Friday, March 20, 2009

தியாகராஜ கிருதி - ஏமனி வேகி3ந்துனே - ராகம் ஹுஸேனி - Emani Vegintune - Raga Huseni

பல்லவி
ஏமனி 1வேகி3ந்துனே ஸ்ரீ ராம ராம

அனுபல்லவி
ஏமனி வேகி3ந்துனெந்தனி ஸைரிந்து
நா முத்3து3 தே3வுடு3 நனு பா3ஸெனய்யய்யோ (ஏ)

சரணம்
சரணம் 1
பாலிஞ்சி 2லாலிஞ்சி பலுமாரு கௌகி3லிஞ்சி
தேலிஞ்சி
நனு பர தே3ஸி1 ஸேய தோசெனோ (ஏ)


சரணம் 2
ஆடி3ன முச்சட நாத3ந்தரங்க3மு நிண்ட3-
நீடு3 லேத3னியுண்டினிந்தா3க ஸரிவாரிலோ (ஏ)


சரணம் 3
3எட3 பா3யக த்யாக3ராஜுனேலு ஸ்ரீ ஹரினி தொல்லி
33லிகலார்சி நா செயி பட்டினதி3 தலசுசு (ஏ)


பொருள் - சுருக்கம்
இராமா!
  • என்னவென்று துயருறுவேன்? எவ்வளவு பொறுப்பேன்? எனதெழில் இறைவன் என்னைப் பிரிந்தனன், அய்யய்யோ!!

  • பேணி, சீராட்டி, பன்முறை அரவணைத்து மகிழ்வித்து, (இப்போது) பரதேசியாக்கத் தோன்றியதோ?

  • அவன் பேசிய மொழிகள் எனதுள்ளம் நிறைய, சரிசமமானோரில் ஈடில்லையென இருந்தேன் இதுவரை.

  • பிரிந்ததனால், தியாகராசனையாளும் அரியினை, முன்னம் களைப்பினைப் போக்கி, எனது கைப் பற்றியதை நினைந்து என்னவென்று துயருறுவேன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமனி/ வேகி3ந்துனே/ ஸ்ரீ ராம/ ராம/
என்னவென்று/ துயருறுவேன்/ ஸ்ரீ ராமா/ ராமா/


அனுபல்லவி
ஏமனி/ வேகி3ந்துனு/-எந்தனி/ ஸைரிந்து/
என்னவென்று/ துயருறுவேன்/ எவ்வளவு/ பொறுப்பேன்/

நா/ முத்3து3/ தே3வுடு3/ நனு/ பா3ஸெனு/-அய்யய்யோ/ (ஏ)
எனது/ எழில்/ இறைவன்/ என்னை/ பிரிந்தனன்/ அய்யய்யோ/


சரணம்
சரணம் 1
பாலிஞ்சி/ லாலிஞ்சி/ பலுமாரு/ கௌகி3லிஞ்சி/
பேணி/ சீராட்டி/, பன்முறை/ அரவணைத்து/

தேலிஞ்சி/ நனு/ பர தே3ஸி1/ ஸேய/ தோசெனோ/ (ஏ)
மகிழ்வித்து/ பரதேசி/ ஆக்க/ தோன்றியதோ/


சரணம் 2
ஆடி3ன/ முச்சட/ நாது3/-அந்தரங்க3மு/ நிண்ட3னு/-
பேசிய/ மொழிகள்/ எனது/ உள்ளம்/ நிறைய/

ஈடு3/ லேது3/-அனி/-உண்டினி/-இந்தா3க/ ஸரிவாரிலோ/ (ஏ)
ஈடு/ இல்லை/ என/ இருந்தேன்/ இதுவரை/ சரிசமமானோரில்/


சரணம் 3
எட3 பா3யக/ த்யாக3ராஜுனு/-ஏலு/ ஸ்ரீ ஹரினி/ தொல்லி/
பிரிந்ததனால்/ தியாகராசனை/ ஆளும்/ ஸ்ரீ ஹரியினை/ முன்னம்/

33லிகலு/-ஆர்சி/ நா/ செயி/ பட்டினதி3/ தலசுசு/ (ஏ)
களைப்பினை/ போக்கி/ எனது/ கை/ பற்றியதை/ நினைந்து/ என்னவென்று...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வேகி3ந்துனே - இச்சொல்லுக்கு, 'விழித்திருப்பேன்' என்றும் 'துயருறுவேன்' என்றும் பொருட்களுண்டு. இங்கு 'துயருறுவேன்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

2 - லாலிஞ்சி தேலிஞ்சி - தெலுங்கு அகராதிபடி, இச்சொல்லுக்கு 'சீராட்டி, மகிழ்வித்து' என்று பொருள்.

3 - எட3 பா3யக - பிரிந்ததனால் - இறைவனைக் குறிக்கும். இதனை, 'த்யாக3ராஜுனேலு' என்பதனுடன் இணைத்து, 'தியாகராஜனை இடையறாது ஆளும்' என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், அனுபல்லவியில், 'பா3ஸெனு' (இறைவன் பிரிந்தனன்) என்று கூறப்பட்டது. அதனால், இங்கும் இறைவனைக்குறிப்பதாகவே பொருள் கொள்ளப்பட்டது.

இப்பாடல் பிரகலாதன் அரியினை நினைந்து பாடுவதாக.

Top


Updated on 20 Mar 2009

No comments: