Friday, December 5, 2008

பா3லே பா3லேந்து3 - ராகம் ரீதி கௌ3ள - Baale Baalendu - Raga Reeti Gaula

பல்லவி
1பா3லே பா3லேந்து3 பூ4ஷணி
24வ ரோக31மனி

அனுபல்லவி
3பா2ல லோசனி ஸ்ரீ த4ர்ம ஸம்வர்த4னி
4ஸகல லோக ஜனனி (பா3)

சரணம்
சரணம் 1
ஸீ1லே நனு ரக்ஷிம்பனு
ஜாகே3லே பரம பாவனி ஸுகு3
ஜாலே நத ஜன பரிபாலன
லோலே கனக மய ஸு-
சேலே கால வைரிகி ப்ரியமைன
இல்லாலவையிந்து3 வெலஸினந்து3கு
ஸ்ரீ லலிதே நீ தனயுட3னி நனு
குஸா1லுகா3 பிலுவ வலெனம்ம (பா3)

சரணம் 2
ஸாரே 5ஸகல நிக3ம வன
ஸஞ்சாரே 6சபலா கோடி நிப4
1ரீரே தே3வதாங்க3னா
பரிவாரே பாமர ஜன
தூ3ரே 7கீர வாணி ஸ்ரீ 8பஞ்ச நத3 புர
விஹாரிவை வெலஸினந்து3கிக நா
நேர கோடுலனெல்ல ஸஹிஞ்சி
கா3ரவிம்ப வலெனம்ம 9ஸி1வே (பா3)

சரணம் 3
10ராமே ப்ரணதார்தி ஹராபி4-
ராமே 11தே3வ காமினீ
லலாமே த்யாக3ராஜ ப4ஜன ஸ-
காமே து3ர்ஜன க3
பீ4மே நா 12மனஸு நீ சரணமுல ஸதா3
13நேமமுதோ 14பூஜ ஸேயனி ஸ்ரீ
ராம ஸோத3ரிவை வெலஸின ஸ்ரீ
ஸ்1யாமளே த4ர்ம ஸம்வர்த4னி (பா3)


பொருள் - சுருக்கம்
பாலையே! பிறையணிபவளே! பிறவி நோயைத் தீர்ப்பவளே!
நெற்றிக் கண்ணாளே! அறம் வளர்த்த நாயகியே! பல்லுலகையு மீன்றவளே!
1. பண்பினளே! முற்றிலும் தூயவளே! நற்குணக் குவியலே!
பணிந்தோரைக் காப்பதில் ஊக்கமுள்ளவளே!
பொன்மயமான நல்லுடையணிபவளே! இலலிதையே!
2. சாரமானவளே! அனைத்து மறை வனங்களில் உறைபவளே!
மின்னல்கள் கோடி நிகர் உடலினளே! வான் மடந்தையர் பரிவாரத்தினளே!
தீயோரினின்று விலகி யுள்ளவளே! கிளி மொழியாளே! சிவையே!
3. எழிலியே! ஐயாறப்பருக்கு இனியவளே! வான் மடந்தையர் திலகமே!
தியாகராசனின் வழிபாட்டினை நிறைவேற்றுபவளே! கொடியோரை நடுங்கவைப்பவளே!
இராமனின் சோதரியாக விளங்கும் சியாமளையே! அறம் வளர்த்த நாயகியே!

என்னைக் காக்கத் தாமதமேன்?
நமன் பகைவனுக்குப் பிரியமான இல்லாளாக இங்கு விளங்கினமைக்கு, உனது மகவென என்னை மகிழ்வுடன் அழைக்கவேணுமம்மா;
திருவையாறு நகர் உறைபவளாக விளங்கினமைக்கு இனியெனது எண்ணிறந்த குற்றங்கள் யாவற்றையும் பொறுத்து பரிவு காட்ட வேணுமம்மா,
எனதுள்ளம் உனது திருவடிகளை எவ்வமயமும் நியமத்துடன் வழிபடட்டும்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பா3லே/ பா3ல-இந்து3/ பூ4ஷணி/
பாலையே/ பிறை/ அணிபவளே/

4வ/ ரோக3/ ஸ1மனி/
பிறவி/ நோயை/ தீர்ப்பவளே/


அனுபல்லவி
பா2ல/ லோசனி/ ஸ்ரீ/ த4ர்ம/ ஸம்வர்த4னி/
நெற்றி/ கண்ணாளே/ திரு/ அறம்/ வளர்த்த நாயகியே/

ஸகல லோக/ ஜனனி/ (பா3)
பல்லுலகையும்/ ஈன்றவளே/


சரணம்
சரணம் 1
ஸீ1லே/ நனு/ ரக்ஷிம்பனு/
பண்பினளே/ என்னை/ காக்க/

ஜாகு3/-ஏலே/ பரம/ பாவனி/ ஸுகு3ண/
தாமதம்/ ஏன்/ முற்றிலும்/ தூயவளே/ நற்குண/

ஜாலே/ நத ஜன/ பரிபாலன/
குவியலே/ பணிந்தோரை/ காப்பதில்/

லோலே/ கனக/ மய/
ஊக்கமுள்ளவளே/ பொன்/ மயமான/

ஸு-சேலே/ கால/ வைரிகி/ ப்ரியமைன/
நல்லுடையணிபவளே/ நமன்/ பகைவனுக்கு/ பிரியமான/

இல்லாலவை/-இந்து3/ வெலஸின-அந்து3கு/
இல்லாளாக/ இங்கு/ விளங்கினமைக்கு/

ஸ்ரீ லலிதே/ நீ/ தனயுடு3/-அனி/ நனு/
ஸ்ரீ லலிதே/ உனது/ மகவு/ என/ என்னை/

குஸா1லுகா3/ பிலுவ/ வலெனு/-அம்ம/ (பா3)
மகிழ்வுடன்/ அழைக்க/ வேணும்/ அம்மா/


சரணம் 2
ஸாரே/ ஸகல/ நிக3ம/ வன/
சாரமானவளே/ அனைத்து/ மறை/ வனங்களில்/

ஸஞ்சாரே/ சபலா/ கோடி/ நிப4/
உறைபவளே/ மின்னல்கள்/ கோடி/ நிகர்/

1ரீரே/ தே3வதா/-அங்க3னா/
உடலினளே/ வான்/ மடந்தையர்/

பரிவாரே/ பாமர ஜன/
பரிவாரத்தினளே/ தீயோரினின்று/

தூ3ரே/ கீர/ வாணி/ ஸ்ரீ பஞ்ச நத3/ புர/
விலகியுள்ளவளே/ கிளி/ மொழியாளே/ திருவையாறு/ நகர்/

விஹாரிவை/ வெலஸின-அந்து3கு/-இக/ நா/
உறைபவளாக/ விளங்கினமைக்கு/ இனி/ எனது/

நேர/ கோடுலனு/-எல்ல/ ஸஹிஞ்சி/
குற்றங்கள்/ எண்ணிறந்த/ யாவற்றையும்/ பொறுத்து/

கா3ரவிம்ப/ வலெனு/-அம்ம/ ஸி1வே/ (பா3)
பரிவு காட்ட/ வேணும்/ அம்மா/ சிவையே/


சரணம் 3
ராமே/ ப்ரணத/-ஆர்தி/ ஹர/-
எழிலியே/ பணிந்தோர்/ துயர்/ களைவோனுக்கு/

அபி4-ராமே/ தே3வ/ காமினீ/
இனியவளே/ வான்/ மடந்தையர்/

லலாமே/ த்யாக3ராஜ/ ப4ஜன/
திலகமே/ தியாகராசனின்/ பஜனையை/

ஸ-காமே/ து3ர்ஜன க3ண/
நிறைவேற்றுபவளே/ கொடியோரை/

பீ4மே/ நா/ மனஸு/ நீ/ சரணமுல/
நடுங்கவைப்பவளே/ எனது/ உள்ளம்/ உனது/ திருவடிகளை/

ஸதா3/ நேமமுதோ/ பூஜ/ ஸேயனி/
எவ்வமயமும்/ நியமத்துடன்/ பூஜை/ செய்யட்டும்/

ஸ்ரீ ராம/ ஸோத3ரிவை/ வெலஸின/
ஸ்ரீ ராமனின்/ சோதரியாக/ விளங்கும்/

ஸ்ரீ ஸ்1யாமளே/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ (பா3)
ஸ்ரீ சியாமளையே/ அறம்/ வளர்த்த நாயகியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - 4வ ரோக31மனி - ப4வ ரோக31மனி அம்ப3
6 - சபலா - சபல
12 - மனஸு - மனஸுன
13 - நேமமுதோ - நேமமுன
14 - பூஜ ஸேயனி - பூஜ ஸேய - பூஜ ஜேஸிதினி :'மனஸு' சரியென்றால் 'பூஜ ஸேயனி' பொருந்தும்; அன்றி 'மனஸுன' சரியென்றால் 'பூஜ ஜேஸிதினி' பொருந்தும்; 'பூஜ ஸேய' தவறாகும்.

Top

மேற்கோள்கள்
1 - பா3லே - பாலை - 16 வயதுக்குட்பட்ட பெண்
4 - ஸகல லோக - பதினான்கு உலகங்கள் - கீழுலகம் 7 - மேலுலகம் 7.
8 - பஞ்ச நத3 - திருவையாற்றினை சூழ்ந்து காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து நதிகள் பாய்கின்றன.

Top

விளக்கம்
3 - பா2ல லோசனி - லலிதா பரமேஸ்வரிக்கு நெற்றிக்கண் உண்டு
5 - ஸகல நிக3ம வன - 'வன' என்பதற்கு 'அனேக' என்றும் 'காடு' என்றும் பொருள். இங்கு முன் வரும் சொல் 'ஸகல' (அனைத்து) இருப்பதனால், 'வன'த்திற்கு 'காடு' என்ற பொருள் கொள்ளப்பட்டது.
7 - கீர வாணி -கிளிச்சொல்லினள் - கீரவாணியெனப்படும் ராகமாகவும் கொள்ளலாம்
9 - ஸி1வே - லலிதா பரமேஸ்வரிக்கு 'ஸிவா' என்றோர் பெயர்
10 - ராமே - இதனை 'கருநீல மேனியுடையவள்' என்றும் பொருள் கொள்ளலாம்.
11 - தே3வ காமினீ - வான் மடந்தையர் - இங்கு இலக்குமி, பார்வதி, வாணி ஆகியோரைக் குறிக்கும்
நமன் பகைவன் - சிவன்

Top


Updated on 05 Dec 2008

No comments: