பல்லவிஎந்த
3ரோ மஹானுபா
4வுலந்த
3ரிகி வந்த
3னமு
அனுபல்லவி1சந்த்3ர வத3னுனியந்த
3 சந்த
3முனு
ஹ்ரு
2த
3யாரவிந்த
3முன ஜூசி
ப்
3ரஹ்மானந்த
3மனுப
4விஞ்சு வா(ரெந்த
3ரோ)
சரணம்சரணம் 1
ஸாம கா
3ன லோல மனஸிஜ லாவண்ய
த
4ன்ய மூர்த
4ன்யு(லெந்த
3ரோ)
சரணம் 2
மானஸ வன சர வர ஸஞ்சாரமு
2ஸலிபி மூர்தி பா
3கு
3க
3 பொட
3க
3னே வா(ரெந்த
3ரோ)
சரணம் 3
3ஸரகு3ன 4பாத3முலகு ஸ்வாந்தமனு
ஸரோஜமுனு ஸமர்பணமு ஸேயு வா(ரெந்த
3ரோ)
சரணம் 4
பதித பாவனுட
3னே பராத்பருனி கு
3ரிஞ்சி
5பரமார்த2மகு3 நிஜ மார்க3முதோனு பாடு
3சுனு ஸல்லாபமுதோ
ஸ்வர லயாதி
3 ராக
3முலு தெலியு வா(ரெந்த
3ரோ)
சரணம் 5
6ஹரி கு3ண மணி-மய ஸரமுலு க3ளமுன ஸோ
1பி
4ல்லு ப
4க்த கோடுலிலலோ
தெலிவிதோ செலிமிதோ கருண கல்கி
3 ஜக
3மெல்லனு ஸுதா
4 த்
3ரு
2ஷ்டிசே ப்
3ரோசு வா(ரெந்த
3ரோ)
சரணம் 6
ஹொயலு மீர நட
3லு கல்கு
3 7ஸரஸுனி ஸதா
3 கனுல ஜூசுசுனு புலக ஸ
1ரீருலை
ஆனந்த
3 பயோதி
4 நிமக்
3னுலை
முத
3ம்பு
3னனு யஸ
1மு கல வா(ரெந்த
3ரோ)
சரணம் 7
8பரம பா4க3வத மௌனி வர ஸ
1ஸி
1 விபா
4-கர ஸனக ஸனந்த
3ன
தி
3கீ
3ஸ
1 ஸுர கிம்புருஷ கனக கஸி
1பு
ஸுத நாரத
3 தும்பு
3ரு
பவன ஸூனு பா
3ல சந்த்
3ர த
4ர ஸு
1க
ஸரோஜ ப
4வ பூ
4-ஸுர வருலு
பரம பாவனுலு க
4னுலு ஸா
1ஸ்
1வதுலு
கமல ப
4வ ஸுக
2மு ஸதா
3னுப
4வுலு கா
3க(யெந்த
3ரோ)
சரணம் 8
நீ மேனு நாம வைப
4வம்பு
3லனு
நீ பராக்ரம தை
4ர்யமுல
ஸா
1ந்த மானஸமு நீவுலனு
வசன ஸத்யமுனு ரகு
4வர நீயெட
3 ஸத்
3ப
4க்தியு ஜனிஞ்சகனு
9து3ர்மதமுலனு
கல்ல ஜேஸினட்டி நீ மதி
3-
நெரிங்கி
3 10ஸந்தஸம்பு3னனு கு
3ண
ப
4ஜனானந்த
3 கீர்தனமு ஸேயு வா(ரெந்த
3ரோ)
சரணம் 9
பா
4க
3வத ராமாயண கீ
3தாதி
3 ஸ்
1ருதி ஸா
1ஸ்த்ர புராணபு
மர்மமுலனு ஸி
1வாதி
3 11ஷண்மதமுல கூ
3ட
4முலனு
12முப்பதி3 முக்கோடி ஸுராந்தரங்க
3முல பா
4வம்பு
3ல-
நெரிங்கி
3 13பா4வ ராக3 லயாதி3 ஸௌக்
2யமுசே
சிராயுவுல் கல்கி
3 நிரவதி
4 ஸுகா
2த்முலை
த்யாக
3ராஜாப்துலைன வா(ரெந்த
3ரோ)
சரணம் 10
ப்ரேம முப்பிரிகொனு வேள
நாமமு
14தலசே வாரு
ராம ப
4க்துடை
3ன த்யாக
3-
ராஜ நுதுனி நிஜ தா
3ஸுலைன வா(ரெந்த
3ரோ)
பொருள் - சுருக்கம்சாமகானத்தினில் திளைப்போனே! மன்மதனின் எழிலோனே! இரகுவரா!
- எத்தனையோ பெருந்தகைகள்; அனைவருக்கும் வந்தனம்
- மதி முகத்தோனின் எழிலையும், ஒயிலையும், தமது இதயக் கமலத்தினிற் கண்டு, பேரின்பம் துய்ப்போர் எத்தனையோ பெருந்தகைகள்;
- பேறுடைத்த, தலைசிறந்தோர் எத்தனையோ பெருந்தகைகள்;
- மனமெனும் வனத்தில் சரிப்போனுடன் சரித்து,
- அவனுருவத்தினை நன்கு தரிசிப்போரும்,
- அவ்வமயமே, அவனது திருவடிகளில் தனது இதயமெனும் கமலத்தினை சமர்ப்பணம் செய்வோரும் எத்தனையோ பெருந்தகைகள்;
- வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனெனும் பரம்பொருளினைக் குறித்து,
- மெய்யறிவு சேர்க்கும் உண்மையான நெறியுடன், களிப்புடன் பாடிக்கொண்டு,
- சுரம் மற்றும் லயத்தினில் பிறக்கும் இராகங்களை யறிவோர் எத்தனையோ பெருந்தகைகள்;
- அரியின் குணங்களெனும் மணிமயமான சரங்கள், தொண்டையினில் துலங்கும், சீரிய தொண்டர்கள்,
- இப்புவியினில், தெருட்சியுடனும், அன்புடனும், கருணை கொண்டு, புவி யனைத்தினையும், அமிழ்தப் பார்வையினால் காப்போர் எத்தனையோ பெருந்தகைகள்;
- ஒயில் மிஞ்சும் நடையுடை அழகனை, எவ்வமயமும் கண்ணால் கண்டுகொண்டு,
- மெய்ப் புல்லரிக்க, ஆனந்தக் கடலில் களிப்புடன் மூழ்கி, புகழ் பெற்றோர் எத்தனையோ பெருந்தகைகள்;
- உயர் பாகவதர்களாகிய சிறந்த முனிவர்கள், சந்திரன், சூரியன், சனகர், சனந்தனர்,
- திசை மன்னர்கள், வானோர், கிம்புருடர், இரணியகசிபுவின் மைந்தன், நாரதர், தும்புரு,
- வாயு மைந்தன், இளம் பிறையணிவோன், சுகர், மலரோன், உயர் அந்தணர்,
- மிக்குத்தூயோர், மேலானோர், என்றுமிருப்போர், பேரின்பத்தினை எவ்வமயமும் துய்ப்போர் -
- இவர்களன்றியும் எத்தனையோ பெருந்தகைகள்;
- உனது திருமேனி மற்றும் நாமத்தின் பெருமைகளையும், உனது வீரம் மற்றும் துணிவினையும், உனது அமைதியான மனம், மற்றும் நீ பகரும் சொற்களின் உறுதி (ஆகிய குணங்களை),
- உன்னிடம் நற்பற்று தோன்றுவதற்காக,
- தீய கோட்பாடுகளைப் பொய்யாக்கியது போலும் உனதுள்ளத்தினைத் தெரிந்து,
- மகிழ்வுடன், (உனது) பண்புகளை பத்திக் களிப்புடன் கீர்த்தனங்கள் செய்வோர் எத்தனையோ பெருந்தகைகள்;
- பாகவதம், இராமாயணம், கீதை மற்றும் மறைகள், சாத்திரங்கள், புராணங்கள் ஆகியவற்றின் உட்கருத்துக்கள்,
- சைவம் முதலான அறு மதங்களின் மருமங்கள், மற்றும்
- முப்பத்து முக்கோடி வானோரின் உள்ள இயல்பு, இவற்றினை அறிந்து,
- உணர்ச்சி, இராகம், தாளம் ஆகியவற்றின் சுகத்துடன்,
- நீண்ட ஆயுளுடைத்து, இடையறா இன்பம் நுகர்வோராகி,
- தியாகராசனுக்கு இனியோரானோர் எத்தனையோ பெருந்தகைகள்;
- காதல் மேலிடும் வேளை, (இறைவனின்) நாமத்தினையெண்ணுவோர்,
- இராமனின் தொண்டனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோனின் உண்மையான தொண்டரானோர் எத்தனையோ பெருந்தகைகள்;
அனைவருக்கும் வந்தனம்.
பதம் பிரித்தல் - பொருள்பல்லவிஎந்த
3ரோ/ மஹானுபா
4வுலு/-அந்த
3ரிகி/ வந்த
3னமு/
எத்தனையோ/ பெருந்தகைகள்/ அனைவருக்கும்/ வந்தனம்/
அனுபல்லவிசந்த்
3ர/ வத
3னுனி/-அந்த
3/ சந்த
3முனு/
மதி/ முகத்தோனின்/ எழிலையும்/ ஒயிலையும்/
ஹ்ரு
2த
3ய/-அரவிந்த
3முன/ ஜூசி/
(தமது) இதய/ கமலத்தினிற்/ கண்டு/
ப்
3ரஹ்மானந்த
3மு/-அனுப
4விஞ்சு வாரு/-(எந்த
3ரோ)
பேரின்பம்/ துய்ப்போர்/ எத்தனையோ...
சரணம்சரணம் 1
ஸாம/ கா
3ன/ லோல/ மனஸிஜ/ லாவண்ய/
சாம/ கானத்தினில்/ திளைப்போனே/ மன்மதனின்/ எழிலோனே/
த
4ன்ய/ மூர்த
4ன்யுலு/-(எந்த
3ரோ)
பேறுடைத்த/ தலைசிறந்தோர்/ எத்தனையோ...
சரணம் 2
மானஸ/ வன/ சர/ வர/ ஸஞ்சாரமு ஸலிபி/
மனமெனும்/ வனத்தில்/ சரிப்போனுடன் சரித்து/
மூர்தி/ பா
3கு
3க
3/ பொட
3க
3னே வாரு-(எந்த
3ரோ)
(அவன்) உருவத்தினை/ நன்கு/ தரிசிப்போர்/ எத்தனையோ...
சரணம் 3
ஸரகு
3ன/ பாத
3முலகு/ ஸ்வாந்தமு/-அனு/
அவ்வமயமே/ (அவனது) திருவடிகளில்/ (தனது) இதயம்/ எனும்/
ஸரோஜமுனு/ ஸமர்பணமு/ ஸேயு வாரு/-(எந்த
3ரோ)
கமலத்தினை/ சமர்ப்பணம்/ செய்வோர்/ எத்தனையோ...
சரணம் 4
பதித/ பாவனுடு
3/-அனே/ பராத்பருனி/ கு
3ரிஞ்சி/
வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோன்/ எனும்/ பரம்பொருளினை/ குறித்து/
பரம-அர்த
2மகு
3/ நிஜ/ மார்க
3முதோனு/
மெய்யறிவு சேர்க்கும்/ உண்மையான/ நெறியுடன்/
பாடு
3சுனு/ ஸல்லாபமுதோ/
பாடிக்கொண்டு/ களிப்புடன்/
ஸ்வர/ லய/-ஆதி
3/ ராக
3முலு/ தெலியு வாரு/-(எந்த
3ரோ)
சுரம்/ (மற்றும்) லயத்தினில்/ பிறக்கும்/ இராகங்களை/ யறிவோர்/ எத்தனையோ...
சரணம் 5
ஹரி/ கு
3ண/ மணி/-மய/ ஸரமுலு/ க
3ளமுன/
அரியின்/ குணங்களெனும்/ மணி/ மயமான/ சரங்கள்/ தொண்டையினில்/
ஸோ
1பி
4ல்லு/ ப
4க்த கோடுலு/-இலலோ/
துலங்கும்/ சீரிய தொண்டர்கள்/ இப்புவியினில்/
தெலிவிதோ/ செலிமிதோ/ கருண/ கல்கி
3/
தெருட்சியுடனும்/ அன்புடனும்/ கருணை/ கொண்டு/
ஜக
3மு/-எல்லனு/ ஸுதா
4/ த்
3ரு
2ஷ்டிசே/ ப்
3ரோசு வாரு/-(எந்த
3ரோ)
புவி/ யனைத்தினையும்/ அமிழ்த/ பார்வையினால்/ காப்போர்/ எத்தனையோ...
சரணம் 6
ஹொயலு/ மீர/ நட
3லு/ கல்கு
3/ ஸரஸுனி/
ஒயில்/ மிஞ்சும்/ நடை/ யுடை/ அழகனை/
ஸதா
3/ கனுல/ ஜூசுசுனு/ புலக ஸ
1ரீருலை/
எவ்வமயமும்/ கண்ணால்/ கண்டுகொண்டு/ மெய்ப் புல்லரிக்க/
ஆனந்த
3/ பயோதி
4/ நிமக்
3னுலை/
ஆனந்த/ கடலில்/ மூழ்கி/
முத
3ம்பு
3னனு/ யஸ
1மு/ கல வாரு/-(எந்த
3ரோ)
களிப்புடன்/ புகழ்/ பெற்றோர்/ எத்தனையோ...
சரணம் 7
பரம/ பா
4க
3வத/ மௌனி வர/ ஸ
1ஸி
1/
உயர்/ பாகவதர்களாகிய/ சிறந்த முனிவர்கள்/ சந்திரன்/
விபா
4-கர/ ஸனக/ ஸனந்த
3ன/
சூரியன்/ சனகர்/ சனந்தனர்/
தி
3க்/-ஈஸ
1/ ஸுர/ கிம்புருஷ/ கனக/ கஸி
1பு/
திசை/ மன்னர்கள்/ வானோர்/ கிம்புருடர்/ இரணிய/ கசிபுவின்/
ஸுத/ நாரத
3/ தும்பு
3ரு/
மைந்தன்/ நாரதர்/ தும்புரு/
பவன/ ஸூனு/ பா
3ல/ சந்த்
3ர/ த
4ர/ ஸு
1க/
வாயு/ மைந்தன்/ இளம்/ பிறை/ யணிவோன்/ சுகர்/
ஸரோஜ ப
4வ/ பூ
4-ஸுர வருலு/
மலரோன்/ உயர் அந்தணர்/
பரம/ பாவனுலு/ க
4னுலு/ ஸா
1ஸ்
1வதுலு/
மிக்கு/ தூயோர்/ மேலானோர்/ என்றுமிருப்போர்/
கமல ப
4வ ஸுக
2மு/ ஸதா
3/-அனுப
4வுலு/ கா
3க/-(எந்த
3ரோ)
பேரின்பத்தினை/ எவ்வமயமும்/ துய்ப்போர்/ - (இவர்கள்) அன்றியும்/ எத்தனையோ...
சரணம் 8
நீ/ மேனு/ நாம/ வைப
4வம்பு
3லனு/
உனது/ திருமேனி/ (மற்றும்) நாமத்தின்/ பெருமைகளையும்/
நீ/ பராக்ரம/ தை
4ர்யமுல/
உனது/ வீரம்/ (மற்றும்) துணிவினையும்/
ஸா
1ந்த/ மானஸமு/ நீவுலு/-அனு/
(உனது) அமைதியான/ மனம்/ (மற்றும்) நீ/ பகரும்/
வசன/ ஸத்யமுனு/ ரகு
4வர/ நீயெட
3/
சொற்களின்/ உறுதி/ (ஆகிய குணங்களை), இரகுவரா/ உன்னிடம்/
ஸத்
3-ப
4க்தியு/ ஜனிஞ்சகனு/ து
3ர்/-மதமுலனு/
நற்பற்று/ தோன்றுவதற்காக/ தீய/ கோட்பாடுகளை/
கல்ல/ ஜேஸின/-அட்டி/ நீ/ மதி
3னி/-
பொய்/ ஆக்கியது/ போலும்/ உனது/ உள்ளத்தினை/
எரிங்கி
3/ ஸந்தஸம்பு
3னனு/ கு
3ண/
தெரிந்து/ மகிழ்வுடன்/ (உனது) பண்புகளை/
ப
4ஜன/-ஆனந்த
3/ கீர்தனமு/ ஸேயு வாரு/-(எந்த
3ரோ)
பத்தி/ களிப்புடன்/ கீர்த்தனங்கள்/ செய்வோர்/ எத்தனையோ...
சரணம் 9
பா
4க
3வத/ ராமாயண/ கீ
3த/-ஆதி
3/
பாகவதம்/ இராமாயணம்/ கீதை/ மற்றும்/
ஸ்
1ருதி/ ஸா
1ஸ்த்ர/ புராணபு/
மறைகள்/ சாத்திரங்கள்/ புராணங்கள்/ (ஆகியவற்றின்)
மர்மமுலனு/ ஸி
1வ/-ஆதி
3/ ஷண்-/மதமுல/
உட்கருத்துக்கள்/ சைவம்/ முதலான/ அறு/ மதங்களின்/
கூ
3ட
4முலனு/ முப்பதி
3/ முக்கோடி/
மருமங்கள்/ (மற்றும்) முப்பத்து/ முக்கோடி/
ஸுர/-அந்தரங்க
3முல/ பா
4வம்பு
3லனு/
வானோரின்/ உள்ள/ இயல்பு/ (இவற்றினை)
எரிங்கி
3/ பா
4வ/ ராக
3/ லய/-ஆதி
3/ ஸௌக்
2யமுசே/
அறிந்து/ உணர்ச்சி/ இராகம்/ தாளம்/ ஆகியவற்றின்/ சுகத்துடன்/
சிர-/ஆயுவுல்/ கல்கி
3/ நிரவதி
4/ ஸுக
2/-ஆத்முலை/
நீண்ட/ ஆயுள்/ உடைத்து/ இடையறா/ இன்பம்/ நுகர்வோராகி/
த்யாக
3ராஜ/-ஆப்துலு/-ஐன வாரு/-(எந்த
3ரோ)
தியாகராசனுக்கு/ இனியோர்/ ஆனோர்/ எத்தனையோ...
சரணம் 10
ப்ரேம/ முப்பிரிகொனு/ வேள/
காதல்/ மேலிடும்/ வேளை/
நாமமு/ தலசே வாரு/
(இறைவனின்) நாமத்தினை/ யெண்ணுவோர்/
ராம/ ப
4க்துடை
3ன/ த்யாக
3ராஜ/
இராமனின்/ தொண்டனாகிய/ தியாகராசனால்/
நுதுனி/ நிஜ/ தா
3ஸுலு/-ஐன வாரு/-(எந்த
3ரோ)
போற்றப் பெற்றோனின்/ உண்மையான/ தொண்டர்/ ஆனோர்/ எத்தனையோ...
குறிப்புக்கள் - (Notes)வேறுபாடுகள் - (Pathanthara)
பொது - சில புத்தகங்களில் சரணம் 1 முதல் 9 வரை ஸ்வர ஸாஹித்யங்களாகவும், 10-வது சரணம் மட்டும் சரணமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது
1 -
சந்த்3ர வத3னுனி - சந்து
3ரு வர்ணுனி - 'சந்து
3ரு வர்ண' என்றால் 'மதிபோலும் வெண்ணிறத்தோன்' என்று பொருளாகும். இறைவனின் (விஷ்ணு) நிறம் கருநீலம் எனப்படும். தியாகராஜர், எந்தவொரு பாடலிலும், இறைவனை 'வெண்ணிறத்தோன்' என்று குறிப்பிட்டது கிடையாது. அதனால் 'சந்த்
3ர வத
3னுனி' (மதி முகத்தோன்) என்பதுதான் சரியாகும்.
2 -
ஸலிபி - நிலிபி : 'ஸலிபி' என்றால் 'செய்து' என்றும் 'நிலிபி' என்றால் 'நிறுத்தி' என்றும் பொருள். இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இறைவன், அனைத்து உயிர்களிலும் உறைவதனை 'சரித்தல்' என்று கூறுவர். அதைத்தான் 'மானஸ வன சர' என்ற சொற்களிகனால் 'மனமெனும் வனத்தில் சரிப்போன்' என்று கூறி, அவன் (இறைவன்) 'உடன் சரித்து' எனபதனை 'ஸஞ்சரிஞ்சி' என்றோ 'ஸஞ்சாரமு ஸலிபி' (உடன் சரித்தல் மேற்கொண்டு) என்று பொருள்பட இச்சரணம் இயற்றப்பட்டுள்ளது. இதனை 'மனம் அலைவதனை நிறுத்தி' என்று பொருள்பட 'நிலிபி' என்று சில புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படி 'நிலிபி' சரியென்றால் 'வர ஸஞ்சாரமு' என்ற சொற்களில் 'வர' என்ற சொல்லுக்குப் பொருள் கூறவியலாது. 'மன அலைச்சலை நிறுத்தல்' என்பது நம்போன்றோருக்குப் பொருந்துமேயன்றி, பெருந்தகைகளுக்குப் பொருந்தாது. அவர்கள் முன்பே அந்நிலையினைக் கடந்துதான் 'பெருந்தகையினர்' ஆகினர். இப்பாடல் பெருந்தகைகளைப் புகழ்ந்து இயற்றப்பெற்ற பாடல். எனவே 'நிலிபி' என்பது தவறாகும்.
இறைவனுடன் சரித்து, அவனுடைய உருவத்தினை தரிசித்த, பெரியோர்களே 'ஸஞ்சாரம்' என்ற சொல்லின் உட்கருத்தினைப் பகரவல்லர். நான் அதற்குத் தகுதி பெறாமையால், இங்கு கூறப்பட்டவை வெறும் வார்த்தை ஜாலங்களே. அதற்கு மன்னிக்கவும்.
Top10 -
ஸந்தஸம்பு3னனு - ஸந்ததம்பு
3னனு : இவ்விடத்தில் 'ஸந்தஸம்பு
3னனு' என்பது சரியான சொல்லாகும்.
14 -
தலசே - தலசு
Topமேற்கோள்கள்11 -
ஷண்மதமுல - அறுமதம் - அரன், அரி, சத்தி, கணபதி, முருகன், சூரியன் ஆகியோரின் வழிபாடு
12 -
முப்பதி3 முக்கோடி - 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், 2 அசுவினியர் - ஆக 33 என்பதனை 33 கோடி என்பர்.
Topவிளக்கம்3 -
ஸரகு3ன - 2 மற்றும் 3-வது சரணங்களைச் சேர்த்தே பொருள் கொள்ளவேண்டும்.
4 -
பாத3முலகு ஸமர்பணமு - இறைவனை உள்ளத்தினில் தரிசிப்பதுவும், ஓர் அகந்தைக்குறிய செயலாகும். அங்ஙனம், 'நான் தரிசித்தேன்' என அகந்தை கொள்வதற்கு இடமின்றி, அந்த பேற்றினையும் அவனுடைய திருவடிகளில் சமர்ப்பிப்பதுவே, உண்மைத் தொண்டனின் உள்ளப்பாங்காகும்.
5 -
பரமார்த2மகு3 நிஜ மார்க3முதோனு - தியாகராஜர், தனது 'ஸொக
3ஸுகா
3 ம்ரு
2த
3ங்க
3 தாளமு' என்ற பாடலில் உண்மையான கீர்த்தனத்தின் இலக்கணம் என்னவென்று விவரிக்கின்றார்.
Top6 -
ஹரி கு3ண மணி-மய ஸரமுலு க3ளமுன - 'க
3ளமு' என்ற சொல்லுக்கு 'கழுத்து', 'தொண்டை', 'குரல்' என்று என்று பொருளாகும். இங்கு, தியாகராஜர், இறைவனின் 'குணங்களெனும் பட்டியலை' 'மணிமயமான சரங்கள்' என்று கூறி, அவை குரலில் ஒலிப்பதை, 'க
3ளமுன' என்று கூறுகின்றார்.
7 -
ஸரஸுனி - இச்சொல் 'அழகன்' என்று மொழி பெயர்க்கப்பட்டாலும், சாரத்திற்கும் சாரமான, பரம்பொருளினை 'ஸரஸ' என்றும் கூறலாம்.
8 -
பரம பா4க3வத மௌனி வர - இதனை 'பரம பா
4க
3வத' மற்றும் 'மௌனி வர' என்று இரண்டாகவும் பிரிக்கலாம். ஆனால் இவற்றிற்கு சேர்த்தே பொருள் கூறுவது பொருந்தும் எனக் கருதுகின்றேன்.
Top9 -
து3ர்மதமுலனு கல்ல ஜேஸினட்டி - பக்தி நெறி ஒன்றே சிறந்தது என்பது தியாகராஜரின் கோட்பாடு. மேற்கூறப்பட்ட, அறு மதங்களுக்கும் பக்தி நெறி பொதுவானதாகையால் இங்கு 'து
3ர்மத' (தீய கோட்பாடுகள்) என்பது அந்த அறு மதங்களைக் குறிக்காது.
தியாகராஜர், வால்மீகி ராமாயணம், யுத்த காண்டத்தில் (அத்தியாயம் 18), ராமன், விபீடணனுக்குப் புகலளிப்பது குறித்து, பகன்ற சொற்களையும், கீதையில், 18-வது அத்தியாயத்தில், கண்ணன் கூறியதனையும் வற்புறுத்துவதாகத் தோன்றுகின்றது.
ராமன் உரைத்தது
"என்னிடம் ஒரு முறையாகிலும் 'நான் உன்னவன்' என்று புகல் கோரி எவன் வருகின்றானோ அவனுக்கு அனைத்து உயிர்களிடமிருந்தும் பாதுகாப்பு அளிப்பது எனது விரதமாகும்." (33)
கண்ணன் உரைத்தது
"அனைத்து தருமங்களையும் துறந்து, என்னிடம் சரணடைவாயாக; நான் அனைத்து பாவங்களிலிருந்தும் உன்னை மீட்கின்றேன்; வருந்தாதே." (66) (ஸ்வாமி ஸ்வரூபானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
13 -
பா4வ ராக3 லய - 'பா
4வ' என்ற சொல்லுக்கு 'மனநிலை', 'உணர்ச்சி' என்று பொருளாகும். தியாகராஜரின் கிருதிகளைப் பாடுவோர், அவருடைய அந்த 'பா
4வ'-த்தினை உணராது, வெறும் ராகம், லயத்தோடு மட்டும் பாடுவது, திருக்குறளில் கூறியபடி, 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'.
Topசாமகானம் - சாமம் எனும் மறையோதுதல்
மனமெனும் வனத்தில் சரிப்போன் - இறைவன்
சரித்தல் - நடத்தல்
உடன் சரித்தல் - அவனது தியானத்தில் மூழ்குதல்
சமர்ப்பணம் - ஒப்புக்கொடுத்தல்
மணிமயமான சரங்கள் - இறைவனின் குணங்களெனும் பட்டியல்
தொண்டையினில் துலங்கும் - இசையாக ஒலிக்கும்
(இது நாரதர் போன்றோரைக் குறிக்கும்)
கிம்புருடர் - குபேரனைச் சேர்ந்தோர்
இரணியகசிபுவின் மைந்தன் - பிரகலாதன்
தும்புரு - வானோரின் பாணர்
வாயு மைந்தன் - அனுமன்
இளம் பிறையணிவோன் - சிவன்
Top
Updated on 28 Mar 2009