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 4ஜ ராமம் ஸததம் மானஸ - சில புத்தகங்களில் இச்சொற்கள் பல்லவியில் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது

சில புத்தகங்களில் 'மானஸ' என்ற சொல் ஒவ்வொரு சரணத்தின் கடைசியிலும் கொடுக்கப்பட்டுள்ளது

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - 1த முக2 - நூறு தலையன் (முகத்தோன்) - தியாகராஜர் தனது 'தே3ஹி தவ பாத34க்திம்' என்ற கீர்த்தனையில் சீதையை 'ஸ1த முக2 மத33மனே' - (நூறு தலையன் (முகத்தோன்) செருக்கினை அழித்தவளே) என்று அழைக்கின்றார். இச்சொல் - நூறு தலையன் (முகத்தோன்) - ராவணனைக் குறிக்கும். அதன்படி, இங்கும் இச்சொல்லுக்கு, 'ராவணன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

3 - யம புராராதி லாப4ம் - முப்புரங்களை சிவன் எரித்தபோது, அம்மூன்று அரக்கர்களையும், சிவன், தனது 'பாசுபதம்' என்ற வில்லினில், விஷ்ணுவை அம்பின் நுனியாக்கி, எய்து கொன்றார். அதனால், முப்புர அரக்கர்களுக்கு, விஷ்ணு, 'நமன்' என்று தியாகராஜர் கூறுவதாகவும் கொள்ளலாம். ஆனால் 'லாப4ம்' என்ற சொல் கொடுக்கப்பட்டுள்ளதால், அப்படிப்பட்ட பொருள் கொள்ள இயலாது. இச்சம்பவம் குறித்து மகாபாரதம், கர்ண பர்வம், பகுதி 34 நோக்கவும்.


இராவணனால் போற்றப்பெற்றோன் - சிவன்
பாரிஜாதம் - வேண்டியவற்றினை யருளும் வானோர் தரு
கபாலி - சிவன்
நமன், முப்புரங்களின் பகைவன் - சிவன்

Top


Updated on 21 Mar 2009

No comments: