Wednesday, December 3, 2008

பரிபாலய பரிபாலய - ராகம் ரீதி கௌ3ள - Paripaalaya paripaalaya - Raga Reeti Gaula

1பல்லவி
பரிபாலய பரிபாலய பரிபாலய ரகு4 நாத2

சரணம்
சரணம் 1
தனுவே நீகனுவைன ஸத3னமௌரா ரகு4 நாத2 (ப)

சரணம் 2
ஸ்தி2ர சித்தமு வர சாமீகர பீட2மு ரகு4 நாத2 (ப)

சரணம் 3
ஸு-பத3 த்4யானமு க3ங்கா3 ஜலமௌரா ரகு4 நாத2 (ப)

சரணம் 4
இப4 பாலக அபி4மானமு ஸு14 சேலமு ரகு4 நாத2 (ப)

சரணம் 5
4ன கீர்தினி பல்கு வாஸன க3ந்த4மு ரகு4 நாத2 (ப)

சரணம் 6
ஹரி நாம ஸ்மரணமுலு 2விருலௌரா ரகு4 நாத2 (ப)

சரணம் 7
தொலி து3ஷ்க்ரு2த ப2லமெல்ல 3கு3க்3கு3லு தூ4பமு ரகு4 நாத2 (ப)

சரணம் 8
நீ பாத34க்தி4யே ப்ரொத்3து3 தீ3பம்ப3கு3 ரகு4 நாத2 (ப)

சரணம் 9
நே ஜேயு ஸு-பூஜா ப2லமு போ4ஜனமவு ரகு4 நாத2 (ப)

5சரணம் 10
எட3-பா3யனி நாயெட3 கல்கு3 ஸுக2மு விடெ3மௌரா ரகு4 நாத2 (ப)

5சரணம் 11
நின்னு ஜூசுடே க4ன தீ3பாராத4னமௌரா ரகு4 நாத2 (ப)

சரணம் 12
6பூஜா விதி4 நைஜ த்யாக3ராஜ க்ரு2தமு ரகு4 நாத2 (ப)


பொருள் - சுருக்கம்
இரகு நாதா! கரியைக் காத்தோனே!
காப்பாய்
1. இவ்வுடலே உனக்குகந்த இருப்பிடமாகுமய்யா;
2. திடச் சித்தமே உயர் பொற்றிருக்கையாகும்;
3. தூய திருவடித் தியானமே கங்கை நீராகுமய்யா;
4. (எனது) அபிமானமே உயர் ஆடைகளாம்;
5. மேன்மையான புகழுரைத்தலே மணக்கும் சந்தனமாம்;
6. அரி நாமங்களை நினைவு கூர்தலே மலர்களாகுமய்யா;
7. முன் தீவினைப்பயன்கள் யாவும் குங்குலியத் தூபமாக (புகையும்);
8. உனது திருவடிப் பற்றே தூண்டா விளக்காகும்;
9. நான் செய்யும் நல்வழிபாட்டுப் பயனே படையலாகும்;
11. இடைவிடா தென்னிடம் உண்டாகும் சுகமே வீடிகை யாகுமய்யா;
10. உன்னைக் காண்டலே சிறந்த விளக்காலாத்தியாகுமய்யா;
12. பூசை விதிகள் தியாகராசன் தான் கைக்கொண்டவை.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரிபாலய/ பரிபாலய/ பரிபாலய/ ரகு4 நாத2/
காப்பாய்/ காப்பாய்/ காப்பாய்/ இரகு நாதா/


சரணம் 1
தனுவே/ நீகு/-அனுவைன/ ஸத3னமு/-ஔரா/ ரகு4 நாத2/ (ப)
உடலே/ உனக்கு/ உகந்த/ இருப்பிடம்/ ஆகுமய்யா/ இரகு நாதா/


சரணம் 2
ஸ்தி2ர/ சித்தமு/ வர/ சாமீகர/ பீட2மு/ ரகு4 நாத2/ (ப)
திட/ சித்தமே/ உயர்/ பொன்/ இருக்கை/ இரகு நாதா/


சரணம் 3
ஸு-பத3/ த்4யானமு/ க3ங்கா3/ ஜலமு/-ஔரா/ ரகு4 நாத2/ (ப)
தூய/ திருவடி/ தியானமே/ கங்கை/ நீர்/ ஆகுமய்யா/ இரகு நாதா/


சரணம் 4
இப4/ பாலக/ அபி4மானமு/ ஸு14/ சேலமு/ ரகு4 நாத2/ (ப)
கரியை/ காத்தோனே/ அபிமானமே/ உயர்/ ஆடைகளாம்/ இரகு நாதா/


சரணம் 5
4ன/ கீர்தினி/ பல்கு/ வாஸன/ க3ந்த4மு/ ரகு4 நாத2/ (ப)
மேன்மையான/ புகழ்/ உரைத்தலே/ மணக்கும்/ சந்தனமாம்/ இரகு நாதா/


சரணம் 6
ஹரி/ நாம/ ஸ்மரணமுலு/ விருலு/-ஔரா/ ரகு4 நாத2/ (ப)
அரி/ நாமங்களை/ நினைவு கூர்தலே/ மலர்கள்/ ஆகுமய்யா/ இரகு நாதா/


சரணம் 7
தொலி/ து3ஷ்க்ரு2த/ ப2லமு/-எல்ல/ கு3க்3கு3லு/ தூ4பமு/ ரகு4 நாத2/ (ப)
முன்/ தீவினை/ பயன்கள்/ யாவும்/ குங்குலிய/ தூபமாக (புகையும்)/ இரகு நாதா/


சரணம் 8
நீ/ பாத3/ ப4க்தி/-ஏ ப்ரொத்3து3/ தீ3பம்பு3-அகு3/ ரகு4 நாத2/ (ப)
உனது/ திருவடி/ பற்றே/ தூண்டா/ விளக்காகும்/ இரகு நாதா/


சரணம் 9
நே/ ஜேயு/ ஸு-பூஜா/ ப2லமு/ போ4ஜனமு/-அவு/ ரகு4 நாத2/ (ப)
நான்/ செய்யும்/ நல்வழிபாட்டு/ பயனே/ படையல்/ ஆகும்/ இரகு நாதா/


சரணம் 10
எட3-பா3யனி/ நாயெட3/ கல்கு3/ ஸுக2மு/ விடெ3மு/-ஔரா/ ரகு4 நாத2/ (ப)
இடைவிடாது/ என்னிடம்/ உண்டாகும்/ சுகமே/ வீடிகை/ ஆகுமய்யா/ இரகு நாதா/


சரணம் 11
நின்னு/ ஜூசுடே/ க4ன/ தீ3ப/-ஆராத4னமு/-ஔரா/ ரகு4 நாத2/ (ப)
உன்னை/ காண்டலே/ சிறந்த/ விளக்கு/ ஆலாத்தி/ ஆகுமய்யா/ இரகு நாதா/


சரணம் 12
பூஜா/ விதி4/ நைஜ/ த்யாக3ராஜ/ க்ரு2தமு/ ரகு4 நாத2/ (ப)
பூசை/ விதிகள்/ தான்/ தியாகராசன்/ கைக்கொண்டவை/ இரகு நாதா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பல்லவி - சில புத்தகங்களில் பல்லவி இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
2 - விருலௌரா - விரு தாமர - பிற்கண்ட சொல் சரியெனத் தோன்றவில்லை
5 - சரணங்கள் 10, 11 - இவை முன்பின்னாக சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியெனத் தோன்றவில்லை
Top

மேற்கோள்கள்
3 - கு3க்3கு3லு தூ4பமு - குங்குலியம் - Gum or resin of Balsamodendron Mukul (bdellium) or Boswellia glabra (Watts); சாம்பிராணி எனப்படும் gum benzoin மற்றொரு தூபவகையாகும்.
4 - ஏ ப்ரொத்3து3 தீ3பம்பு3 - கோவில்களில் எவ்வமயமும் அணையாத தூண்டா விளக்கு
6 - பூஜா விதி4 - தியாகராஜர் இங்கு விவரித்துள்ளவை யாவும் மானஸ பூஜை எனப்படும். ஆதி சங்கரர் இயற்றிய சில நூல்களைக் காணவும். ஸி1வ மானஸ பூஜா; நிர்கு3ண மானஸ பூஜா - பொருள்; நிர்கு3ண மானஸ பூஜா - செய்யுள் மட்டும்
Top

விளக்கம்
இறைவனுக்கும், விருந்தினருக்கும் செய்யப்படும் பதினாறு விருந்தோம்பல் (உபசாரங்கள்) முறைகளில் சிலவற்றினை தியாகராஜர் இப்பாடலில் விவரித்துள்ளார். ஷோட3ஸோ1பசாரம் எனப்டும் 16 விருந்தோம்பல் முறைகள் (see Puja)
அபிமானம் - தனதெனப் பெருமைப் படல்
வீடிகை - தாம்பூலம்
ஆலாத்தி - நீராஞ்சனம்

Top



Updated on 03 Dec 2008

No comments: