Thursday, December 4, 2008

ப3ட3லிக தீர - ராகம் ரீதி கௌ3ள - Badalika Teera - Raga Reeti Gaula

பல்லவி
33லிக தீர பவ்வளிஞ்சவே

அனுபல்லவி
ஸட3லனி 1து3ரிதமுலனு தெக3 கோஸி
ஸார்வபௌ4ம ஸாகேத ராம (ப3)

சரணம்
பங்கஜாஸனுனி பரிதாபமு கனி
பங்கஜாப்த குல பதிவை வெலஸி
பங்கஜாக்ஷிதோ வனமுனகேகி3
ஜிங்கனு வதி4யிஞ்சி
மங்கு ராவணுனி மத3முனனணசி
2நிஸ்11ங்குட3கு3 விபீ4ஷணுனிகி 33ங்கா3ரு
லங்க
னொஸகி3 ஸுருல ப்3ரோசின
நிஷ்களங்க 4த்யாக3ராஜுனி ஹ்ரு23யமுன (ப3)


பொருள் - சுருக்கம்
உலகிற்கரசே! சாகேதராமா!
பங்கயத்திலமர்வோன் துயர் கண்டு, பங்கயத்திற்கினியோன் குல மன்னனாய் விளங்கி, பங்கயற்கண்ணியுடன் வனமடைந்து, (பொன்) மானை வதைத்து, கொடிய இராவணனின் செருக்கினையடக்கி, சங்கையற்ற விபீடணனுக்குப் பொன்னிலங்கையினை யளித்து, வானோரைக் காத்த களங்கமற்றோனே!
நெகிழாத (எனது முன்) வினைகளை அற வீழ்த்தி, தியாகராசனின் இதயத்தினில் களைப்புத்தீர பள்ளிகொள்வாயய்யா


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
33லிக/ தீர/ பவ்வளிஞ்சவே/
களைப்பு/ தீர/ பள்ளிகொள்வாயய்யா/


அனுபல்லவி
ஸட3லனி/ து3ரிதமுலனு/ தெக3/ கோஸி/
நெகிழாத/ வினைகளை/ அற/ வீழ்த்தி/

ஸார்வபௌ4ம/ ஸாகேத/ ராம/ (ப3)
உலகிற்கரசே/ சாகேத/ ராமா/ களைப்பு...


சரணம்
பங்கஜ/-ஆஸனுனி/ பரிதாபமு/ கனி/
பங்கயத்தில்/ அமர்வோன்/ துயர்/ கண்டு/

பங்கஜ/-ஆப்த/ குல/ பதிவை/ வெலஸி/
பங்கயத்திற்கு/ இனியோன்/ குல/ மன்னனாய்/ விளங்கி/

பங்கஜ/-அக்ஷிதோ/ வனமுனகு/-ஏகி3/
பங்கயற்/ கண்ணியுடன்/ வனம்/ அடைந்து/

ஜிங்கனு/ வதி4யிஞ்சி/
மானை/ வதைத்து/

மங்கு/ ராவணுனி/ மத3முனனு/-அணசி/
கொடிய/ இராவணனின்/ செருக்கினை/ யடக்கி/

நிஸ்11ங்குட3கு3/ விபீ4ஷணுனிகி/ ப3ங்கா3ரு/
சங்கையற்ற/ விபீடணனுக்கு/ பொன்/

லங்கனு/-ஒஸகி3/ ஸுருல/ ப்3ரோசின/
இலங்கையினை/ யளித்து/ வானோரை/ காத்த/

நிஷ்களங்க/ த்யாக3ராஜுனி/ ஹ்ரு23யமுன/ (ப3)
களங்கமற்றோனே/ தியாகராசனின்/ இதயத்தினில்/ களைப்பு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - து3ரிதமுலனு - து3ரிதமுனு - து3ரிதமுலு
4 - த்யாக3ராஜுனி ஹ்ரு23யமுன - த்யாக3ராஜ நுத ராம - பிற்குறிப்பிட்ட வேறுபாடு இவ்விடத்தில் பொருந்தாது

Top

மேற்கோள்கள்
3 - 3ங்கா3ரு லங்க - இலங்கையை பொன்னிலங்கை என்றழைப்பர். இது வானோர் சிற்பியான விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டதென புராணங்கள் கூறும். இதன் வடமொழிச்சொல்லான 'ஸ்வர்ண த்3வீபம்' (பொற்தீவு), 'ஸெரந்தீப்' என பாரசீக மொழியில் திரிபடைந்து, பின்னர் ஆங்கிலத்தில் 'serendip' என ஏற்கப்பட்டது. இதனின்று ஆங்கில வினைச்சொல் 'serendipity' முளைத்தது. ஸ்வர்ண த்3வீபம் - serendip - serendipity
Top

விளக்கம்
2 - நிஸ்11ங்குட3கு3 - சிறதும் ஐயமின்றி - விபீடணன் ராமனைப் பற்றி முன்பே அறிந்தவன். ராவணனுக்கு எத்தனையோ நல்லுரைகள் பகன்றும் ஏற்காகதது மட்டுமின்றி, அவனைத் தூற்றவே, விபீடணன், அறத்தினை நிலை நிறுத்த, ராமனிடம், சற்றும் ஐயமின்றி, புகலடைந்தான்.

இப்பாடல் அருணாசல கவிராயர் இயற்றிய 'ஏன் பள்ளி கொண்டீரய்யா ரங்கநாதா' என்ற பாடலை நினைவுக்குக் கொணர்கிறது.

பங்கயத்திலமர்வோன் - பிரமன்
பங்கயத்திற்கினியோன் - பரிதி
பங்கயற்கண்ணி - சீதை
சங்கை - ஐயம்
Top



Updated on 04 Dec 2008

No comments: