Sunday, January 4, 2009

தியாகராஜ கிருதி - மனவினி வினுமா - ராகம் ஜய நாராயணி - Tyagaraja Kriti - Manavini Vinumaa - Raga Jaya Narayani

பல்லவி
மனவினி வினுமா மரவ ஸமயமா

அனுபல்லவி
கனுகொ3ன கோரி து3ஷ்கல்பன மானிதி
கனிகரமுன நினு பாடு3(சு)ன்ன நா (ம)

சரணம்
1பருலகு ஹிதமகு3 பா4வன கானி
செரசு மார்க3முல சிந்திம்ப லேனு
பரம த3யாகர ப4க்த மனோஹர
4(ரா)தி4ப க(ரா)ர்சித த்யாக3ராஜு (ம)


பொருள் - சுருக்கம்
மிக்கு தயையுடையோனே! தொண்டர் மனம் கவர்ந்தோனே! புவியாள்வோர் கைகளால் தொழப்பெற்றோனே!

எனது வேண்டுகோளைக் கேட்பாயய்யா; மறக்கத் தருணமா?
(உன்னைக்) காண வேண்டி, தீய கற்பனைகளைக் கைவிட்டேன்;
உன்னைப் பாடிக் கொண்டிருக்குமெனது வேண்டுகோளை கனிவுடன் கேட்பாயய்யா.
பிறருக்கு நன்மை செய்யும் எண்ணமேயன்றி, (அவர்களுக்கு) ஊறு செய்யும் வழிகளைக் கருதவில்லை;

தியாகராசனின் வேண்டுகோளைக் கேட்பாயய்யா.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனவினி/ வினுமா/ மரவ/ ஸமயமா/
வேண்டுகோளை/ கேட்பாயய்யா/ மறக்க/ தருணமா/


அனுபல்லவி
கனுகொ3ன/ கோரி/ து3ஷ்-கல்பன/ மானிதி/
(உன்னை) காண/ வேண்டி/ தீய கற்பனைகளை/ கைவிட்டேன்/

கனிகரமுன/ நினு/ பாடு3சு-உன்ன/ நா/ (ம)
கனிவுடன்/ உன்னை/ பாடிக் கொண்டிருக்கும்/ எனது/ வேண்டுகோளை...


சரணம்
பருலகு/ ஹிதமகு3/ பா4வன/ கானி/
பிறருக்கு/ நன்மை செய்யும்/ எண்ணமே/ யன்றி/

செரசு/ மார்க3முல/ சிந்திம்ப லேனு/
(அவர்களுக்கு) ஊறு செய்யும்/ வழிகளை/ கருதவில்லை/

பரம/ த3யாகர/ ப4க்த/ மனோஹர/
மிக்கு/ தயையுடையோனே/ தொண்டர்/ மனம்/ கவர்ந்தோனே/

4ர/-அதி4ப/ கர/-அர்சித/ த்யாக3ராஜு/ (ம)
புவி/ யாள்வோர்/ கைகளால்/ தொழப்பெற்றோனே/ தியாகராசனின்/ வேண்டுகோளை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பருலகு - ஒருலகு.

மேற்கோள்கள்

விளக்கம்
கனிவுடன் - இது இறைவனைக் குறிக்கும்
புவியாள்வோர் - மன்னர்கள்
Top


Updated on 05 Jan 2009

No comments: