க3ருட3 க3மன வாஸுதே3வ
கருணதோனு ப்3ரோவு நன்னு
அனுபல்லவி
பருலன்ன மாடல தாளனு
1பரமாத்முடு3 பரம த3யாளோ (க3)
சரணம்
த்3ருபத3 ஸுதாயிப4 ராஜுடு3
த்4ருவ பா3லுடு3 மொரிலிட3 வினி
க்3ரக்குன வெட3லின 2முச்சட
க்3ரம்மிதி த்யாக3ராஜ நுத (க3)
பொருள் - சுருக்கம்
கருடன்மேல் செல்லும் வாசுதேவா! பரம்பொருளே! பரம தயாளா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- துருபதன் மகள், கரியரசன், சிறுவன் துருவன் முறையிட, விரைவில் எழுந்தருளிய செயதியைச் செவிமடுத்துப் பெருமிதமுற்றேன்.
- பிறர் பகன்ற சொற்களைத் தாளேன்.
- கருணையுடன் காப்பாயென்னை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க3ருட3/ க3மன/ வாஸுதே3வ/
கருடன்மேல்/ செல்லும்/ வாசுதேவா/
கருணதோனு/ ப்3ரோவு/ நன்னு/
கருணையுடன்/ காப்பாய்/ என்னை/
அனுபல்லவி
பருலு/-அன்ன/ மாடல/ தாளனு/
பிறர்/ பகன்ற/ சொற்களை/ தாளேன்/
பரமாத்முடு3/ பரம/ த3யாளோ/ (க3)
பரம்பொருளே/ பரம/ தயாளா/
சரணம்
த்3ருபத3/ ஸுதா/-இப4/ ராஜுடு3/
துருபதன்/ மகள்/ கரி/ யரசன்/
த்4ருவ/ பா3லுடு3/ மொரிலு-இட3/ வினி/
துருவன்/ சிறுவன்/ முறையிட/ செவிமடுத்து/
க்3ரக்குன/ வெட3லின/ முச்சட/
விரைவில்/ எழுந்தருளிய/ செயதியை/
க்3ரம்மிதி/ த்யாக3ராஜ/ நுத/ (க3)
பெருமிதமுற்றேன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
திரு கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில் இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பட்டதல்லவென்று நம்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
1 - பரமாத்முடு3 - மற்ற சொற்கள் முன்னிலையில் இருக்க, இச்சொல் மட்டும் படர்க்கையிலுள்ளது.
2 - முச்சட க்3ரம்மிதி - இச்சொற்களினால் வாக்கியம் முழுமை பெறவில்லை. எனவே 'வினி' (மொரிலிட3 வினி) என்ற சொல் இங்கு சேர்க்கப்பட்டது (முச்சட வினி க்3ரம்மிதி)
துருபதன் மகள் - துரோபதை
கரியரசன் - கஜேந்திரன்
Top
Updated on 30 Mar 2009
No comments:
Post a Comment