பல்லவி
ஸுகி2யெவரோ ராம நாம ஸுகி2யெவரோ
அனுபல்லவி
ஸுகி2யெவரோ ஸு-முகி2யெவரோ
அகி2ல ஸாரமகு3 1தாரக நாம (ஸு)
சரணம்
ஸத்யமு தப்பக3 ஸகல லோகுலகு
2ப்4ரு2த்யுடை3 தை3வ பே4த3மு லேக
நித்யமைன ஸு-ஸ்வரபு கா3னமுதோ
நிரந்தரமு 3த்யாக3ராஜ நுத நாம (ஸு)
பொருள் - சுருக்கம்
களித்திருப்பவர் எவரோ? இன்முகத்தோர் எவரோ?
அனைத்திற்கும் சாரமான தாரக இராமா நாமத்தில் களித்திருப்பவர் எவரோ?
உண்மை தவறாது, எல்லாவர்க்கும் தொண்டனாகி, இறை வேற்றுமையின்றி, நிலையான இனிய (ஏழ்) பதங்களின் இசையுடன், இடையறாது, தியாகராசனால் போற்றப்பெற்றோனின் நாமத்தினில் களித்திருப்பவர் எவரோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுகி2/-எவரோ/ ராம/ நாம/ ஸுகி2/-எவரோ/
களித்திருப்பவர்/ எவரோ/ இராம/ நாமத்தில்/ களித்திருப்பவர்/ எவரோ/
அனுபல்லவி
ஸுகி2/-எவரோ/ ஸு-முகி2/-எவரோ/
களித்திருப்பவர்/ எவரோ/ இன்முகத்தோர்/ எவரோ/
அகி2ல/ ஸாரமகு3/ தாரக/ நாம/ (ஸு)
அனைத்திற்கும்/ சாரமான/ தாரக/ நாமத்தில்/ களித்திருப்பவர்...
சரணம்
ஸத்யமு/ தப்பக3/ ஸகல லோகுலகு/
உண்மை/ தவறாது/ எல்லாவர்க்கும்/
ப்4ரு2த்யுடை3/ தை3வ/ பே4த3மு/ லேக/
தொண்டனாகி/ இறை/ வேற்றுமை/ இன்றி/
நித்யமைன/ ஸு-ஸ்வரபு/ கா3னமுதோ/
நிலையான/ இனிய (ஏழ்) பதங்களின்/ இசையுடன்/
நிரந்தரமு/ த்யாக3ராஜ/ நுத/ நாம/ (ஸு)
இடையறாது/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனின்/ நாமத்தினில்/ களித்திருப்பவர்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ப்4ரு2த்யுடை3 - ப்4ரு2த்யுடை3ன : இவ்விடத்தில், 'ப்4ரு2த்யுடை3' பொருந்தும்.
3 - த்யாக3ராஜ நுத நாம - த்யாக3ராஜ நுத
மேற்கோள்கள்
1 - தாரக நாம - தாரக நாமம் - பிறவிக்கடலை கடத்துவிக்கும் 'ராம' நாமம் - காஞ்சி மாமுனிவரின் விளக்குவுரை நோக்கவும்.
விளக்கம்
தியாகராசனால் போற்றப்பெற்றோன் - இராமன்
Top
Updated on 04 Jan 2009
No comments:
Post a Comment