Monday, March 30, 2009

தியாகராஜ கிருதி - யுக்தமு காது3 - ராகம் ஸ்ரீ ராகம் - Yuktamu Kaadu - Raga Sri Raga

பல்லவி
யுக்தமு காது3 நனு 1ரக்ஷிஞ்சகனுண்டே3தி3 ராம

அனுபல்லவி
4க்த வத்ஸல பதித பாவன த்ரி-
1க்தியு கல்கி3ன தே3வுடு3 நீவை (யு)

சரணம்
சரணம் 1
தொலி து3ஷ்க்ரு2தமுலனணசே நீ பி3ருதி3லனு தடு3ஸுகொனெனோ
பலிகி பொ3ங்கட3னு நீ கீர்தியு 2நே பா33 லேது3 அனெனோ
3தெலிஸி தெலியனி நீ தா3ஸுல ப்3ரோவ தே3வ த3ய ரானனெனோ 4முனு
வெலஸின ப4க்துலகே
நீ ஸ1க்தியு ஸெலவை போயெனோ தெல்புமு (யு)


சரணம் 2
வத்33யுண்டு3 ஜனகாத்மஜ பல்க வத்33னெனோ லேக
நித்3து3ர ஜிதுட3தி கோபமுதோட3னு நீகேலயனெனோ
முத்3து334ரதுடா3னந்த3 பா3ஷ்பமுல கனுல நிஞ்செனோ
பத்3து3ன பவன ஸுதுடு3 வத்33னி நீ பத3மு பட்டுகொனெனோ தெல்புமு (யு)


சரணம் 3
5சல்லனி நீ ப4க்தியு லேத3னி விதி4 கல்லலாடு3கொனெனோ நா
வல்ல காத3னி பலுகு செலி மிக்கிலி வார்தலாடு3கொனெனோ
உல்லமுனனு ஸ்ரீ த்யாக3ராஜு நின்னுஞ்சுகொன மரசெனோ
செல்லலைன த4ர்ம ஸம்வர்த4னி சேர போகுமனெனோ தெல்புமு (யு)


பொருள் - சுருக்கம்
இராமா! தொண்டருக் கினியோனே! வீழ்ந்தோரைப் புனிதப்படுத்துவோனே! தேவா!

  • உகந்ததன்று என்னைக் காவாதிருத்தல்;

  • மூன்று வல்லமைகளு முடைத்த இறைவன் நீயாக, உகந்ததன்று என்னைக் காவாதிருத்தல்;

    1. முந்தைய தீவினைகளினை யடக்கும் உனது விருது, புவியில் நனைந்து போனதோ?

    2. சொல் தவறாதவனெனும் உனது புகழ், 'நான் சரியில்லை' என்றதோ?

    3. அறிமுகமில்லாத உனது தொண்டர்களைக் காக்க, தயை வாரேனென்றதோ?

    4. முன்னம் திகழ்ந்த தொண்டர்களுக்கே உனதாற்றல் (அனைத்தும்) செலவானதோ?

    5. உடனிருக்கும் சனகன் மகள் (என்னுடன்) பகர வேண்டாமென்றனளோ? அன்றி,

    6. உறக்கம் வென்றோன், மிக்கு கோபத்துடன், 'உனக்கேன்' என்றானோ?

    7. அழகாக, பரதன் ஆனந்தக் கண்ணீரால், கண்களை நிறைத்தானோ?

    8. ஆணையிட்டு, வாயுமைந்தன் 'வேண்டாமென' உனது திருவடிகளைப் பற்றிக்கொண்டானோ?

    9. 'தகுந்ததாக அவனது பத்தி இல்லை'யென பிரமன் பொய்ப் பகன்றானோ?

    10. 'என்னாலாகாதென' நாவுக்கரசி மிக்கு சொற்கள் பகன்றாளோ?

    11. உள்ளத்தினில் தியாகராசன் உன்னை இருத்திக்கொள்ள மறந்தானோ?

    12. (உனது) தங்கையான அறம் வளர்த்த நாயகி 'சேரப் போக வேண்டாமெ'ன்றாளோ?

  • தெரிவிப்பாய்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
யுக்தமு/ காது3/ நனு/ ரக்ஷிஞ்சகனு/-உண்டே3தி3/ ராம/
உகந்தது/ அன்று/ என்னை/ காவாது/ இருத்தல்/ இராமா/


அனுபல்லவி
4க்த/ வத்ஸல/ பதித/ பாவன/ த்ரி/-
தொண்டருக்கு/ இனியோனே/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துவோனே/ மூன்று/

1க்தியு/ கல்கி3ன/ தே3வுடு3/ நீவை/ (யு)
வல்லமைகளும்/ உடைத்த/ இறைவன்/ நீயாக/ உகந்ததன்று...


சரணம்
சரணம் 1
தொலி/ து3ஷ்க்ரு2தமுலனு/-அணசே/ நீ/ பி3ருது3/-இலனு/ தடு3ஸுகொனெனோ/
முந்தைய/ தீவினைகளினை/ யடக்கும்/ உனது/ விருது/ புவியில்/ நனைந்து போனதோ/

பலிகி/ பொ3ங்கடு3/-அனு/ நீ/ கீர்தியு/ நே/ பா33/ லேது3/ அனெனோ/
சொல்/ தவறாதவன்/ எனும்/ உனது/ புகழ்/ 'நான்/ சரி/ இல்லை'/ என்றதோ/

தெலிஸி தெலியனி/ நீ/ தா3ஸுல/ ப்3ரோவ/ தே3வ/ த3ய/ ரானு/-அனெனோ/ முனு/
அறிமுகமில்லாத/ உனது/ தொண்டர்களை/ காக்க/, தேவா/ தயை/ வாரேன்/ என்றதோ/ முன்னம்/

வெலஸின/ ப4க்துலகே/ நீ/ ஸ1க்தியு/ ஸெலவை போயெனோ/ தெல்புமு/ (யு)
திகழ்ந்த/ தொண்டர்களுக்கே/ உனது/ ஆற்றல் (அனைத்தும்)/ செலவானதோ/ தெரிவிப்பாய்/;


சரணம் 2
வத்33/-உண்டு3/ ஜனக/-ஆத்மஜ/ பல்க/ வத்3து3/-அனெனோ/ லேக/
உடன்/ இருக்கும்/ சனகன்/ மகள்/ (என்னுடன்) பகர/ வேண்டாம்/ என்றனளோ/ அன்றி/

நித்3து3ர/ ஜிதுடு3/-அதி/ கோபமுதோட3னு/ நீகு/-ஏல/-அனெனோ/
உறக்கம்/ வென்றோன்/ மிக்கு/ கோபத்துடன்/ 'உனக்கு/ ஏன்'/ என்றானோ/

முத்3து33/ ப4ரதுடு3/-ஆனந்த3/ பா3ஷ்பமுல/ கனுல/ நிஞ்செனோ/
அழகாக/ பரதன்/ ஆனந்த/ கண்ணீரால்/ கண்களை/ நிறைத்தானோ/

பத்3து3ன/ பவன/ ஸுதுடு3/ வத்3து3/-அனி/ நீ/ பத3மு/ பட்டுகொனெனோ/ தெல்புமு/ (யு)
ஆணையிட்டு/ வாயு/ மைந்தன்/ 'வேண்டாம்/ என'/ உனது/ திருவடிகளை/ பற்றிக்கொண்டானோ/ தெரிவிப்பாய்/;


சரணம் 3
சல்லனி/ நீ/ ப4க்தியு/ லேது3/-அனி/ விதி4/ கல்லலு/-ஆடு3கொனெனோ/
'தகுந்ததாக/ அவனது/ பத்தி/ இல்லை'/ யென/ பிரமன்/ பொய்/ பகன்றானோ/

நாவல்ல/ காது3/-அனி/ பலுகு/ செலி/ மிக்கிலி/ வார்தலு/-ஆடு3கொனெனோ/
'என்னால்/ ஆகாது/ என'/ நாவுக்கு/ அரசி/ மிக்கு/ சொற்கள்/ பகன்றாளோ/?

உல்லமுனனு/ ஸ்ரீ த்யாக3ராஜு/ நின்னு/-உஞ்சுகொன/ மரசெனோ/
உள்ளத்தினில்/ ஸ்ரீ தியாகராசன்/ உன்னை/ இருத்திக்கொள்ள/ மறந்தானோ/

செல்லலைன/ த4ர்ம ஸம்வர்த4னி/ சேர/ போகுமு/-அனெனோ/ தெல்புமு/ (யு)
(உனது) தங்கையான/ அறம் வளர்த்த நாயகி/ 'சேர/ போக வேண்டாம்/ 'என்றாளோ/ தெரிவிப்பாய்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ரக்ஷிஞ்சகனுண்டே3தி - ரக்ஷிஞ்சகயுண்டே3தி - ரக்ஷிம்பகயுண்டே3தி

3 - தெலிஸி தெலியனி - முனு தெலிஸி தெலியனி

4 - முனு வெலஸின ப4க்துலகே - வெலஸின ப4க்துலகே : 'முனு' இடம் மாறி அச்சடிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - நே பா33 லேது3 - தியாகராஜர், இப்பாடலில், தன்னிலை, முன்னிலை, படர்க்கை ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தியுள்ளார். இவ்விடத்தில் 'நே' என்ற சொல் 'தியாகராஜரையோ' அல்லது 'புகழையோ' குறிக்கும். இதற்கு முன் அடியில் காணப்படுவதனைக் கருதி, இங்கும், இதனை 'புகழ்' என்று கொள்ளப்பட்டது.

5 - சல்லனி நீ ப4க்தியு - இங்கு 'நீ' என்ற சொல் பொருந்தவில்லை. இஃது 'நா' (எனது) அல்லது 'வானி' (அவனது) என்று இருக்கவேண்டுமெனக் கருதுகின்றேன். ஆனால், அனைத்து புத்தகங்களிலும் 'நீ' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்று வல்லமைகள் - படைத்தல், காத்தல், அழித்தல்
நனைந்து போனதோ - பயனற்றுப் போனதோ
உறக்கம் வென்றோன் - இலக்குவன்
நாவுக்கரசி - கலைமகள்
அறம் வளர்த்த நாயகி - திருவையாற்றில் பார்வதி அம்மையின் பெயர்

Top


Updated on 30 Mar 2009

No comments: