Thursday, March 19, 2009

தியாகராஜ கிருதி - எவரைன லேரா - ராகம் ஸித்3த4 ஸேன - Evaraina Leraa - Raga Siddha Sena

பல்லவி
எவரைன லேரா பெத்33லு
இலலோன தீ3னுல 1ப்3ரோவ

அனுபல்லவி
4வ ஸாக3ரமுன 2சரிஞ்சு
3லு கா3ஸி ராமுனிதோ தெலுப (எ)

சரணம்
கலி மானவாத4முல 3கார்யமுலு
4காம மத்ஸராது3 க்ரு2த்யமுலு
சல சித்தமு லேனி வாரிபுடு3
சால த்யாக3ராஜ நுதினிதோ தெலுப (எ)


பொருள் - சுருக்கம்
  • யாராகிலும் இலரோ, பெரியோர், இவ்வுலகில், எளியோரைக் காக்க?

  • பிறவிக் கடலில் காணப்படும் பெருந்துயரினை இராமனிடம் தெரிவிக்க, யாராகிலும் இலரோ, பெரியோர்?

    • கலி(யுக) மனிதரில் இழிந்தோரின் செயல்களினை,

    • இச்சை, காழ்ப்புடைத்தோரின் நடத்தைகளினை,

  • இவ்வமயம், தியாகராசனால் போற்றப் பெற்றோனிடம் விவரமாகத் தெரிவிக்க, கலக்கமற்ற மனத்தோர் யாராகிலும் இலரோ, பெரியோர்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரைன/ லேரா/ பெத்33லு/
யாராகிலும்/ இலரோ/ பெரியோர்/

இலலோன/ தீ3னுல/ ப்3ரோவ/
இவ்வுலகில்/ எளியோரை/ காக்க/


அனுபல்லவி
4வ/ ஸாக3ரமுன/ சரிஞ்சு/
பிறவி/ கடலில்/ காணப்படும் (உலவும்)/

3லு/ கா3ஸி/ ராமுனிதோ/ தெலுப/ (எ)
பெரும்/ துயரினை/ இராமனிடம்/ தெரிவிக்க/ யாராகிலும்...


சரணம்
கலி/ மானவ/-அத4முல/ கார்யமுலு/
கலி(யுக)/ மனிதரில்/ இழிந்தோரின்/ செயல்களினை/

காம/ மத்ஸர-ஆது3ல/ க்ரு2த்யமுலு/
இச்சை/ காழ்ப்புடைத்தோரின்/ நடத்தைகளினை/

சல/ சித்தமு/ லேனி வாரு/-இபுடு3/
கலக்க/ மனம்/ அற்றோர்/ இவ்வமயம்/

சால/ த்யாக3ராஜ/ நுதினிதோ/ தெலுப/ (எ)
விவரமாக (மிக்கு)/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனிடம்/ தெரிவிக்க/ யாராகிலும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோவ - ப்3ரோவனு

2 - சரிஞ்சு - சரிஞ்சே

3 - கார்யமுலு - கார்யமுல்

Top

மேற்கோள்கள்

விளக்கம்
4 - காம மத்ஸராது3 - 'காம மத்ஸர ஆது3ல' - பொதுவாக, 'ஆது3ல' என்ற சொல் 'ஆகியவற்றின்' என்று பொருள்படும். ஆனால், இவ்விடத்தில் இதற்கு 'உடைத்தோரின்' - (காமம், காழ்ப்புடைத்தோரின்) என்று பொருளாகும்.

தியாகராசனால் போற்றப் பெற்றோன் - இராமனைக் குறிக்கும்

Top


Updated on 19 Mar 2009

No comments: